(Reading time: 19 - 37 minutes)

முள்மீது பனித்துளி - ஆ.ஜீவரத்தினமணி

This is entry #44 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

mul mele pani thuli

ழகிய மாலைப்பொழுது, ஆதவன் அயர்ந்துறங்க தொடங்கிய நேரம். கரையோரத்தில் காகங்கள் கடல் அலையின் இசையை ரசித்துக் கொண்டிருந்தன. ஆகா!!! கடலில் மிதந்துவரும் படகு, எத்தனை அழகாகத் தோன்றுகிறது. அங்கு குழந்தைகள் பலர் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு முதியவர் தன் மனையாளின் ஆசைக்கு இணங்க சிறு பிள்ளையாய் தின்பண்டம் வாங்கி வருகிறார். காதலர்கள் எண்ணயியலாத அளவுக்கு எங்கெங்கோ தனித்தனியே அமர்ந்திருந்தனர்.

அந்த மாலையில், கடற்கரையின் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது. எதையுமே ரசிக்காமல் எதையோ இழந்ததுப்போல்,சோகக்கடலில் கடலோரம் அமர்ந்திருக்கும் என் பெயர் விக்னேஷ். அங்கே கடலின் ஒவ்வொரு அலையும் என்னவள் பெயரை அழைப்பதாகவேத் தோன்றுகிறது.

நிஷா...

நிஷா...

நிஷா...

கடலின் ஆழத்தைவிட என் காயத்தின் ஆழம் பெரியதாய் தோன்றுகிறது. பாரம் தாங்காது பார்வைகள் இரண்டும் நீரால் நிரம்பியது.

“முள்மீது பனித்துப்போல் - காதல்

முள்ளாகத் தைக்குதடி!!!...”

ன்னுடைய ஊர் சிவகங்கை. மதுரையின் பக்கத்தில் உள்ள ஊர்தான். அம்மா,அப்பா மற்றும் தம்பி என சிறிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அம்மா என்ற வார்த்தையில் ஒரு தனிப் பாசம் தெரியும். அம்மா அளவில்லாப் பாசமென்றால், அப்பா அளவில்லாக் கோபம். ஆனால் அவர் கோபத்திலும் ஓர் அர்த்தம் இருக்கும். அதன்பிறகு, என் குட்டித்தம்பி. எனக்கும் அவனுக்கும் 6 வருடம் வயது வித்தியாசம். இரண்டு பசங்க இருக்க வீட்டுல சொல்லவா வேணும், எதுக்கெடுத்தாலும் சண்டை. அவன தினமும் அடிச்சு அழவைக்கலனா எனக்குத் தூக்கமே வராது. ஆனா வேற யாரும் அவன அடிச்சா எனக்கு சுத்தமாப் பிடிக்காது. அவன அவ்வளவு பிடிக்கும். அவன் பெயர் சொல்ல மறந்துவிட்டேன். அவன் பெயர்சிவா. என்னோட பொம்மக்குட்டி.

இவங்கள மாதிரியே இன்னொரு முக்கியமான ஆள் இருக்கான். அவன் பெயர் சரவணன். சரவணனும் நானும் தவழ ஆரம்பச்சதுல இருந்து நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே அரசு ஆண்கள் பள்ளியில் தான் படிச்சோம். படிப்புல பார்த்த சரவணன் தான் எப்பவுமே முதலிடம். படிப்பவிட நட்புக்காக என்னனாலும் செய்வான்.

உதாரணமாக, ஏழாவது படிக்கும் போது அறிவியல் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நாங்கள் இருவரும் பள்ளியிலே சந்தித்தோம். அவன் இந்த முறை எப்படியும் நூறு மதிப்பெண் பெற்றுவிடுவதாய் கூறினான். பிறகு, தேர்வு முடிந்ததும் அனைவரும் செய்வது போல் விடையை இருவரும் சரிபார்த்தோம். அவ்வளவுதான் நான் தேர்வில் தேர்ச்சி பெறப்போவதில்லை எனத் தோன்றியது. என் கண்கள் கலங்கியது. அவன் என் கண்களைப் பார்த்ததும் உணர்ந்து கொண்டான் நான் தேர்வில் சொதப்பிவிட்டேன் என்று.

"என்னடா பரிச்சை ஒழுங்கா எழுதலயா" என்றான்.

தலையை ஆட்டினேன்.

அவ்வளவுதான் என்னை அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு விறுவிறுவென எங்கோ போனான். சிறிது நேரத்தில் வந்தவன் "இங்கே நிற்காதே உடனே என்னுடன் வா" என்றான்.

அவன் பதற்றமாக காணப்பட்டான். இருவரும் வெகுதூரம் வந்தவுடன் அவன் பதற்றம் குறைந்தது.

"ஏன் பதற்றமாக இருந்தாய்" என்றேன்.

அவன் பையில் இருந்து ஒரு தாள்களின் தொகுப்பை எடுத்து என்னிடம் நீட்டினான். ஆம், அது நாங்கள் அனைவரும் எழுதிய அறிவியல் விடைத்தாள்களே. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தேர்வின் தோல்வியில் இருந்து தப்பிவிட்டேன் அல்லவா.

"எப்படி எடுத்தாய்" என்றேன்.

அறிவியல் வாத்தியார் அறையில் இருந்து எடுத்ததாய் கூறினான். அதன் பின் அந்த விடைத்தாள் காணாததால் அந்த அறிவியல் வாத்தியாரின் வேலையும் பறிபோனது. இப்படித்தான் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். பெண்கள் என்றால் சரவணனுக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆதலால் பெண்களை எனக்கும் பிடிக்காது.

ன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது சரவணன் கற்றுக்கொடுத்தப் பாடங்களால் நல்ல மதிப்பெண்களுடன் வெளியே வந்தேன். இருவருக்கும் சென்னையில் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது. பல கனவுகள் இருந்தாலும், வீட்டையும், ஊரையும் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. அம்மா, அப்பா மற்றும் குட்டித்தம்பியைப் பிரிவது மிகவும் வேதனையாக இருந்தது. ஒன்று மட்டுமே அப்போது ஞாபகத்திற்கு வந்தது.

"பிரிவும் நிரந்தரம் இல்லை" என்று.

நானும் சரவணனும் சென்னைக்குச் செல்ல ஆயத்தமானோம். எங்கள் குடும்பத்தினர் எங்களைக் கல்லூரியில் சேர்க்க எங்களுடன் வந்தனர். புகை வண்டியில் ஏறி நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். என் எதிரே ஒரு பெண் கண்களில் நீர்ததும்ப அமர்ந்திருந்தாள். அவளுக்கும் என் வயதுதான் இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.