(Reading time: 20 - 40 minutes)

பிரிந்தோம்... இணைந்தோம்... - சித்ரா. வெ.

This is entry #10 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

பால் சொம்பை கையில் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள் அமுதா, அந்த அறையின் கட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அங்கு கதிரவனை காணவில்லை.

அந்த அறைக்குள் நுழைந்ததும் அமுதாவிற்கு, சில வருடங்களுக்கு முன் அந்த அறையினுள் சென்றது தான் ஞாபகத்திற்கு வந்தது,

அன்று அவளது தாய்க்கு உடல்நலம் சரியில்லை, அதனால் அவள் தாயின் வேலையை பார்க்க அந்த வீட்டிற்கு சென்றாள் அமுதா, ஆனால் பார்வதி அம்மா மறுத்து விட்டார், படிக்கிற பொண்ணு வேலை பார்க்க வந்துட்டியா என்று அதட்டினார், ஆனால் அவள் தாய்.. அவர்கள் அப்படிதான் வேண்டாமென்று சொல்வார்கள் ஆனால் அவர்களால் தனியாக எல்லா வேலையையும் செய்ய முடியாது, அதனால் அவர்களுக்கு உதவியாக இரு என்று கூறி தான் அனுப்பி வைத்தார், இவளும் அவர்களை சமாதானப்படுத்தி சில வேலைகளை செய்தாள்,

heartஇப்போது கதிரவனின் அறையையும் சுத்தம் செய்ய வேண்டும், அவன் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றாள் அமுதா, வேலைகளை முடிக்கும் வேளையில் அவன் அறைக்குள் நுழைந்தான், இவளை பார்த்து விட்டு பின்னாலிருந்து அவளை அணைத்தான்,

"விடுங்க கதிர்....அம்மா வந்துடப்போறாங்க.."

"ஹே... அம்மு, நீ ஃப்ர்ஸ்ட் டைம் நம்ம ரூமுக்கு வந்தது... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா... எப்படி இருக்கு நம்ம ரூம்...??"

"ரொம்ப நல்லா இருக்கு கதிர்.."

"ஹே.. இந்த ரூம்ல எதாவது மாத்தனும்னா சொல்லு... நீ எப்படி சொன்னாலும் இந்த ரூமை அப்படியே மாத்திடலாம் என்ன..."

"அதை கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்... இப்ப என்ன விடுங்க.." அவனிடம் இருந்து அவளை விடுவித்துக் கொண்டு அவள் ஓடிவிட்டாள்.

அன்று அந்த அறைக்குள் சென்ற போது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது, ஆனால் இன்று அதே அறைக்குள் இருக்கிறாள், ஆனால் மூச்சு முட்டுவது போல் இருந்தது அமுதாவிற்கு,

இந்த அறை என்ன..?? இந்த வீடே இப்போது இவளுக்கு நரகம் போல் இருக்கிறது. அவள் மனதில் பூத்த அந்த முதல் காதலை கசக்கி எறிந்து விட்டு சென்ற இடமல்லவா..?? இது, அதற்கு பிறகு அவள் வாழ்க்கையில் காதல் என்று நினைத்ததெல்லாம் அவளுக்கு ஏமாற்றமே... இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தாள், ஆனால் இப்போது இவளை நினைத்தால் இவளுக்கே அவமானமாக இருக்கிறது.

அதிலும் இன்று அவள் திருமணத்தில் நடந்தது.. பெரிய அவமானம், அவள் மணப்பெண்ணாக அவன் அருகில் உட்கார வரும்போது, அவள் முகத்தைப் பார்த்த கதிரவன், "இவளா.. மணப்பெண்??" என்று கேட்டுவிட்டு எழுந்து கொண்டான், அதன்பிறகு அவன் தாய் அவனை சமாதானப்படுத்தி அமர வைத்தார்.

அன்று "என்னை மணக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று அவன் கேட்டப் போது கூட அமுதாவிற்கு அவமானமாக இல்லை... ஆனால் இன்று அவன் மறுத்த போது கூனி குறுகி போனாள், இந்த நிலைமையிலும் அவளால் இந்த திருமணம் வேண்டாம் என்று கூற முடியாத நிலையில் தானே அவள் இருக்கிறாள்... அவன் என்ன இவளை ஆசை மனைவியாக்கி கொள்ளவா...?? திருமணம் செய்துக் கொள்கிறான், அவனது பிள்ளைக்கு அம்மா வேண்டும் என்று தானே திருமணம் செய்து கொள்கிறான்,

வள் இதையெல்லாம் நினைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்தபோது, கதிரவன் அறைக்குள் வந்தான், அவள் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது, மண மேடையிலேயே இவளை வேண்டாமென்று சொன்னவன் இப்போது இவள் தனியாக இருக்கும் போது என்னென்ன பேசுவானோ..?? அவள் பயந்து கொண்டிருந்த போதே அவள் அருகில் வந்தான் அவன்,

"நான் என்ன சிங்கமா புலியா என்னைப் பார்த்து இப்படி பயப்படுற...??? நீ சாதாரணமாக இரு... இந்த வீட்டில் நீ சுதந்திரமா இருக்கலாம்... எந்த பயமும் தேவையில்லை " என்று சொல்லிவிட்டு பேசாமல் படுத்துவிட்டான்.

