(Reading time: 7 - 14 minutes)

மறுபடியும் - சித்ரா

ன்றோடு முடிந்தது என் செல்ல குட்டி அஞ்சலியை மண்ணில் இறக்கி பதினாறு நாட்கள் ,எங்கள் இருவருடைய அப்பா அம்மா தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை, வீடு நிறைய இருந்த அவள் படங்கள் அகற்றபட்டு எங்கள் மனம் போல் வீடும் வெறுமையாய் இருந்தது, கைகளை பிடித்துக்கொண்டு என்ன வேணும்னாலும் கால் பண்ணுடா என்ற நண்பனிடம் என் மகள்தான் வேண்டும் என்று கதற நினைத்த மனதை அடக்கி ,கண்களால் விடை கொடுத்தேன்,

ஷ்யாம் நாங்களும் கிளம்பறோம்டா என்றபடி கிளம்பிய அப்பா அம்மாவையும் நான் தடுக்கவில்லை,இது நான் மட்டுமே சுமக்க வேண்டிய ரணம் காலத்துக்கும்,

மேலும் ஒரு வாரம் இருந்த மாமா மாமியும் கிளம்ப, வாழ்க்கை எங்கள் இருவருக்கும் தொடங்கிய இடத்தில் வந்து நின்றது, மகிழ்ச்சியும் ,குதுாகலம் மட்டும் இல்லாமல்.

Marupadiyumங்களுடையது , பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாணம்தான், நான் ஒரு டெபுடேஷன் விஷயமாக சிகாகோவில் இருந்ததால், என் சார்பில் என் அக்கா பார்த்து பிடித்துப்போனவள்தான் லாவண்யா, நான் பார்க்க என்று அவள் அனுப்பிய போட்டோவில் ஒரு ஆள் உயரமுள்ள ஒரு க்ரேடான் நாய் பக்கத்தில் அவள் மண்டியிட்டு அதன் கழுத்தை கைகளால் வளைத்திருந்தாள்.

இதில் யாரை நான் செலக்ட் செய்ய என பதில் அனுப்புவோமா என்று யோசித்துவிட்டு முதல் அடியே தப்பாக போய்விடும் என ,நாய் அழகாக இருக்கிறது என்று சுருக்கமாக அனுப்பினேன்.

மறுநாள் என் நாய் ஸ்காட்ச் சை(ஆமாம் அப்படித்தான் அதற்கு பெயர் வைத்திருந்தாள் ) எங்க உங்களூக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்று பயமாக இருந்தது நன்றி என ஒரு ஸ்மிலேயுடன் அனுப்பினாள் .அன்று தொடங்கிய எங்கள் பந்தம் இனிமையாகவே போனது . ஆறு மாதம் கழித்து நான் இந்தியா திரும்பிய பின் ஒரு சுப தினத்தில் எங்கள் திருமணம் இனிதே நடந்தது.

இருவரின் பெற்றோர்களும் சென்னையில் இருத்த போதும் எங்களை நாங்கள் இருவரும் வேலை பார்க்கும் ஐடி வளாகத்தின் அருகே ஒரு கெடெட் கம்முனிட்டி வீட்டில் குடி வைத்தனர்.

வெகு சீக்கிரம் அங்கு இருக்கும் அனைவரையும் தன் வளையத்தில் இழுத்தாள் லாவண்யா , பொதுவாக அங்கே நான் லாவண்யாவின் கணவன் என்றே அறியப்பட்டேன் ,கிட்ஸ் ப்ளே ஏரியா கடக்கும் போது கட்டாயம் இரண்டு ஹாய் அக்கா வரும் . அத்தைனையும் தன் புன்னகையால் சாதித்தவள் தான் இன்று வதங்கி கிடக்கிறாள் .

ழுந்து சென்று படுக்கையில் சுருண்டு கிடக்கும் அவளை தாண்டி சென்று முகம் கழுவி வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தோள் தொட்டு திருப்பினேன் அல்ல திருப்ப பார்த்தேன் ,வேகமாக என் கைகளை தட்டி விட்டு எனக்கு பசிக்கலை என்றாள் ,எனக்கும் தான் ,அழ கூட தெம்பு வேணும் வா என்றேன் பிடிவாதமாய் ,அதற்கு மேல் மறுக்காமல் எழுந்து வந்து ஏதோ கொஞ்சம் கொறித்து விட்டு சென்றாள் .நன் மிச்சம் மீதியை பிரிட்சில் அடைத்து திரும்பினால் மறுபடியும் ஓர் ஓரமாய் சுருண்டு கிடந்தாள் . அவளுக்கு ஒரு ச்லேபிங் தப்ளேட் குடுப்போமா என்று யோசித்து சரி இன்று பார்த்துவிட்டு குடுக்கலாம் என்று நினைத்தேன் , அதற்கு காரணம் இத்தனை நாளாய் அவள் ராத்திரி தூங்கவில்லை என்று எனக்கு தெரியும், ஆனால் பக்கத்தில் அவள் அம்மா இருந்ததால் எதோ ஒரு ஆறுதல் இருந்திருக்கும் ,இப்போ நாங்கள் மட்டுமே ,யார் யாரை சமாதான படுத்த ...

