(Reading time: 25 - 49 minutes)

தூது செல்ல ஒரு தோழி  - அன்னா ஸ்வீட்டி

 Friends this is for fun, fun alone. லாஜிக்கெல்லாம் விட்டுட்டு ஜாலிக்கு படிக்க….

நீ ஆயிரம் சொல்லு என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது…..உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன் எனக்கு கல்யாணமே பிடிக்காது………எந்த காட்டுமிராண்டி சண்டியர்ட்ட மாட்டிகிடவும் நான் தயாரா இல்ல….” பல்லைக் கடித்தபடி சீறிக் கொண்டிருந்தாள் வினிதா.

“ஏன்டி வினி படுத்ற…..? வெளியருந்து மாப்ள பார்த்தா முன்னபின்ன தெரியாதவன எப்டி கல்யாணம்  பண்றதுன்னு கேட்கிற?” அவளது தோழி ஷார்விகா அவளுக்கு புரிவிக்க முயன்று கொண்டிருந்தாள்.

“ஆமா  இந்த மேல்சாவனிஸ்ட் உலகத்துல முழுக்க முழுக்க ஒரே காட்டுமிராண்டீஸ், விருமாண்டீஸ் அண்ட் சண்டியர்ஸ் தான்….இதுல எவன நம்ப?”

Thoothu sella oru thozhi“சரி…..உன் கண் முன்னால வளந்த உன் அத்தை பையன பார்க்கலாம்னா…..

“சீ சீ கூட வளந்தவன்…. அண்ணன் மாதிரி….அவனப் போய்….அறிவிருக்கா ஷார்ன்ஸ் உனக்கு…? எத்தன தடவ சொல்லிருக்கேன் …. பேச்சுக்கு கூட அவன இப்டி சொல்லாதன்னு…அவன்னு இல்ல சின்ன வயசுல இருந்து தெரிஞ்ச யாருமே வேண்டாம்….அதெப்டி இப்ப வரைக்கும் நாம அவன ஒரு ப்ரதர்லி ஃபிகாரா பார்த்ருப்போம்…அப்றம் திடீர்னு….”

“அப்டின்னு கட்டாயம் இல்லையேப்பா…”

“அப்டின்னா 6 வயசுலருந்து லவ் பண்றோம்னு சொல்லனுமா…..அப்டில்லாம் எவனாவது சொன்னா எனக்கு தூக்கிப் போட்டு மிதிக்கலாம் போல தோணும்…”

“அப்ப பேசாம லவ் மேரேஜ் பண்ணிக்கோ…”

“சீ…….முதல்ல அபத்தமா பேசுறத நிறுத்து…”

“அப்றம் அங்கிள் ஆன்டி என்னதான் பண்ணுவாங்க…இப்டிதான் இழுத்து பிடிச்சு கல்யாணம் செய்வாங்க……”

“ஆன்…பண்ணுவாங்க பண்ணுவாங்க….அதையும் தான் பார்ப்போம்….மாப்ளைனு வந்திருக்க மாங்கா மடையனை மண்டைய உடச்சு அனுப்றேன்…அப்றம் பார்ப்போம் எப்டி நடக்குது இந்த கல்யாணம்னு…?”

இவள் சத்தம் இப்பொழுது பல மடங்கு உயர்ந்திருக்க

“கத்தாதடி வினி குரங்கு….மாப்ள வீட்டு காரங்க காதுல விழுந்துடப் போகுது….” அதட்டினாள்  ஷார்விகா.

“இது காதுல விழுந்து இப்டியே எந்திரிச்சு ஓடிட்டான்னா வந்திருக்கவன் கொடுத்து வச்சவன் …. இல்லனா….”

உறுமிக் கொண்டிருந்த வினிதாவின் சத்தம் சட்டென சடன் பிரேக் அடித்து ஸ்டாப்ட்.

 காரணம் என்னவாய் இருக்கும் என காணும் முன்னே புரிந்து போனது ஷார்விக்கு.

வினிதாவின் அப்பா ராஜநாதன் இவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார். அவருக்கும் முன் நுழைந்த அவரது பெர்ஃப்யூம் வாசத்தை வைத்தே நம்ம வினிதா கப்சிப்..

வினிதாவின் தலையிலிருந்த முல்லைப் பூவை சீர் செய்து கொண்டிருந்த ஷார்வி கையில் எட்டாமல் போனது கல்யாணப் பொண்ணு தலை. பின்ன பொண்ணு அவ்ளவு தூரம் அடக்க ஒடுக்கமா தலையை குனிந்திருந்ததே.

இதுக்குத்தான் மவளே இத்தன சீனா…மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் ஷார்ன்ஸ்.

“வினிமா அங்க வந்து எல்லோருக்கும்  காஃபிய கொடுத்துட்டு திரும்பி வந்துடு…அது போதும்….” சொல்லியபடி வினிதாவின் அம்மா பொற்கொடி மகளின் கையில் அந்த காஃபி கோப்பைகள் அடங்கிய ட்ரேயைக் கொடுக்க  அம்மாவை ஓரப்பார்வையில் ஒரு முறை.

அம்மாவின் முகத்தில் சிறு புன்னகை. இன்னும் புஸ் புஸ் என ஏறியது கோபம் வினிதாவிற்கு.

அப்பா இவளுக்கு முன்பாக சென்று விட

மெல்ல  வரவேற்பறைக்குள் நுழைந்தாள் வினிதா. குனிந்த தலையின் மறைவில் கண்ணை மட்டும் உருட்டி அறையை ஒரு லுக். ஆட்கள் கூட்டம் அதிகம்.

பல்லைக் கடித்தாள் பெண். பொண்னு பாக்க இத்தனை கூட்டத்தை கூட்டனுமா….?

