(Reading time: 12 - 23 minutes)

சித்திரமே நில்லடி  - அன்னா ஸ்வீட்டி

லர்கள் கேட்டேன்  மந்திகள் தந்தனை

மந்திகள் மேய்த்தே மண்டை காய்ந்தனை

ம்….அத சொன்ன  பொண்ணு situationனே  தேவலை……(என்னது அதச் சொன்னது பொண்ணா…? அப்டின்லாம் கேட்டு sweetykku அருவா பார்சலுக்கு ஆர்டர் கொடுக்காம மேல கதையை கொஞ்சம் கவனமா படிங்க மக்களே)

chithirameஅந்த பொண்ணு எதையோ கேட்டதுக்கு எதையாவது  கொடுத்துருக்காங்களே அவங்க அவர்….நம்ம ஆளும் இருக்காரே……மௌன சாமியார்….நம்ம எதையாவது கேட்டா அவர் அதுக்கு காது கூட கொடுக்க மாட்டார். நொந்து கொண்டிருந்தாள் ஓவியா.

பேரண்ட்ஸ் பார்க்ற மாப்ளையத்தான் கல்யாணம் செய்யனும்னு இப்டி அரேஞ்ச்ட் மேரேஜுக்குள்ள வந்து மாட்னது என் தப்பு….

எதோ மேரேஜ் fix ஆனதும் ஒரு மூனு நாள் மாஞ்சு மாஞ்சு அவர் அம்மா அப்பா கல்யாணத்துல இருந்து இவர் பிறந்து பெரியாளான வரை எல்லா கதையும் சொன்னார். அதுல விழுந்தேன் நான்.

அவர் பேசுன ஸ்பீடைப் பார்த்து இனிமே நமக்கு கூட வீட்ல இருக்ற gabby ovi  பட்டம் காணாமப் போய்டும்னு ஏமாந்து போய் இந்த கல்யாணத்துல வந்து மாட்னேன்.

அதுக்கப்புறம் எப்ப “எதாவது பேசுங்களேன்பா” ன்னு கேட்டாலும்….அதான் என்னைப் பத்தி  எல்லாத்தையும் சொல்லிட்டனே….அப்டின்னு ஒரு answer….அதுக்கும் மேல எதாவது கேட்டா என் டைரீஸ்லாம் இருக்கே படிச்சுப்பாரு….உனக்கு மட்டும்தான் அதப் படிக்க உரிமைனு ஒரு லுக்….”என்னப்பா நீங்க” அப்டின்னு நாம மூனாவது கேள்வி கேட்கிறப்ப சார் தூங்கி இருப்பார்.

தினமும் நைட் 9 மணிக்கு வீட்டுக்கு வர்றது. நியூஸைப் பார்த்துட்டே சாப்ட வேண்டியது. சாப்ட்ட கைய கழுவிட்டு அப்டியே போய் பெட்ல விழுந்துட வேண்டியது. ஹால்ல இருந்த தட்டை எடுத்து நான் கிட்ச்சன் சிங்க்ல வச்சுட்டு வர்றதுக்குள்ள சார் நித்திரையில third heaven  தாண்டி இருப்பார்.

காலையில நான் எந்திரிச்சு கிட்சன் வேலை முடிச்சு வர்ற நேரம், நேத்து நான்  புக் செல்ஃப்ல அடுக்கி வச்ச books ஐ எல்லாம் திரும்பவும் டேபிள்ள பரத்திப் போட்டுட்டு, இவர் மட்டும் டிப் டாப்பா டை கட்டிட்டு இருப்பார்.

 பச்சப் புல்ல தட்டுல போட்டு கொடுத்தாலும் நிமிர்ந்து பார்க்காம சாப்டுட்டு வழக்கம் போல நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போவாரோன்னு எனக்கு ஒரு doubt ரொம்ப நாளா இருக்குது.

அவர் சாப்டுற ஸ்டைல் அப்டி…ஒன்றே face ஒருவகையே expression னு ஒரே facial எக்ஸ்ப்ரஷோனடதான் தினமும் சாப்டுவார். என்ட்ட பேசிட்டேன்னு கணக்கு செய்துக்றதுக்காக இந்த நல்லாருக்கு டயலாக் போல. ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்ற officeக்கு packed லன்ச் வேற.