எப்போ தூங்கினேன் என்று தெரியாமல் ஏதோ கொஞ்சம் தூங்கி எழுந்தால் விடிந்திருந்தது , ஆனால் கண்களில் பயங்கர எரிச்சல் ,அவளை தேடி கிட்செனுக்கு போனால் அங்கு அவள் இல்லை ,சரி இரண்டு கப்பில் காபி கலந்து ஹாலுக்கு எடுத்து வந்தால் அங்கும் அவள் இல்லை ,மெல்ல இன்னொரு பெட்ரூமில் தலை நீட்ட வெறும் தரையில் படுத்து கிடந்தாள்.அவசரமாய் அவள் அருகே சென்று அமர்ந்து மெல்ல லாவி எந்திரி என்ன வெறும் தரையில் சளி பிடிசிக்க போற என்ற போதே எனக்கு சுருக்கென்ரது ,எங்கள் செல்ல மகளுக்கு சளியில் தான் ஆரம்பித்தது வினை, வெறும் சளி இழுப்பில் கொண்டு விட்டது, டாக்டர் நெஞ்சி கபம் போக்க மருந்தும் , நேபுளைசரும் குடுக்க, இருந்தும் முன்னேற்றம் இல்லை, பின் அட்மிட் பண்ணி இருபத்திநாலுமணி நேரமும் அவர்கள் கேரில் இருந்தும் பலன் இல்லை, இரண்டு முறை அச்பிரேட் பண்ணி நீர் எடுத்தார்கள் , எதுவும் பலன் தராமல் அவள் போய் சேர்ந்தாள் 

ஒரு குழந்தையை பெற்ற நொடியில் இருந்து நம் கவனம் அதன் ஒவ்வொரு அசைவில் தான் இருக்கும் , அதை ஞாபக படுத்த எதுவும் தேவை இல்லை என்ற போதும் , இது போன்ற அசாதாரண நேரத்தில், சில வார்த்தைகள் ரனத்தை கிளறுவது போல் ஆகும், ஆனால் நான் பயந்த படி அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை , .

அன்றும் பின் வந்த ஒரு வாரமும் அவள் அப்படி தான் இருந்தாள் , ஒரு வார்த்தை பேசவில்லை, சமையல் செய்ய ஆள் இருந்தபடியால் அது பாட்டுக்கு நடந்தது , அதையும் ஒரு பிடி அவளை உண்ண வைக்க பெரும் பாடானது, இதற்கிடையில் எனக்கு குடுகப்பட்டிருந்த லீவ் முடிந்ததால் நான் நாளையிலிருந்து ஆபீஸ் செல்ல வேண்டும்.

இவளை இப்படி விட்டு எப்படி செல்ல, யோசித்து சமையல் மாமியை காலை எட்டு முதல் நான் வரும் வரை வந்து இங்கே இருக்க சொன்னேன்.

அவள் சேப்பிடிக்கு மட்டுமே அது உதவியது, அவள் மன இறுக்கம் குறையவில்லை,நான் கவலையுடன் மாமியை விசாரிக்க , ஆளாளுக்கு துக்கத்தை வெளிபடுத்தும் விதம் மாறும், புலம்பி தீர்ப்பர் சிலர் , இவளை போல் ஊமையாய் அழுவதும் உண்டு, பெத்த குடல் இல்லியாப்பா , காலம் தான் ஆத்தனும் வேதனையை என்றார்,

ஆனால் எனக்கு இதை இப்படியே விட முடியவில்லை, அவள் என்னையும் சேர்த்து ஒதுக்குவது தாள முடியவில்லை . ஒரு நாள் இரவு தனிமையில் அதை மெல்ல அவளிடம் கேட்க அதற்கும் ஒரு வெற்று பார்வைதான் பதிலாய் கிடைத்தது, மகளுடன் சேர்ந்து மனைவியையும் இழந்தது போல் ஆனது .

இன்னொரு சண்டே வா கீழே போய் பார்க்கில் உட்கார்ந்து வரலாம் என்றதற்கு , முதல் முறையாய் வாய் திறந்து அஞ்சலி இல்லாமல் நான் எங்கும் வரமாட்டேன் என்றாள் 

நான் மெல்ல உனக்கு கொஞ்சம் மாற்றம் தேவை மா , வீட்ல அடைந்து கிடைக்காதே ,நீ சொல்லு ஒரு இடம் போவோம் என்றேன்.

நீங்க எங்க வேணா போங்க நான் தடுக்கலை , அதே மாதரி நான் வரமாட்டேன் என்னை ஃபார்ஸ் பண்ணாதிங்க என்றாள் .

