(Reading time: 18 - 36 minutes)

உயிர் காதல் - ஷிவானி

This is entry #51 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

uyir kathal

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே…. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை…. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையைப் போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்….

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமேஇப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்

ச்சேச்சேஅவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது….

அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்…. அது அவளே தான்….!”

ன் கண்களை நம்ப இயலாமல் தவித்தான் ஸ்ரீராம். காலை வீட்டுலிருந்து கிளம்பிய நேரம்முதல் பார்க்கும் பெண்கள் எல்லோருமே எனக்கு ஜானுவாகத்தான் தெரிந்தனர். 15 நிமிடத்திர்க்கு முன்புகூட கோவிலில் யாரோ ஒரு பெண்ணை ஜானு என்று நினைத்தேன், ஆனால் அவளை நெருங்கிசென்று பார்த்தபிறகுதானே அது என்னவள் இல்லை என்று தெரிந்து, அதைபோல் “இதுவும் என் பிரமையோ?... ஒருவேளை இது ஜானுவாகவே இருந்தால்”?... ஸ்ரீராமின் இந்த மனப்போராட்டம் ஒரு முடிவினை சந்திக்கும்முன் signalலில் பச்சைவிளக்கு எரிந்தது, அவன் காரின் முன் நின்றிருந்த அனைத்து வாகனங்களும் அவசரமாய் கிளம்ப அதில் ஜானுவின் பைக்கும் வேகமாய் பாய்ந்தது, “சாலைவிதியை மீறிய லாரியொன்று மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்து ஜானுவின் பேக்கை அடித்து வீசிச்சென்றது”.

 அக்காட்சியைக் கண்டு துடித்துப்போன ஸ்ரீராம், அவளைக்காக்க தன்காரைவிட்டு இரங்க முயற்ச்சித்தான். துரதிர்ஷ்ட வசமாக அவனின் கார்க்கதவுகள் திரக்க இயலாதவாறு மற்ற வாகனங்கள் நின்றிறுந்தது, செய்வதரியாது தவித்து அவளைக்கண்டான், “அவர்களின் உடல்விட்டு ஆறாய் பாய்ந்த செங்குருதியைகண்ட, ஸ்ரீராமனின் கண்களில் பொங்கியது கண்ணீர்.”

 “அவனின் இன்னிலை, இயலாமையின் சரியான விளக்கமானது”. “அவளை பைக்கில் இன்னொருவனுடன் நெருக்கமாய் கண்டநேரம் முதல் அவனை தொடந்து தாக்கிய துண்பப்புயல், அவளின் உடல்விட்டு உயிர்ப்பிரியும் காட்ச்சியைக்கானும்வரை தொடர்ந்து வீசியது”. ‘நிதர்சனத்தை ஏர்க்க இயலாமல் மயங்கினான் ஸ்ரீராம்’.

 “ஒரு மாதத்திர்க்கு முன்பு நடந்த பெண்பார்க்கும் நிகழ்வில்தான் முதல்முறை ஜானகி, ஸ்ரீராமனின் சந்திப்பு நிகழ்ந்தது. அதுவரை காதல்மேல் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்துவந்த இருவரின் மனதையும் முதல்முறை தென்றலாய் வருடியது “காதல்” ‘நிலவொலியில் மின்னும் தேவதையாய் ஆனாள் ஸ்ரீராமனின் மனதில்’. ‘சீதாராமனுக்கு நிகராகத்தெரிந்தான் ஸ்ரீராம் அவளிர்க்கு.’

 20வருடங்களாய் தோழனாகமட்டும் இருக்கும் ஷங்கரனை சம்மந்தியாக்கும் முடிவோடு வந்திருந்த நம்பி, அன்று திருமணத்தேதியையும் நிச்சயித்து சென்றார். காதல்நோயில் தவித்த ஸ்ரீராம், ஜானகியிர்க்கு மருந்தாய் ஆனது திருமணத்தேதி. அதுவே அவர்கள் இரவுமுழுவதும் போனில் பேசும் சுதந்திரத்தின் காரணமாகவும் இருந்தது. “அவனிர்க்கு பிடித்தவாரு தன்னை மாற்றுவதே அவளின் நோக்கமாக இருந்தது.” “ஜானு என்வாழ்வில் வருவதே என் பாக்கியம்”, என்னும் என்னங்களோடு ஓடியது அந்த ஒருமாதம்.

 ஜானுமா, ஜானுமா, என்று அழைத்தவாரு வீட்டினுள் நுழைந்தார் ஷங்கரன். “வந்துடபா”, என்று சொல்லிக்கொண்டே மாடி இரங்கி வந்தாள் ஜானகி. “அடடே, என்னம்மாஇது?”..... “கண்களில் நானமும், நெஞ்சத்தில் காதலும்பொங்க நிலம்நோக்கியவாறு, உதட்டில் புன்னகையோடு அது” என்று பதில் சொல்லமுயன்ற அவளை தடுத்தவாறு பேசினாள், அவளின் தாய் உஷா. “காலைல ஸ்ரீராம் phoneல பேசியபோது சொன்னாரா, அவரோட கணவுல ‘சிகப்பு பொடவைல’ நம்ம ஜானு தேவதப்போல இருந்தானு”, அதான் என்னோட பொடவைய எடுட்துக்கிட்டு உள்ளப்போனவ 2மணிநேரத்துக்கு அப்புரம் இப்போதான் உங்க குரல்கேட்டு கதவதிறந்து வந்தா.

 “பெண்பார்க்கும் நிகழ்ச்சிக்குகூட பொடவகட்டமாட்டனு சொல்லி அடம்புடிச்ச எங்கமக, மாப்ள சொன்ன ஒரே வார்த்தைக்காக புடிச்ச colorர விட்டுட்டு, சிவப்பு பொடவைய கட்டியிறுக்கரதப் பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குமா” ‘இதுப்போல எப்பவுமே நீங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சி நடந்துக்கனும்’ என்று கூறினார் ஷங்கரன். சிரித்துக்கொண்டே தலையை அசைத்தவாறு நின்றாள் ஜானகி. “பாத்துடீமா, நாளைக்கு மாப்ள எங்களையு புடிக்கலனு சொன்னா, வீட்டுல சேக்காம போயிடப்போர” என்று சிரித்துக்கொண்டே கூறிய உஷாவை தள்ளியவாறு ‘போமா’ என்று வெட்கம் பொங்கக்கூறிய ஜானு மாடியில் ஏரினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.