(Reading time: 6 - 11 minutes)

முதல் காதல் - லதா வெங்கடேசன்

This is entry #50 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

atchathai

ஞ்சனிக்கு அவள் பெண் ஸ்ரீநிதியை  கல்யாண கோலத்தில் பார்த்தவுடன் உள்ளமெல்லாம் பெருமிதம், ஸ்ரீநிதி அன்று நிஜமாகவே பார்க்க தேவதைப்போல் தான் தெரிந்தாள். இன்னும் சில நொடிகளில் ஸ்ரீநிதிக்கும் அரவிந்தனுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை நினைத்து  ரஞ்சனிக்கு   ஒரு விதத்தில் குதூகலமாக இருந்தாலும் ஸ்ரீநிதி வேறு வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்ற நினைப்பு வருத்தத்தைதான் தந்தது

இருபத்தைந்து ஆண்டு முன் ரஞ்சனியும் அவள் கணவன் அருணும் என்னவொரு தவறு செய்யவிருந்தார்கள். அவர்களின் இந்த முதல் காதல், திருமணம் ஆகி சில நாட்களிலேயே முற்றுப்புள்ளி வைத்திருந்திருக்கப் பட்டிருக்கும். அதை  தடுத்து நிறுத்திய அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.இல்லாவிட்டால் வாழ்க்கையின் இந்த இரண்டாவது அத்தியாயத்தை அவர்களால் தொடர்ந்திருக்கத்தான் முடியுமா, ஸ்ரீநிதி என்ற மாணிக்கத்தை பெற்றெடுத்திருக்க முடியுமா அல்லது இந்த தருணத்தைதான் அனுபவித்திருக்க முடியுமா?

அந்த சம்பவங்கள் ரஞ்சனிக்கு இப்பவும் பசுமையாக ஞாபகத்தில் இருந்தன............

ஞ்சனியும்,அருணும் ஒரு IT கம்பெனியில் சேர்ந்து மூன்று மாதமாகி இருந்தது. ஒரு நாள் வேலை அதிகம் காரணமாக ஆபீஸிலிருந்து வீட்டிற்கு கிளம்ப பதினோரு மணி ஆகிவிட்டது ரஞ்சனிக்கு. அதற்குள் அவள் அம்மா விடமிருந்து ஃபோன் மேல் ஃபோன் ”எப்பொழுது கிளம்ப போகிறாய்” என்று ‘’.நீ கவலைப்படாதே நான் ஆபீஸ் காரில் வந்து விடுவேன்’’ என்று சொல்லி பன்னிரண்டு மணிக்கு ஆபீஸை விட்டு கிளம்பினாள் ரஞ்சனி..ஆனால் கிளம்பிய கொஞ்ச தூரத்திலேயே கம்பெனி கார் மக்கர் பண்ண ஆரம்பித்தது .ஏதேனும் ஒரு பெட்ரோல் பங்குக்கு போய்விடலாம் என்று நினைப்பதற்குள் டர்டர் என்று சத்தம் போட்டுவிட்டு நின்று விட்டது. வெளியில் ஒரே பொட்டவெளி கும்மிருட்டு, அம்மாவிடம் பயப்படாதே என்று சொல்லிவிட்டாலும் ரஞ்சனியின் மனதில் பட்டாம்பூச்சி ஓடிக்கொண்டுதான் இருந்தது. டிரைவரும் காருடன் போராடிவிட்டு என்ன பண்ணுவது என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் ஒரு மோட்டர்பைக்கினுடையது என்று தெரிந்தவுடன் ரஞ்சனியின் மனதில் பெரிய நிம்மதி ,இல்லாவிட்டால்  அடுத்த கம்பெனி கார் வர அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும், டிரைவர் கைகாட்டி மோட்டர் பைக்கை நிறுத்தினார். அது தான் ரஞ்சனியின் வாழ்க்கையில் திருப்புமுனை என்று அப்பொழுது ரஞசனிக்கு தெரியவில்லை. பைக்கிலிருந்து அருண் இறங்கினான். ஒரே அலுவலகம் என்பதால் அறிமுகத்துக்கு தேவையில்லை. ரஞ்சனியை அவளுடைய வீட்டில் விட்டு விடுவதாகவும், ஒரு மெக்கானிக்கையும் அனுப்பி வைப்பதாகவும் டிரைவரிடம் சொல்லிவிட்டு பைக்கை அழுத்தினான் அருண்.

அருண் பண்ணிய உதவிக்கு ஆயிரம் தடவை நன்றி சொன்னாள் ரஞ்சனியின் அம்மா. அடுத்த வாரம் அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் அருணை வீட்டிற்கு சாப்பிட அழைத்தாள் ரஞ்சனி ..இப்படியாக ஆரம்பித்த இவர்கள் நட்பு, காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது  .கல்யாணம் ஆனகையுடன் இருவரும் தனிகுடித்தனம் போய்விட்டனர்.