"இருப்பதே நரகம்... இதுல சுதந்திரமா வேற இருக்கனுமாம்" என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அமுதா, அவன் பக்கத்தில் எப்படி படுப்பது என்று யோசித்து படுப்பதற்கு பாயை தேடினாள், அது கிடைக்கவில்லை எனவே போர்வையை எடுத்து கொண்டு அவள் படுக்கச் சென்றாள்,

அவன் உடனே எழுந்து "ஏசி ரூமில் தரையில் படுப்பது நல்லதல்ல... கட்டிலிலேயே படுத்துக் கொள்... உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்" என்று சொல்லி விட்டு படுத்துவிட்டான், இவளும் கட்டிலின் ஓரமாக ஒருக்களித்து படுத்துவிட்டாள், தூக்கம் வரவில்லை, பழைய நினைவுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இவள் தூக்கத்தை கெடுத்தன.

முதாவிற்கு பன்னிரண்டு வயது இருக்கும் போது அவள் குடும்பம் பிழைக்க வழியில்லாததால் கொஞ்சமாக இருந்த நிலத்தை விற்று அந்த பணத்தை எடுத்து கொண்டு கதிரவன் இருந்த ஊருக்கு பிழைப்பதற்காக வந்தார்கள், அமுதாவின் தந்தை ஏதோ ஒரு வேலையை தேடிக் கொள்ள, கதிரவனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தாள் அமுதாவின் தாய்.

கணவனை இழந்து தன் மகனுடன் தனியாக வீட்டை நிர்வகித்து வந்தார் பார்வதி, கதிரவன் வெளியூரில் தங்கி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவள் தாயுடன் அடிக்கடி அந்த வீட்டிற்கு செல்வாள் அமுதா, பார்வதி ஏழை பணக்காரன் என்ற பாரபட்சம் பார்க்காமல் பழகுவார், இவள் படிப்பிற்கும் இவள் அக்காவின் திருமணத்திற்கும் உதவிகள் செய்துள்ளார், விடுமுறைக்கு வரும் கதிரவனும் நல்லபடியாக தான் நடந்து கொள்வான்.

இப்படி வருடங்கள் சென்று கொண்டிருக்க.. இவள் பன்னிரண்டாவது படிக்கும்போது நட்பாக பழகி கொண்டிருந்த கதிரவனின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது, அந்த மாற்றம் என்ன என்று தெரிந்து கொண்டதால் இவளின் நிலையை எண்ணி அவனிடம் இருந்து இவள் விலகிச் சென்றாள், ஆனால் அவன் விடவில்லை இவளிடம் பேசி பேசியே இவள் மனதை கரைத்து விட்டான். முதன் முதலாய் அவள் மனதில் அந்த காதல் பூ... பூக்க ஆரம்பித்தது.

அவன் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இருவரும் காதலித்து கொண்டிருந்தனர். அவன் குடும்ப தொழிலை கவனிக்க பயிற்சிக்காக அவன் வெளியூரிலேயே சிறிது காலம் வேலை செய்து கொண்டிருந்தான், ஒரு விடுமுறைக்கு அவன் வந்த போது.. இன்னும் இரண்டு மாதத்தில் அவன் அந்த வேலையை விட்டுவிட்டு வந்து குடும்ப தொழிலை கவனிப்பதாகவும் அதற்குள் இவள் கல்லூரி படிப்பு முடிந்துவிடும் ஊரிலிருந்து வந்த உடனே அவன் தாயிடம் சொல்லி நம் திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி விட்டு சென்றான்.

இரண்டு மாதம் என்று சொன்னது நான்கு மாதமாகியது அவன் திரும்பி வருவதற்கு... அவன் வருகையை எண்ணி இவள் ஆனந்தப்பட்டாள், இவளின் சந்தோஷத்தை அவன் தாய் அதிகப்படுத்திவிட்டார், அவன் வந்த மறுநாளே நிச்சயதார்த்தம் என்று கூறி தாம்புல தட்டுடன் வந்து இவளை பெண் கேட்டார், அவனும் வந்தான், இவள் அவனை பார்க்க சென்ற போது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.