(Reading time: 10 - 20 minutes)

முதல் காதல் - மது

This is entry #01 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

"ர்ஷு உன் நல்லதுக்கு தான் அப்பா சொல்வாரு டா... இன்னும் எத்தனை நாளைக்கு அவனையே நினச்சுட்டு இருப்ப" இந்துமதி கூற

"ப்ளீஸ் ம்மா நீ கூட புரிஞ்சுக்கலைனா எப்படி...அவன விட்டுட்டு நான் இன்னொருத்தரோட... முடியாது ம்மா என்னால முடியவே முடியாது" மிக உறுதியுடன் மொழிந்தாள் வர்ஷா.

"வர்ஷு...இல்லாம போய்ட்ட ஒருத்தனுக்காக நீ இப்படி இருக்குறது எனக்கும் அப்பாக்கும் எவ்ளோ வேதனையா இருக்குன்னு கொஞ்சமாச்சும் நீ நினச்சு பார்க்கணும்" இந்துமதி தாங்க முடியாமல் விம்ம அன்னையை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் வர்ஷா.

Rain love"அவன் உயிரோட இல்லைன்னு என்னால நம்பவே முடில மா... அவன் கண்டிப்பா உயிரோட தான் எங்கோ இருக்கான்.. நான் தேடி போறேன் மா" வர்ஷா அன்னையிடம் கெஞ்ச

"வர்ஷு... உன் ஆசைக்கு நானும் அப்பாவும் எப்போவும் மறுப்பு சொன்னதில்ல...உன் இஷ்டம் போல சுதந்திரமா தானே வளர்த்தோம். ப்ருத்வியோட நீ சந்தோஷமா வாழணும்னு தான் ஆசைப்பட்டோம். எங்க தப்பு இதுல என்ன இருக்கு...யோசி மா...உன் நல்லதுக்கு தான் சொல்வார் அப்பா " மகளின் தலையை வாஞ்சையுடன் வருடிவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றார் அவள் அன்னை.

விக்குமாரின் மாணவர்கள் பார்கவ், ப்ருத்வி, ஜனார்த்தன், ஜெயந்த், சௌம்யன், ஆயுஷ்மன் எல்லோரும் தனித்தன்மையோடு விளங்கினர்.

" ஸ்டுடண்ட்ஸ்...இனி நீங்க தனித்தனியே உங்களோட திறமைல உங்களுக்குன்னு ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நீங்க எல்லோரும் எங்கிருந்தாலும் எப்போவும் என்னோட ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு" ரவிக்குமார் சொல்ல மாணவர்கள் அனைவரும் அவரை வணங்கி விடைபெற்றனர்.

"என்னங்க டல்லா இருக்கீங்க..எங்கிருந்தாலும் உங்க ஸ்டுடண்ட்ஸ் நினைவுகள் நம்மள சுத்தி தான் இருக்கும்" என்று கணவருக்கு ஆறுதல் கூறினார் இந்துமதி.

"எனக்கு பெருமையா இருக்கு இந்து. எல்லோருமே ஜெம்ஸ். எல்லோரும் நிச்சயம் நல்லா ஷைன் பண்ணுவாங்க" ரவிக்குமார் சொல்ல

"இனி உங்களுக்கு தான் போர் அடிக்கும்" மனைவி சொல்ல

"ஆமா ஆமா போர் அடிக்கும்… கொஞ்சுறதுக்கு பிசாசுகள் இல்லைன்னு போர் அடிக்கும்" என்றாள் வர்ஷா.

"ஏய் வாயாடி." அவளை செல்லம் கொஞ்சிவிட்டு சென்றார் ரவிக்குமார்.

ங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறுவரும் கிளம்பிக் கொண்டிருக்க அங்கு வந்து சேர்ந்தாள் வர்ஷா.

"ஏய் அறுந்த வாலு...எங்க உன் பெட்டி. உனக்கும் சேர்த்து தான் டிக்கெட் போட்டிருக்கேன். நீயில்லாமல் போனால்...." என்று குறும்புடன் பார்கவ் சீண்ட

"ஏ ஸ்மார்ட்டி..ஒழுங்கா உன் வேலைய பார்த்துட்டு போ.. இந்த சைட் அடிக்கிற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம். அப்புறம் தல கிட்ட போட்டு குடுத்திருவேன்" என்று பத்திரம் காட்டினாள்.

தல என்று செல்லமாய் அழைக்கப்படும் ஜனார்த்தன்," வர்ஷு நான் கிளம்பறேன்.. நானும் ஆயுஷ்மன்னும் ரொம்ப தூரம் போகணும். நீ எப்போ பிரியபட்டலும் என் இடத்துக்கு வரலாம்டா" என்று வாஞ்சையோடு கூறினான்.

தன் அப்பாவின் மாணவர்களிலே சிறந்த புத்திசாலி ஜனார்த்தன். தன் நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியும் கூட.

"ஆயுஷ், போகலாம் வா" என்று ஜனார்த்தன் அழைக்க

" பை வர்ஷா. அண்ட் தேங்க்ஸ். உன்னோட இந்த கிப்ட நான் எப்போவும் என்கூடவே வச்சுப்பேன்" என்றான் ஆயுஷ்மன்.