கொஞ்ச நாள் எல்லாம் சரியாகப்போய்க் கொண்டிருந்தது. அதற்குபிறகு அவர்கள் வாழ்க்கையில் சிறுசிறு விரிசல்கள்கள் ஆரம்பித்தன. இந்த சின்ன சின்ன சண்டைகள் விஸ்வரூபம் எடுத்து அதன் காரணமாக ஒரு நாள் ரஞ்சனி தன் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்குச்சென்று விட்டாள். அருண் ,எப்படியும் ரஞ்சனி திரும்பி வந்து விடுவாள் என்று நினைத்து அவன் அவளை கண்டு கொள்ளவேயில்லை. இரண்டு குடும்பத்தாருக்கும் அவரவர் குழந்தைகள் பண்ணுவதுதான் சரி என்று பட்டது, ஆதலால் அவர்களுக்குள் மனஸ்தாபம்.. இரண்டு பேருக்கும் இருந்த ஈகோ பிரச்னையால் அவர்களால் ஒரு சமரசத்துக்கும் வரமுடியவில்லை.ஒரு வருடம் கழித்து ரஞ்சனிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் வந்தது அருணிடமிருந்து. அதை அவள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கையெழுத்து போட்டு அனுப்பி விட்டாள்.

று மாதம் கழித்து கோர்ட்டில் ஹியரிங். காலையிலேயே ரஞ்சனி,அருண் அவரவர் வீட்டார்களுடன் கோர்ட்டில் ஆஜர். பத்து மணிக்கு ஜட்ஜ் வந்தார்.. ரஞ்சனி,.அருண் இருவர் மனதிலும் ஒரே படபடப்பு. அவர்களுடையது ஐந்தாவது கேஸ் என்றார்கள். இவர்களுக்கு முன்பு எடுத்த நான்கு கேஸ்களில் இரண்டுக்கு விவாகரத்து கிடைத்து விட்டது.மற்ற இரண்டுக்கும் ஆறு மாதம் ஆகாததால் அதற்குபின் வரச்சொன்னார்கள். அடுத்தது இவர்கள் கேஸ்தான், ஆனால் அதற்குள் லஞ்ச் டைம்வந்துவிட்டதால் இரண்டு மணிக்குதான் அவர்கள் கேஸ் எடுக்கப்படும் என்று சொல்லி எல்லோரும் போய்விட்டார்கள். .லஞ்சுக்கு போவதற்குமுன் ரஞ்சனியையும் அருணையும் கூப்பிட்டு அவரவர் வக்கீல்கள் திரும்ப ஒரு முறை டைவர்ஸ் வேணுமா என்பதை ஆலோசிக்கச்சொன்னார்கள், ஆனால் அவர்கள் தங்களின் முடிவில் உறுதியாக இருந்ததால் கோர்ட்டில் எல்லோரும் 2 மணிக்கு ஆஜர் .

ஜட்ஜ், ரஞ்சனி-அருண் பேரைச்சொல்லி அவர்கள் ஃபைலைக்கொண்டு வரச்சொன்னார். சிறிது நேரம் காத்திருந்த ஜட்ஜ் அந்த ஃபைல் எங்கேயோ இடமாற்றம் ஆகிவிட்டது ஆதலால் அது கிடைத்தவுடன் எடுக்கப்படும் என்று கூறி அடுத்த கேஸுக்கு போய்விட்டார் .ரஞ்சனியும் அருணும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டார்கள் .அன்று அவர்கள் கேஸ் வரவேயில்லை.

அடுத்த நாளும் ஃபைல் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் இரண்டு நாள் கழித்து புதிய டைவர்ஸ்பெடிஷன் கொடுக்கச்சொல்லி கோர்ட்டுக்கு வரச்சொன்னார்கள். அப்பொழுது இருவரது பெற்றோர்களும் சேர்ந்து ‘’ உங்கள் இருவருக்கும் கடவுளே ஒரு வாய்ப்பு தந்திருக்கிறது அதை ஏன் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது உங்கள் குடும்ப வாழ்க்கையை தொடர இன்னும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்துத்தான் பாருங்களேன்” என்றார்கள்.

அருணுக்கும், ரஞ்சனிக்கும் இதுவே சரி என்று பட்டது .அதன் விளைவுதான் அவர்களின் குட்டிச்செல்வம் ஸ்ரீநிதி. அதன்பிறகு ஸ்ரீநிதியை பராமரிப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை ஓடிவிட்டதால் இருபத்தைந்து வருடம் போனதே தெரியவில்லை.

பைல் காணாமல் போனதை நினைத்துக்கொண்டிருந்த ரஞ்சனிக்கு எங்கிருந்தோ “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற சத்தம் அவளை தன்சுயநினைவிற்கு வரவழைத்தது.உடனே கையில் அட்சதையை .எடுத்துக்கொண்டாள். ஸ்ரீநிதி,அரவிந்த் வாழ்க்கையில் ஒரு மனஸ்தாபமும் இல்லாமல் இருக்க இறைவன் இடத்தில் வேண்டிக்கொண்டு அருணுடன் சேர்ந்து புது மண தம்பதிகளுக்கு அட்சதை போட  ஆயத்தமானாள் ரஞ்சனி. 

This is entry #50 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.