நான் மறுபடியும் அப்படி இல்ல இது எனக்காக சொல்லல என்று அவள் கையை பிடிக்க போன போது தான் விருட்டென்று எழுந்து எனக்கு என்ன வேணுமோ நான் பார்த்துகிறேன் , நீங்க போலாம் என்றாள் ,அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது எனக்கு நன்றாக புரிந்த எரிச்சலில் சட்டென்று அவள் எனக்கும் மகள்தான் மறந்துடாதே என்றவுடன் , சட் டென கண்ணில் நீர் கோர்க்க எனக்கு ஞாபகம் இருக்கு ,மறக்க முடியலையே என்றபடியே ஓடியவளை செய்வதறியாது பார்த்து நின்றேன் .

அதன் பின் வந்த நாட்களில் நானுமே அவளிடம் பேசவில்லை ,என் விரல் நகம் கூட அவள் மேல் படாமல் பார்த்துக்கொண்டேன் . ஆனால் அது அவளை பாதிக்க வில்லை .

மெல்ல மாமி வருவதும் முடியாமல் போக அவள் பகல் பொழுதுகளில் என்ன செய்கிறாள் என்றே தெரியாமல் போனது.

தற்கு இடையில் ஒரு நாள் அவள் அக்காவிடம் இருந்து போன் வந்தது ,அவசரமாய் அவங்க ஓர்படி பெண்ணுக்கு பிரசவத்தில் உதவ அவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டி வந்ததால் அவர் மகன் ஹரியை இங்கு ஒரு மாதம் போல் விட்டு செல்லலாமா என கேட்க , லாவண்யா அதற்கு ஒத்துக் கொண்டாள் .இரண்டு நாள் கழித்து எட்டு வயது ஹரி வந்து சேர்ந்தான்,

அதன் பின்னே லாவண்யா விடம் மாற்றம் தெரிந்தது , மெல்ல அவனின் தேவைகளை கவனிக்க , அவனுக்கு சாப்பாடு பரிமாற , என்று சின்ன சின்ன மாற்றங்கள் தெரிந்தது , இருந்தும் அவ்வப்போது அவள் தனியே தன் உலகத்தில் இருப்பது தொடர்ந்தது.

ஒரு நாள் ஹரி குளிக்க சென்றிருந்தான் ,அந்த வயதுக்கே உண்டான கூச்சத்துடன் அவன் ரூம் கதவை சேர்த்து லாக் செய்து தான் குளிப்பான் ,அன்று ஏதோ போதாத காலம் அவன் பாத்ரூம் கதவை சாத்தும்போது வெளி பக்கம் இருந்த தாழ் சற்று நகர ,அவன் உள்ளே மாட்டிக்கொண்டான் ,கதவை தட்டி சித்தியையும் அழைத்த அவன் குரல் கேட்காத நிலையில் சித்தி இருந்தாள் .

அப்போ தான் உள்ளே நுழைந்த நான் நொடியில் நிலைமை புரிய , ரூம் கதவு தாழ்பாளை அடியோடு கழட்ட ,அப்போதான் அதை உணர்த்த லாவண்யா ஓடி சென்று வெண்டிலேடர் பக்கம் நின்று அவனுக்கு தைரியம் சொன்னாள் . ஒரு வழியாய் ரூம் திறந்து பாத்ரூம் தாள் நீக்க ஓடி வந்தவன் என்னை இடுப்போடு கட்டிக் கொண்டான் ,சித்தப்பா சித்தி கவனிக்கல எனக்கு பயமாய் போய்விட்டது என்றதை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தவள் , ஒரு கணம் அதிர்ந்து நின்றாள் , பின் ஓடி வந்து அவனை அள்ளிக் கொண்டாள் , நான் இனி அப்படி இருக்க மாட்டேன் என திரும்ப திரும்ப கூறும் சித்தியை அவன் புரியாமல் பார்க்க எனக்கு புரிந்தது.

மேலும் நான்கு நாட்கள் கழிந்த பின் தோ இப்போதான் அவனை நாங்கள் இருவரும் சேர்ந்து சென்று அவன் அப்பாவுடன் ரயில் ஏத்தி விட்டு விட்டு வருகிறோம் .கதவின் சாவியை பொருத்தி த்ருப்பினால் திறக்கவில்லை நான் திறக்க கை வைத்தபோது அவள் கை மேல் கவிந்தது ,அவளை நான் ஏறிட்டு பார்க்க , அவள் தன் கையை எடுக்காமல் வெகு நாட்களுக்கு பிறகு என்னை பார்த்து லேசாக சிரித்தாள்.

அப்பாடி இதற்கு தானே நான் இத்தனை நாளாக போராடியது, அதை சுலபமாய் அந்த சிறுவன் சாதித்திருந்தான்.தேங்க்ஸ் ஹரி, மறுபடியும் என் வாழ்வில் வசந்தத்தை வரவேற்க குனிந்து என் மனைவியை கைகளில் அள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.