திருப்பி 9 மணிக்கு வீடு, அதே நியூஸ்…அதே பெட், அதே குட் இல்லாத நைட்… சனிக் கிழமை இன்னும் மோசம்.

Half working day ந்னு பேரு சாயந்தரம் 5 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். அதுக்குப் பிறகு கண்டிப்பா ஒரு பார்க் விசிட் உண்டு. செடி பூன்னு இருட்ற வரைக்கும் பார்ப்பார்…என்ன பெரிய இருட்டுற வரை…அரை மணி நேரம் கிடைக்கும்…அதுக்குள்ள நான் 4000 சென்டன்ஸ் பேசிருப்பேன் அவர் 4 சென்டன்ஸ் சொல்லிருப்பார்….அதுவும் என்னதுங்கிறீங்க….”என்னப்பா எதுவுமே சொல்ல மாட்டேன்றீங்க…”அப்டின்னு நான் கேட்டுறுப்பேன்….அவர் I’m listening அப்டின்னு ரிப்ளை செய்துறுப்பார்… இதுவே நாலு தடவை repeat ஆகிருக்கும்…

அப்றம் இருட்டுனதும் ஒரு பென்ச்ல  உட்கார்ந்து ஐ பேட்ல பாட்டுக் கேட்பார் பாருங்க….நான் அந்த ஐப் பாட எதாவது பிச்சக்காரனுக்கு தூக்கிப் பிச்சப் போட்டுடலாமான்னு கூட நினச்சிருக்கேன்….இருந்தாலும் அது நான் அவருக்கு வாங்கி  கொடுத்த கிப்டுன்ற ஒரே காரணத்துக்காக அதை இன்னும் நான் எக்ஸிக்யூட் செய்யல….

ஆனா கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஒடிக்கிட்டு இருக்ற ப்ளனா நிச்சயமா எக்‌ஸ்சிக்யூட் செய்யப் போறேன்….இன்னைக்கு நாலு மணிக்கு flight. அம்மா வீட்டுக்கு போறேன்…திரும்பி வரவே மாட்டேன்…

அவர்ட்ட எப்பவும் பிசின்னு சொல்ற ஒரு மொபைல் இருக்குது…அந்த படாவதி மொபைலுக்கு கூப்டுறேன்…

50 தடவை ட்ரை செய்ததுக்குப் பிறகு லைனல்ல வாறார்.

“என்ன எதுவும் எமெர்ஜென்சியா?”

Labour pain ஆரம்பிக்கவும் கால் செய்தேன்னா, பிள்ளைக்கு எல் கே ஜி அட்மிஷன் போடுறதுக்குள்ள காலை பிக் அப் செய்துடுவார்னு தெரியுது…

“நான் எங்க அம்மா வீட்டுக்குப் பொறேன்…”

“ஓ  good….இன்னைக்கு இவ்னிங் ப்ளைட்ல டிக்கெட் புக் செய்துர்றேன்…டாக்ஸி வரும் கிளம்பி இரு…பை…”

போனை வைத்திருந்தார் அவர்.

அடப்பாவி….நான் எடுத்த முடிவு தப்பே இல்லை….

ம்மா வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாகிறது. பகலெல்லாம் பேச்சு சத்தம். வேற யாரு அம்மா, அதோட பக்கத்து வீட்டு அக்கா எல்லோரும் தான். ஆனா ரெண்டாவது நாள் நைட் அம்மா  “என்னடி கல்யாணமாகி முதல் தடவை வந்துருக்க அதுவும் மாப்ள கூட வராம தனியா” இந்த கேள்வியிலேயே எனக்குள்ள ஒரு முக்கிய பலூன்க்கு காத்துப் போய்ட்டு…. சீக்கிரமா வேலை தேடனும்…மனதிற்குள் தீர்மானித்துக்  கொள்கிறேன். மறு நாள் என் own அக்கா அத்தானோட வந்திருக்கா.

