(Reading time: 6 - 12 minutes)

நேற்று இல்லாத மாற்றம் என்னது  - ஷரோன்

ன்னங்க அந்த சீர்க் கொண்டுப்போற தட்டை ரெடி பண்ணீங்களா? ”  என்று கேட்டப்படி அங்கும் இங்குமாய் பரபரத்துக்கொண்டிருந்தார் ரேவதி.

“ இதோ, இப்ப தான் எடுத்து வச்சேன்மா “ என்று அவருடன் நடந்தப்படியே பதிலளித்தார் ரேவதியின் அன்பு கணவர், மோகன்.

“ என்னங்க ப்ரிட்ஜ்ல இருந்த பூச்சரத்தை எடுத்து வச்சீங்களா? “ மீண்டும் ஒரு பரபரப்புடன்.

netru ilatha matram“ எடுத்தாச்சு எடுத்தாச்சு “ என்று புன்னகைத்தார் மோகன்.

அடுத்த முறை “என்னங்க.... “ என்று தொடங்கிய ரேவதியைத் தன் புறம் திருப்பியவர், “ என்ன ரே?.. எதுக்கு இவ்வளவு பரபரப்பு, டென்ஷனெல்லாம்? ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே நில்லு பாப்போம். கொஞ்சமா சிரி பாப்போம் “

அவரின் கனிவான முகத்தைப் பார்த்ததும் சற்று அமைதியடைந்த ரேவதி, ஒரு பரவசத்துடன் “ அதில்ல மோகன், இந்த சிவா பையன் இப்போ தான் இறங்கி வந்திருக்கான். எப்படியாவது இந்த இடமே செட் ஆகனும்னு ஒரு ஆசை. அதான் டென்ஷன் “

“அவ்ளோ தான! அதான் உன் அன்பு மகன், பொண்ணு ப்போட்டோவைப் பாத்துட்டு ஓகே சொல்லிட்டானே. பொண்ணு வீட்டுலையும் எல்லாம் ஓகேனு தானே சொல்லியிருக்காங்க. சோ, போய் பார்த்து பேசிட்டு, பூ வைச்சுட்டு வரப்போறோம். கூடவே உன் ஆசை மகன் சத்யா வேற லண்டன்லயிருந்து எம்பி எம்பி ஒரு வழியா எம்.பி.ஏ படிச்சுட்டு இன்னைக்கு தான் வந்திருக்கான். இப்போ நீ ரொம்ப சந்தோஷமாயிருக்கனும் ரே.. “

அவரின் பேச்சைக் கேட்ட ரேவதியின் முகம் மலர்ந்தது. மனம் நிறைந்த ஒரு பார்வையுடன் “ தேங் யூ சோ மச், மை ஸ்வீட் மோகன் “ என்றவர் ஏதேச்சையாக கடிகாரத்தைப் பார்த்தார்,

“ மணி நாலரை, அஞ்சு மணிக்கு அங்க இருப்போம்னு சொல்லியிருக்கோம். இந்த பைய ரெடி ஆனானா? இல்லையா?.. டேய் சிவ்வ்வ்... “

‘சிவா’ என்று சொல்லி முடிப்பதற்க்குள்ளாகவே பிரசன்னமானான் சிவா.

“ ஹாய் மம்ஸ்!!... என்ன கிளம்பிடீங்ளா? லேட் ஆகுது பாருங்க. எல்லாம் ரெடியா? “ என்று ஆவலாக கேட்டவனைப் பார்த்த ரேவதியும் மோகனும் சிரித்துவிட, அசடு வழிந்தவாறே “ என்னாச்சு? “ என்றான்.

“ ஒன்னுமே இல்லடா. உன் ஆர்வத்தை நாங்க கவனிக்கவே இல்ல “ என்றார் தந்தை நக்கலாக.

தாயோ, “ ஆமா சிவா. உன் கேள்விக்குப் பதிலையும் சொல்லிடுறேன். எல்லாம் ரெடி. நாங்களும் ரெடி. உன்னைப் பார்த்தால், எப்பவோ ரெடி போல தான் தெரியுது. இன்னும் உன் தம்பிய தான் காணோம் “ என்றுக் கூறி, மாடியில் இருந்த சத்யாவை அழைக்கலானார்.

“ சத்யா.. டேய் சத்யா.. கீழே இறங்கி வாடா.. லேட் ஆகுது பாரு.. சத்யா..”