மெல்ல ஒவ்வொருவருக்காய் குனிந்து ட்ரேயை நீட்டியபடி நகர்ந்தாள்.

அந்த கைகள் மட்டும் காஃபிக் கப்பை எடுக்க வெகு நிதானமாக எழும்ப, ‘தூங்கி எந்திரிச்சி பெட் காஃபி குடிக்க இங்க வந்துட்டான்போல இந்த ஸ்லோமோஷன் பார்ட்டி…’ மனதிற்குள்  திட்டியபடி அரை இன்ச் தலையை உயர்த்தி ஒரு ஆசிட் பார்வை பார்க்கலாமா என இவள் நினைத்த நேரம் அவன் கையிலிருந்த மோதிரம் கருத்தில் பட்டது. N.

மாப்பிள்ளை பெயர் எதோ Nல் ஆரம்பித்ததாக நியாபகம். நிர்விகன்.

 டக்கென குனிந்து கொண்டது தலை. வெட்கத்தாலன்னு நினச்சு ஏமாந்துடாதீங்க…ப்ளாட் பண்ணும் நேரம் இது.

 ‘இவன் தானா அவன்….?? சாட்சியோட சைட் அடிக்க வந்தவன். இவன என்ன செய்யலாம்…? எதாவது செய்யனுமே…பழி வாங்கியே தீரனுமே….இவன் காலை ஓங்கி ஒரு மிதி….???’ அவசர ஆலோசனை மனம்.

 இப்பொழுது கண்ணுக்கு பட்டது அவனது அந்த இருகால்கள். பெடிக்க்யூர் செய்திருந்த இவள் கால்களைவிடவும் கூட பளிச்சென….

 ‘சரி சரி கால மிதிக்க வேண்டாம்….அடுத்தவங்க கண்ல விழுந்தாலும் விழுந்து தொலச்சுடும்…அதோட நம்ம கால்ல ஹீல்ஸ் இல்லாம  மிதிக்றது வேஸ்ட் ஒரு பக்க மனது முடிவு செய்ய

அப்ப என்னடி செய்யப் போற வினி? அவனை அப்டியேவா விடப் போற? அடுத்த பக்க மனது  அழுது வடிந்தது.

ஹான் ஐடியா வந்துடுச்சு ஆசையில் நான் ஜாலி ஜாலி…..கையில ஹாட்டு காஃபி…பையன் நீ காலி காலி…. புது ஐடியா பொண்ணுக்கு கிடைக்க

 ‘கொடுக்றப்ப கை தவறிட்ட மாதிரி சீனப் போட்டு அவன் மேல காஃபிய கொட்டி கவுத்துடலாம்…3 நாளைக்காவது எரியும்…..’

ப்ளான் போட்டு காஃபி கப்பை இவள் எடுக்க, அவள் நினைவு புரிந்ததோ இவள் எடுத்து நீட்டும் முன் காஃபிகப்புடன் சேர்த்து இவள் கையையும் பிடித்துவிட்டான் அவன்.

அத்தனை திட்டமும் மறக்க அன்னிச்சையாய் கை தன்னை உருவிக் கொள்ள அவனைப் பார்த்து தீ பறக்கும் ஒரு பார்வை. அவன் இவளைப் பார்த்து சின்னதாய் கண்சிமிட்டினான். சத்யமா அதுல இருந்தது காதல்  கிடையாது. யார்ட்ட உன் வேலையக் காமிக்ற என்றவிதமான லுக் அது.

என்ட்டயேவா என இவள் மனதிற்குள் கருவினாலும்

எதோ ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. ‘ எனக்கு அவனைப் பிடிக்கலைனு அவனுக்கு தெரியுது…… அப்ப அவனே கல்யாணத்தை நிறுத்திருவான். ஆனா பொண்ணு பார்க்க ஏன் வந்தான்?’

அடுத்திருந்தவர்களுக்கு இவள் காஃபி கொடுத்துக் கொண்டிருக்கும்போதே யாரோ கேட்டார் “என்னப்பா பொண்ண பிடிச்சிருக்கா? தட்டு மாத்திடலாமா?”

 நிச்சயமாய் இப்படி ஒரு ஓபன் அட்டாக்கை இவள் எதிர்பார்த்திருக்கவில்லை. போய் தகவல் சொல்றோம்ன்னு சொல்லிட்டு போறது  தான முறை.

இத்தனை பேர் முன்னால பொண்ணை பிடிக்கலைனு சொல்ல அவனுக்கு முடியுமா?..... அப்டி அவன் சொல்லிட்டாலும் அப்பாவால அதை தாங்க முடியுமா?

அரண்டு போய் அவசரமாக நிமிர்ந்தவள் கண்ணில் பட்டது அப்பா முகம். இந்த கல்யாணம் நடந்தே தீரும் என அவர் அறிவித்திருந்தார், அவரை எதிர்த்துப் பேசும் மனமெல்லாம் இவளுக்கு இல்லை. என்ன செய்யவும் தோன்றாமல் இவள் மிரள,

“எனக்குப் பொண்ணுட்ட பேசனும்” அந்த நிர்விக்தான் உதவிக்கு வந்தான்.

‘ஹப்பா எப்டியும் இந்த counteract காட்டுமிராண்டிட்ட சொல்லி கல்யாணத்த நிறுத்திடலாம்….’ நினைத்தபடி தனது அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள்.

“அண்ணாவ திட்றப்ப கொஞ்சம் அமைதியா திட்டு….” என்ற படி எழுந்து போன ஷார்விகாவின் அவனுக்கான “ஆல் த பெஸ்ட்” காதில் கேட்க அட்டாமிக் அட்டாக்கிற்கு தயாரானாள் இவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.