(Reading time: 18 - 36 minutes)

பாலைவன ரோஜாக்கள் - ஜான்சி

This is entry #53 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

desert rose

ற்சாகம், இளமைத் துள்ளல், எதையாவது பிறர் கவனத்தைக் கவரும்படி பேசி தம் நட்பு வட்டத்திற்க்குள் கவனிக்கப் படுவதற்கான முயற்சிகள்.ஓங்கிய கைகளின் ஹை ஃபைவ்களும், அலட்டலான குரல்களும், ஹே...உற்சாக ஆரவாரிப்புமென உலகத்தையே மறந்து ஒருவர் மற்றவரை பல காலமாய் அறிந்தது போல ஒட்டி உறவாடும் கல்லூரி என்னும் இனிய நட்புலகம்.அங்கே அந்தக் கல்லூரியின் காரிடாரில் வைஸ் பிரின்ஸிபல் வளன் கடந்துச் சென்ற ஒரு நிமிடம் மட்டும் அமைதிப் பேணப்பட்டது. காரணம் பயமா? என்றால் இல்லை, அவர் குறித்த மரியாதை என்றேச் சொல்ல வேண்டும். 

தோழமை உணர்வோடு பழகும் அவருக்கு அக்கல்லூரியில் விசிறிகள் மிக அதிகம். முப்பதின் ஆரம்பத்தில் கல்லூரி மாணவன் போலவே தோற்றத்தோடு இருப்பது ஒரு காரணமென்றால், தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் மாணவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது, அனாவசிய அதிகாரத் தோரணை இல்லாத நட்பான அணுகுமுறை மற்றுமொரு காரணம்.

 தான் பதவியேற்று ஒரு சில வருடங்களிலேயே தனது அமைதியான அணுகுமுறையால் அந்த கல்லூரியின் பல்வேறு சின்ன சின்ன குறைபாடுகளை களைந்து அதிகம் கவனம் ஈர்த்துக் கொண்டவர்.படிப்பில் மட்டுமல்லாது கலை, விளையாட்டு என அக்கல்லூரியை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளதால் அனைவரின் நல்மதிப்பையும் பெற்றிருந்தார்.

 தற்போது இரண்டு கோஷ்டியருக்கான சண்டையை சமாதானப் படுத்தி விட்டு தன் இருக்கைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.தம் அறையில் நுழைந்து ஓய்வாய் அமரும் வேளையில்,

"ஏய் அந்த வைஸி பேசினதப் பார்த்தல்ல...எப்படி அந்த கிரிக்கு சப்போர்ட்டா பேசினாரு...."எனப் பொருமும் சப்தமும் தொடர்ந்த உரையாடலும் கேட்டது. 

 தமது அறைசன்னலின் அருகே நின்றுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வளனுக்குப் புரிந்தது. வெளியே இருந்துப் பார்த்தால் உள்ளே யாரும் இருக்கிறார்களா , இல்லையா என அறிந்துக் கொள்ள இயலா அமைப்பு,அதனால்தான் தாம் உள்ளே இருப்பது அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணியவருக்கு கோபத்திற்கு பதிலாக புன்னகையே மலர்ந்தது. சிறுவராகவோ. பெரியவர்களாகவோ எண்ண இயலாத இரண்டும் கெட்டான் வயது இளமைப்பருவம். அளவற்ற ஆற்றல், ஆர்வம், கட்டுக் கடங்காத கோபம் எனும் குணாதிசயங்கள் தானே இளைஞர்கள் என்று எண்ணிக் கொண்டார்.

"என்னமோ பெரிய காலேஜ் பெருமை பேசினாரு...இங்கே எப்பவும் எதுவும் பிரச்சினையே நடக்காத மாதிரியும், ஏதோ நம்மளால அந்த பெருமைக் கெட்டுப் போன மாதிரியும் ரொம்பத்தான்"............

"சும்மாயிருடா, அதுதான் முடிஞ்சிடுச்சே...வா கிளாஸுக்கு போகலாம்"...

"தோ போடா வைஸிக்கு சப்போர்ட்டா நீ"...

"இவ்வளவுச் சொல்லுறாரே, முன்னே ஒரு தடவை இந்தக் காலேஜில தான் பெரிய சண்டைலாம் நடந்து போலீஸ் வந்து சமாளிக்க வேண்டியதாகிப் போச்சாம் உங்களுக்குத் தெரியுமா?"...

"எதுவும் சொல்றதுக்காக சொல்லாதே, என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதப் பாரேன். சும்மா அடங்குடா"....

"ஏய் நான் ஒண்ணும் சும்மாச் சொல்லல....எங்க அண்ணன் தான் சொன்னாரு"..

"அண்ணனோட க்ளாஸ்மேட் அரசுன்னு ஒருத்தன் பெரிய ரவுடியாம். யாருக்கும் பயப்படவே மாட்டானாம். யாரும் எதுவும் சொன்னால் போதும் பயங்கர அடி தடி தானாம். இவங்கல்லாம் எதுக்கு வம்புன்னு அவன் கிட்ட அளவாதான் பேசுவாங்களாம்"....

அப்புறம்......

ஏய் என்னடா கதை கேட்க ஆரம்பிச்சிட்ட, வா கிளாஸுக்கு போகலாம்.

விடுடா கொஞ்சம் நேரம் கழிச்சி போகலாம். நீ சொல்லுடா...போலீஸ் கேஸ் ஆகிற அளவுக்கு என்னாச்சு.

அவனை யாரோ கிண்டலா ஏதோ பேசியிருப்பாங்க போல , அடிச்ச அடில வம்பு பேசினவனுக்கு மண்டையில நாலுத் தையலாம்.அப்படி ரவுடிங்கலாம் இந்தக் காலேஜில இருந்திருக்காங்க.வந்துட்டாரு வெள்ளைக் கொடிய பறக்க விட்டுட்டு, பெரிய சமாதான தூதுவர்.

"இந்தக் காலேஜுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு" ..

வளனை இமிடேட் செய்தவுடன் மற்றவர்கள் சிரிக்கும் சப்தம் கேட்டது.

ஏண்டா அப்போ அந்த அரசுவை டிஸ்மிஸ் செய்திருப்பாங்க இல்ல?அடாத மழைப் பெய்தாலும் விடாமல் கதை கேட்கும் ஆர்வம் மற்றவனிடம்,

இல்லடா, அவங்க அம்மா வந்து மன்னிப்புக் கேட்டு எப்படியோ அவனை காலேஜ் விட்டு எடுக்க விடாம செய்துட்டாங்களாம். என்னதான் இருந்தாலும் அவன்லாம் படிச்சு உருப்பட்டுருப்பான்னு நினைக்கிற.....சான்ஸே இல்ல. இதுல சாருக்கு காதல் வேற....

காதல் என்னும் வார்த்தைக்கு அவ்வளவு ஈர்ப்பு சக்தி போலும் இப்போது அங்கு சுற்றியிருந்த கூட்டமே காதல் கதைக் கேட்கத் தயாரானது,

"செகண்ட் இயர் வரை அந்த ரவுடி இப்படி அடாவடிப் பண்ணுறதும் அவன் அம்மா வந்து மன்னிப்புக் கேட்கிறதுமா இருந்திருக்காங்க". 

கோரஸாக அப்புறம்....

அவன் தர்ட் இயர் படிக்கும் போது காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்த ஒரு பொண்ணைப் பார்த்து ஃபிளாட்டாயிட்டானாம்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.