அவனிடம் இருந்து பதிலேதும் இல்லை. மாடி ஏற முற்பட்ட அம்மாவை நிறுத்தி, “ ஒரு நிமிஷம் மா, இப்போ வருவான் பாருங்க “ என்று செல் போனை எடுத்து Whatsapp–யில் மெசேஜ் டைப் செய்தான்.

“ தம்பி டேய், மவனே நீ இன்னும் ரெண்டு நிமிஷத்துல கீழ வரல, அவ்ளோதான். நீ காலி, சொல்லிடேன். வாடா சீக்கிரம் “

அடுத்த நொடி ரிப்ளை, “ இதோடா அண்ணா.. “

சத்யா இறங்கி வர, அவன் தலையில் ஒரு தட்டு தட்டி அழைத்துச் சென்றான் சிவா. குறித்த நேரத்தில் பெண் வீட்டை அடைந்தனர்.

பெண்ணின் பெற்றோராகிய ஸ்ரீதரும் ரஞ்சனியும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்க, இரு தரப்பு நல விசாரிப்புகள் முடிந்தது.

“ அண்ணா, பொண்ணைக் கண்ணுல காட்டுங்கண்ணா.. “ என்றார் ரேவதி பேராவலுடன்.

அழகான மெரூன் நிற பட்டுப்புடவையில், மயக்கும் புன்னகையுடன் அப்சரஸாக வந்தாள் திலோத்தமா. நாணத்துடன் மண் பார்த்து அவளிருக்க, அவளையே பார்த்திருந்தான் சிவா.

“ வா மா. வந்து இங்க உட்காருமா “ என்று வாஞ்சையுடன் அவளைத் தன் அருகில் அமர்த்திக்கொண்டார் ரேவதி.

அமர்ந்தவள், மெல்ல விழியுயர்த்தி அவனைப் பார்க்க, இமைக்க மறந்திருந்தான் சிவா. நாணத்தால் தலை குனிந்தவள் இதழின் புன்னகை மேலும் விரிந்தது.

“ என்ன மாப்ள, பொண்ண பிடிச்சிருக்கா? “ என்று சம்பிரதாயத்திற்காக கேட்க, அவன் பதில் சொல்லும் முன் அலறியது அவன் மொபைல்.

அழைத்தது ‘சத்யா’.

வீட்டினுள் வந்தமர்ந்ததும், “ ஒரு important call, பேசிட்டு வரேன் “ என்று எழுந்து சென்ற சத்யாவுக்கு, சிறு முறைப்பை பதிலாக தந்தார் மோகன்.இதை யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வெளியேறியதும் அதை மறந்தும் போயிருந்தனர்.

‘ இவன் ஏன் இப்போ கூப்டுறான்?’ என்று புரியாமல் குழம்பிய சிவா அழைப்பைத் துண்டித்தான். உடனே சத்யாவிடம் இருந்து மெசேஜ்,

“ அண்ணா, இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்ணா “

‘என்னவோ’ என்று குழம்பியவன், “ ஒரு நிமிஷம் மாமா, நீங்க பேசிகிட்டு இருங்க” என்று அவனும் வெளியேறினான்.

வீட்டின் முகப்பிலிருந்த தோட்டத்தில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான் சத்யா. சிவாவைப் பார்த்ததும் ஓடி அவனிடம் வந்து, “ அண்ணா, ப்ளீஸ்ணா, இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்ணா.. இந்த பொண்ணு உனக்கு வேண்டாம்ணா.. சொன்னா கேளு. உன் நல்லதுக்கு தான் சொல்றேன் “ என்றான்.

“ என்னடா பேசுற? தில்.. இந்த பொண்ணை உனக்கு முன்னாடியே தெரியுமா என்ன? “ என்று கேட்டான் சிவா தவிப்புடன்.

“ தெரியுமாவா? அவ என் கிலாஸ்மேட், ஸ்கூல்ல “

காற்றாகி போன குரலில், “ அதுக்கு இப்போ என்னடா? “ என்றான் சிவா. ‘என்ன சொல்லி தொலைய போறானோ’ என்றிருந்தது அவனுக்கு.

