(Reading time: 7 - 13 minutes)

பசுந்தோல் போர்த்திய புலிகள்- சஹானி

This is entry #47 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

mask

ந்த வீட்டின் கடிகாரம் மணி எட்டு என்று குறிப்புணர்த்தி கொண்டிருக்க.... சோபாவில் அமர்ந்து செய்தி தாளை புரட்டி கொண்டிருந்தார் ஆர்.கே.  ராதா கிருஷ்ணன். பிரபலமான கம்பெனியில் அசிஸ்ட்டென்ட் மேனஜராய் பணி புரிந்து கொண்டு இருப்பவர்.

சமையலறை பக்கம் திரும்பி , காபி கொண்டுவாமா... என்று குரல் கொடுத்தார்.

அங்கு சமையலறையிலோ , தன் நெற்றி வேர்வையை துடைத்தவாறு, அடுப்பில் வைக்கபட்டிருந்த பாத்திரத்தில் காய்ந்து கொண்டிருந்த எண்ணையில் கடுகை போட்டவாறு மற்றொரு கையால் காபி கலக்க தயாரானார்.. மீனா, ஆர்.கே. யின் மனைவி.

க்ளிங்.. க்ளிங்..

அழைப்பு மணி அழைக்க எழுந்து சென்று கதவை திறந்தார் ஆர். கே.

குட் மார்னிங் சார்...

ஹலோ, வாங்க தமிழ் ... வாட் அ சர்ப்ரைஸ்... உள்ள வாங்க

இங்க பக்கத்துல ,இயர்லி மார்னிங் ஒரு ஷூட் சார் இப்போ தான் முடிஞ்சது..  சரி பக்கதுல தான உங்க வீடு , உங்களயும் பாத்துட்டு உங்க அப்பாய்ண்டயும் புக் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன் சார்.

சொல்ல மறந்து விட்டேனே இந்த ஆர்.கே மேடை பேச்சாளரும் கூட...

மீனா, தமிழுக்கும் சேர்த்து காபி கொண்டுவாமா...
என்றவாறு... இவன் பக்கம் திரும்பி ,

அப்படியா... என்ன ப்ரோக்ராம்... தமிழ் , லோக்கலா ? அவுட்டிங்கா?

இங்க லோக்கல் தான் சார். நம்ம க்வின்ஸ் வுமன்ஸ் காலேஜ். வர மார்ச்  வுமன்ஸ் டேல , மார்ச் 5  ப்ரோக்ரம் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க நீங்க கலந்துகிட்டா ரொம்ப சந்தோஷ படுவாங்க சார்.

ஏன் மார்ச் 8 லயே வைக்கலாமே ...

இல்ல சார், மார்ச் 8 செவ்வாய் கிழமைன்றதால காலேஜோட ஸ்பான்சர்ஸ் சிலரால வர முடியதுனு வீக் எண்ட்ல வைக்றாங்க... உங்க டேட் செட் ஆகுமானு சொல்லுங்க  சார், இல்லனா அதுக்கு தகுந்த மாதிரி செட் பண்ணலாம்.

ம்ம்ம்ம்....

அதற்குள் மீனா, கையில் காபியோடு வர அவரிடம் நலம் விசாரித்தவன், ஆர்.கே யிடம் திரும்பி,

எனக்கு தெரியும் சார், நீங்க வேற ஆஃபிஸ்ல ப்ரமோஷன்காக வெய்ட் பண்றீங்க... இந்த டைம்ல உங்கள பிடிக்கறது வேற கஷ்டம் அதான் இப்படி முன்னடியே அப்பாய்ண்ட் பண்ண வர வேண்டியதா போச்சு தப்பா எடுத்துக்காதிங்க சார்...

இதுல தப்பா எடுக்கறதுக்கு என்ன இருக்கு  தமிழ், 
ப்ரமோஷன்கு வெய்ட் பண்றது என்னமோ உண்மை தான், என் சீனியர் கூட , என்ன ரிக்வஸ்ட் பண்றதா சொல்லிருக்கார். சோ அது பிரச்சனை இல்லை... அதோட
சனிக்கிழமை தானே எனக்கு ஓகே தான். என்ன ? ஒரு ஒன் வீக் முன்னாடி ரிமைன்ட் பண்ணுங்க தமிழ் . அது  போதும்.

அதன் பின் சிறிது நேரம் இருவரும் பேசி கொண்டிருக்க தமிழுக்கு தன் வேலை விஷயமாக போன் கால் வரவே அவன் விடை பெற்று சென்றான்.

மார்ச் 5,  க்வின்ஸ் காலேஜ்...

விழாவிற்காக கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் மேடை அமைக்கபட்டிருந்தது. பங்கேற்கும் முக்கிய விருந்தினருக்காய் விசேஷ இருக்கைகள் போட பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராய் வர விழா இனிதே அரங்கேறியது.

கல்லூரியின் பேராசிரியை விழாவினை தொகுத்து வழங்க , மாணவி ஒருத்தி கடவுள் வாழ்த்துடன் தொடங்கி வைத்தாள்.

கல்லூரியில் நடை பெற்ற, கட்டுரை போட்டி,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

அதன் பின்னர் கல்லூரியின் தாளாளர், முதல்வர், துணை முதல்வர், முக்கிய புள்ளிகள்  என ஒவ்வொருவராய் பேசி விட்டு செல்ல , 
"அடுத்ததாக நம் ஆர்.கே அவர்கள் நம்மோடு உரையாற்றுவார்கள் " என்ற பேராசிரியையின் வார்த்தைக்கிணங்கி அவர் மேடையின் முன் வந்து நின்றார்.

" எல்லோருக்கும் என் பணிவான வணக்கங்கள். இன்று நடை பெறுகின்ற இந்த மகளிர் தின விழாவில் பரிசு பெற்ற அத்தனை மாணவியர் செல்வங்களுக்கும் என் வாழ்த்துக்கள். பெண் என்பவள் சாதாரணமானவள் அல்ல. ஆணைவிட பெண்ணே பலசாலியாவாள். புரியவில்லையா? ஆம், அன்பே சிறந்த ஆயுதம். பெண்ணே அன்பின் வடிவம். அப்படி இருக்கையில் பெண் தானே பலசாலியாவாள். (கரகோஷம்)

சமீபத்தில் வெளியான ஒரு வெளியீட்டில் ஒரு பெண்ணின் மூளையின் செயல்படும் திறனானது, ஆணின் மூளையின் செயல் படும் திறனை விட அதிகமாகும். ஒரு ஆண், ஒரு செயலுக்கு எடுக்கும் முடிவு ஒரு கோணத்தில் அமையுமாயின், பெண்ணின் முடிவு முப்பரிமாணத்தில் அமையும். நாளையும் சிந்தித்து செயல்படுவாள் என்று கூற பட்டு இருந்தது.(கரகோஷம்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.