அன்னைக்கு ஈவ்னிங் என் மொபைல் ரிங் ஆகுது அக்கா கூட அரட்டை அடிச்சுகிட்டே கால் பண்றது யாருன்னு பார்க்காம கால் ஐ பிக் அப் செய்தாச்சு.

“ஓவியா…இந்த வீக்கெண்ட்ல உனக்கு ரிட்டென் டிக்கெட் புக் செய்திடவா?”

அட மௌன சாமியாருக்கு என் பேர்கூட வாய்ல வருத்துப்பா….

மொபைலை எடுத்துக் கொண்டு என் ரூம்குள்ள வந்துட்டேன்.

“ஹலோ…நான்லாம் அங்க வரல, திரும்பி வரதுக்கா இங்க வந்தேன்….வரவே மாட்டேன்…நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்….என்னால இத தாங்கவே முடியலை….இந்த 2000 s.ft வீட்டை க்ளீன் செய்து, நீங்க கலைக்ற புக்கை  அடுக்கி வச்சு, headless chicken மாதிரி காலைல அரைதூக்கத்தோடயே சமச்சு…..இதுக்குத்தான் நான் பிறந்ததேவா….எங்க அம்மா வீட்ல எப்டி இருந்தேன்…எப்பவும் அப்பா கூட அரட்டை, அம்மா கூட வம்பு, அக்கா கூட சண்டை….காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்…..அங்க உங்க கூட இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு பேசவே மறந்துடும் போல….

பகல்லலாம் இருக்ற pindrop silence   தாங்க முடியாம ஓன்னு கத்தலாம் போல இருக்குது… நான் திரும்பி வரவே மாட்டேன்” போனை வைத்துவிட்டார் சாமியார்.

தெரியும் எனக்கு. பெட்ல பக்கத்துல உட்காந்து நான் அழுதா கூட அசையாம தூங்குவாரே அவர். இதெல்லாம் ஒரு விஷயமா அவருக்கு. வேலைக்காரி சமையலுக்கு பயந்து என்ன கல்யாணம் செய்துருப்பார்…இப்ப வேலைக்காரி சாப்பாடே பெட்டர்னு தோணி இருக்கும்….அவ இவரை இப்டில்லாம் confront செய்ய மாட்டாளே….

அன்னைக்கு நைட் எதோ EB ப்ராப்ளம்….வீட்ல என் ரூம்  AC க்கு மட்டும் தான் கரெண்ட் வருது……அம்மா என்ட்ட சொல்றாங்க, நீ போய் அக்கா ரூம்ல படுத்துக்கோ…பெரிய மாப்ள வந்துருக்கார் பாரு, அவங்களுக்கு AC வேணும்….இன்னைக்கு உன் ரூம்ல அவங்க தங்கட்டும்…

அப்பன்னா மாப்ள இல்லாம வந்தா இதுதான் என் நிலமையா வீட்ல…? அத்தனை பலூனுக்கும் காத்து போயேவிட்டது என்னுள்.

அக்கா அம்மா கூட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கா…. எனக்கு யார் கூட போய் பேசவும் மூட் இல்லை….பழைய CDல்லாம் எடுத்து பாட்டு கேட்க ட்ரை செய்றேன்.

திடீர்னு அக்கா வந்து நின்னு காச் மூச்னு கத்றா…”.இதெல்லாம் நான் எவ்ளவு கஷ்ட பட்டு கலெக்ட் செய்தது…உன்னை யாரு இதெல்லாம் எடுக்கச் சொன்னது..” அவ எப்பவும் இப்டித்தான். அப்பா வாங்கின CDல்லாம் என்னதும்பா….நான் சொல்லித்தான் வாங்குனாங்க அதனால அது என்னது…தொடாத….உனக்கு handle செய்யவே தெரியலன்னு கத்துவா…..எனக்கு பாட்டு கேட்க அவ்ளவா பிடிக்காம போனதுக்கு முக்கிய காரணம் இது…

“அவட்ட ஏன் வம்புக்கு போற ஓவி….அவளுக்கு பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்னு உனக்கு தெரியும்ல” எப்பவும் சொல்ற டயலாக் தான். அம்மா அச்சு பிசகாம அவங்க டயலாக்க சொல்லியாச்சு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.