“ அண்ணா, இந்த திலோ தான் என் கிலாஸ் ரெப்ரஸண்டேடிவ், சிக்ஸ்த் வரை. சரியான் பஜாரி. அடி பின்னி எடுப்பா. அவ கிட்ட அடிகடி மாட்டுற எலி நான் தான். சாமி.. சின்னதுல நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அழறதே இவளுக்கு பயந்துதான். அறந்த வாலு. ரௌடி கணக்கா நாலு பொண்ணுங்க கூட சேர்ந்து எல்லா பிரேக்லயும் விளையாடுவா. யாரையும் எந்த வேலையும் செய்யவும் விடமாட்டா. அவ எந்த சைடுல வந்தாலும் நான் ஆப்போஸிட் சைடுல ஓடிடுவேன். நானே ஸ்கூல் மாறலாம்னு இருந்தேன். ருத்ர மாதேவி அவளே மாறிட்டா. அதனால் தப்பிச்சேன். அதான் நான் சொல்றேன்ணா. நீ வேற கொஞ்சம் soft டைப். அவ்ளோ அடி எல்லாம் தாங்குவியா? இப்போ உள்ள வந்து ப்போட்டோல தான் பாத்தேன் திலோனு. மரியாதையா சொல்றேன் கேளு. இப்டியே ஓடிடலாம். ஓ.கே வா? “ என்றான் தம்பி.

போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது சிவாவிற்கு. முகத்தை பயங்கர பாவமாக வைத்து, “ போலாமா அண்ணா? “ என்றவனைக் கண்டு வாய் விட்டு சிரித்தான் சிவா.

“ உன் நல்லதுக்கு சொன்னா, சிரிக்குறீயா??? “

சிரிப்பை நிறுத்த முடியாமல், “ இல்ல தம்பி, நீ ரொம்ப லேட். இனி ஆண்டவனல கூட உன் அண்ணாவ காப்பாத்த முடியாது டா” என்றான்.

“ லூசாயிடியா டேய் அண்ணா? “

மேலும் சத்தாமாக சிரித்தவன், “ கிட்டதட்ட “ என்றான்.

‘நே’ என்று விழித்த சத்யாவை மேலும் குழப்பாமல், “ நானும் திலோவும் நாலு வருஷமா லவ் பண்றோம். அவங்க வீடு சைடு லவ் மேரேஜ்க்கு எதிர்ப்பாம். அதான் ஒரு லவ் மேரேஜ, அரேஜ்டு மேரேஜா கஷ்டப்பட்டு மாத்தி இருக்கோம். இதுக்காக ரொம்ப நாளா வேயிடிங் தம்பி “ உண்மையை சொன்னான்.

இந்த ட்விஸ்டை எதிர்ப்பார்க்காத சத்யா, ஒரு நிமிடம் யோசித்து, “ அவங்க வேண்டாம்ணா..” என்றான்.

‘அவள்’ மாறி ‘அவங்க’ ஆனதை மனதில் குறித்துக் கொண்டவன், “ காரியத்தையே கெடுத்துடுவ போலவே தம்பி..”

“ இல்லா அண்ணா.. அது.....” சத்யா பேசிக்கொண்டிருக்கும் போது இடையே ,“ இங்க என்ன அத்தான் பண்ணுறீங்க? “. காரமாக வந்தது ஒரு பெண்ணின் குரல்.

“ அத்தானா?? “ சத்யா இழுக்க.. “ இவ மோனிகா. திலோ தங்கை. எங்களுக்கு உதவும் ஒரே ஜீவன் “ என்றான் சிவா.

அலட்சியமாக சத்யாவைப் பார்த்தவள், மறுபடியுமாக சிவாவிடம் திரும்பி, “அக்கா பாவம், உள்ள செம டென்ஷன்ல இருக்கா. இப்டியா பாதில எழுந்து வரது. பொறுப்பே இல்ல அத்தான் உங்களுக்கு “ என்று பொறிய தொடங்கினாள்.

“ இல்ல மா மோனி, இவன் உங்க அக்கா.. “ என்று அடுத்து சிவா பேசுவதற்குள் சத்யா, “ என்ன அண்ணா இன்னும் நின்னுகிட்டு இருக்கீங்க!! அதான் சொல்றாங்கல.. உள்ள அண்ணி பாவம்.. feel பண்ணப் போறாங்க. முன்னாடி போ. நாங்களும் வரோம் “ என்றான் கள்ள சிரிப்புடன்.

‘எங்கடா இருந்தீங்க நீங்கல்லாம்!!!’ என்று ஒரு லுக் விட்டவன், அவனைக் கண்டுக்கொண்டு “ என் நேரம் “ என்று உள்ளே சென்றான் சிவா.

அவனை தொடர்ந்து நடந்த மோனியிடம், “ நீ என்ன பண்ற? “ என்றான் சத்யா.

அவளோ, “ உங்க கிட்ட எதுக்கு சொல்லனும்? “ என்றாள்.

“ ஹலோ. என் அண்ணன் உனக்கு ‘அத்தான்’ னா, நானும் உனக்கு அத்தான் தான் மா”

“ அஹான்...”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.