ஒரு முறை விளையாட்டு போட்டி நடக்கும் போது சற்றே ஊனம் உள்ள ஆயுஷ்மன் மட்டும் அதில் கலந்து கொள்ள மறுத்தான். வர்ஷா பிடிவாதமாய் அவனை பங்கேற்க செய்து அவன் ஓடும் பாதையின் நீளத்தை குறைவாய் வைத்து அவனை வெற்றி பெற செய்து "எப்போவும் உன்னாலும் முடியும். நீயும் கிரேட் ன்னு இது உனக்கு ஞாபகப்படுத்தும்" என்று தன் கையால் செய்த அழகிய வட்ட கிரீடத்தை பரிசாக அவன் சிரசில் வைத்தாள்.

வர்கள் இருவரும் விடைபெற, ஜெயந்த் தானும் புறப்பட ஆயத்தம் செய்தான்.

"வர்ஷா, உனக்காக எப்போவும் நான் காத்திருப்பேன். நீ ப்ருத்விய விரும்புறன்னு எனக்கு தெரியும். ஐ விஷ் யு போத். இருந்தாலும் நான் ஒருத்தன் உனக்காக இருக்கேன்றத மறந்திடாத" என்று சொல்ல

" ஜெயந்த்..எனக்கும் உன்ன பிடிக்கும் ஆங்ரி யங் மென். ஆனா ப்ருத்வி என் உயிர்" என்று சொல்ல

"அந்த மரமண்டைக்கு அது புரிஞ்ச மாதிரி தெரிலையே" என்று ஜெயந்த் சீண்ட

"பின்னாடியே போய் துரத்தி துரத்தியாச்சும் லவ் பண்ண வச்சுருவேன்ல" என்று கண்ணடித்தாள்.

"இருந்தாலும் அவன் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மண்ணுன்னு திரிவான். பார்த்துக்கோ" என்று சிரித்துக் கொண்டே சென்றான்.

"நாங்களும் அப்போ எஸ் ஆகறோம் மிஸ்" என்று பார்கவ் சொல்ல

"ஏ லூசுங்களா... என்ன அவசரம் பக்கத்துல தானே இருக்கு உங்க ஊரு" என்று சௌமியன் பார்கவ் இருவரையும் பார்த்து சொல்ல

"அண்ணலும் நீங்களும் பேச ஆயிரம் இருக்கும்...நாங்க எதுக்கு நடுவுல" என்று அவளை வேண்டுமென்றே வம்பிழுக்க

"டேய் என்ன சீண்டாதீங்க" என்று வர்ஷா முறைக்க

" சுண்டக்கா...ஸீன் போட்டது போதும். இனியாச்சும் ஆக்ஷன் ஸ்டார்ட் பண்ணு... பை பை " என்று விடை பெற்றனர் இருவரும்...

றுதியாக ப்ருத்வி செல்ல ஆயத்தமாக அது வரை வாயடிக் கொண்டிருந்தவள் மௌனத்தின் பின் ஒளிந்து கொண்டாள்.

இது வரை அவளும் சரி அவனும் சரி தங்கள் காதலை ஒரு முறை கூட சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இவர்கள் பார்வை பரிமாற்றத்தை கண்டு கொண்ட மற்ற அனைவரும் வர்ஷாவை கலாய்த்துக் கொண்டிருப்பார்களே ஒழிய ப்ருத்வியிடம் எதுவும் வெளிப்படையாக பேசியதில்லை.

ப்ருத்வி எண்ணற்ற ஆற்றல்களை உடையவன். லட்சியம் கொண்டவன். தனக்காக வாழாது தன்னை நம்பியவர்களை வாழ வைக்கும் குணம் உடையவன். பொறுமைசாலி. எதையும் தாங்கும் உறுதி உடையவன்.

வர்ஷாவோ அலைபாயும் நெஞ்சம் கொண்டவள். நிலையில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பவள். சுதந்திரமாய், எந்த கவலை பொறுப்புமின்றி சுற்றித் திரிபவள்.

ப்ருத்வியிடம் ஈர்க்கபட்டாள். ஏன் எப்படி என்ற கேள்விககுக்கு விடை இல்லை அவளிடம். அவளது நேசம் வெளிப்படையாக இருந்த போதும் ப்ருத்வி எதையும் வெளிபடுத்தினான் இல்லை. ஆனால் அவன் பார்வையே அவனின் காதலின் ஆழத்தை உணர்த்தி விட்டிருந்தது.

வன் விடைபெற்று சென்ற சில நாட்களிலேயே நிலையில்லாமல் தவித்தாள் வர்ஷா.

பிரிவுத் துயர் தாளாமல் தன் தந்தையிடம் சென்றாள்.

"அப்பா"

"என்னடா வர்ஷு குட்டி"

"அந்த பிசாசுங்க இல்லாம என்னவோ போல இருக்குப்பா...நான் அப்படியே ஒரு ரவுண்ட் போய் எல்லோரையும் பார்த்து நலம் விசாரிச்சிட்டு வரவா" என்று மகள் கொஞ்சலாய் கேட்க

"அதுக்கென்ன வர்ஷு குட்டி... போயிட்டு வா..ஆனா போய் அவங்கள டிஸ்டர்ப் செய்ய கூடாது என்ன" என்று மகளுக்கு பச்சை கொடி காட்டி அனுப்பினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.