(Reading time: 14 - 28 minutes)

புயலோடு வந்த தென்றல் - வித்யாரிணி

This is entry #54 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

storm

"வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே ... அவளை பார்த்து ஒரு மாதம்தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.. பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள் ... இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்...

 ச்சேச்சே.... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது ....

 அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்..அது அவளே தான்... கீதா....

 அதுவும் இந்த இரவு வேளையில், தன்னுடன் போனில் பேசவே தயங்கும் கீதாவா இது? .... அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை...என்றும் தோன்றுவது போல், இதுவும் அவளின் மாயை என்றே அவன் நினைக்க, ஆனால் நிஜம் தான் அவனோடு ஒத்துப்போக மறுத்தது....ஏனெனில் அவன் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே “(அந்த) அவனின்” இடுப்பை வளைத்து தோளில் முகம் வைத்து ஏதோ பெரிய நகைச்சுவையை கூற “(அந்த) அவனோ” தார் எந்திரம் உருள்வது போல் ஒரு சிரிப்பை சிந்தினான்.

 அவன் மூளை சிந்திக்க விடாமல் சிறை பிடிக்க, சிக்னல் மாறி அவனை விடுவித்தது. ஏதோ தோன்றியவனாக அவர்களை பின் தொடர்ந்தான். கீதா சென்றது ஒரு ஸ்டார் ஹோட்டல்.. அங்கே ஏற்கனவே இவர்கள் புக் செய்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தனர் மிகவும் நெருக்கமாக...

 அது ஒரு பப்.. பெண்களும், ஆண்களும் தங்களை மறந்து, நம்முடைய கலாச்சாரத்தை மறந்து ஆட்டம், பாட்டம் என்று களித்து கொண்டு இருந்தனர். விஜயிற்கு எப்போதும் இது போன்ற விஷயங்கள் பிடிக்காது. வீட்டில் உள்ள பெண்களை போல் தான் வெளியில் உள்ள பெண்களும், என்னும் கருத்து உள்ளவன். அங்கு நடக்கும் அத்து மீறல்கள் அவனை வெறுப்படைய செய்தன, இருப்பினும் அவனின் உயிர் காதலி(??!!) கீதாவை பற்றி அறிய வேண்டியது அவசியமாதலால் உள்ளே சென்று சற்று மறைவாக அமர்ந்து அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

 அவர்கள் இருவரும் சூழ்நிலை மறந்து தங்களுக்குள் பேசிக்கொண்டும் அத்துமீறி கொண்டும் இருக்க, இவனால் பொறுமையை கடைப்பிடிக்க முடியவில்லை. எனவே தன்னுடைய கைபேசி கொண்டு அவர்களை வீடியோ எடுத்தான். தான் எதற்காக இப்படி செய்கிறோம் என்று அவனாலேயே வரையறுக்க முயலவில்லை .சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் எழுந்து நடனம் ஆட தொடங்கினர், அதையும் தனது கைபேசியில் அடக்கியவன், சொல்லவொன்னா வெறுப்போடு வெளியேறினான். அவன் இதய துடிப்பின் வேகம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது, தறிகெட்டு ஓடிய வண்டி கடைசியில் இளைப்பாரியது உயர் தர மதுபான கடை ஒன்றில். இதுவரை மதுவையோ, மாதுவையோ தொடாதவன், ஒரு மாதுவின் துரோகத்தால் மதுவை நாடினான். முதல் முறை குடிப்பதினாலோ என்னவோ வரைமுறை இன்றி தொண்டையில் இறக்கினான். மதுவின் அளவு உடலில் கலக்க கலக்க மனம் கீதாவின் மேல் வன்மம் கொள்ள தொடங்கியது.

 கண்டதும் காதல், காணாமல் காதல் இது போன்ற எதிலும் அவனுக்கு நம்பிக்கை இல்லை, அதைவிட அவனுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பெற்றோர் பார்க்கும் பெண்ணை திகட்ட திகட்ட காதலித்து நிறைவான குடும்ப வாழ்க்கை வாழவே எண்ணினான். விஜய் பெண்களையே அறியாதவன் இல்லை, அவனுடைய அலுவலகத்திலும் சரி, இவனுடைய நட்பு வட்டத்திலும் சரி பெண்களின் அன்பை முழுமையாக பெற்றவன். நல்ல நண்பனாக, அவர்களின் நல விரும்பியாக, ஒரு சிலருக்கு சிறந்த அண்ணனாகவும் இருந்தவன், இன்று ஒரு பெண்ணால் அதுவும் இவன் மனதில் முழுமையாக படர்ந்தவளால், இதயம் கதற அமர்ந்திருக்கிறான் தனியே....

 பார் மூடும் நேரம் ஆனதால் சிப்பந்தி வந்து விஜயை கிளம்ப சொல்லவும் தள்ளாடிய படியே வெளியேறி பைக்கை கிளப்பினான். எங்கு போவது என்று அறியாமலேயே, வழியில் ஒரு காதல் ஜோடியை கண்டான். தன் காதல் முளையிலேயே கருகியதை எண்ணி வெறியேரியவனாக கீதாவின் வீடு நோக்கி சென்றான். நடு சாமத்தை கடக்கும் நேரத்தில், நாய்களின் ஓசை மட்டுமே அந்த இடத்தை சூழ்ந்து இருந்தது. வீட்டின் மதில் சுவர் ஏறி பின் பக்க வழியாக சென்று, அங்கிருந்த திண்டின் மேலேறி மரத்தை பற்றி கீதாவின் அறை பால்கனியை அடைந்தான். காற்றுக்காக சிறிதாக திறந்திருந்த கதவை திறந்து உள்ளே ஏறினான். உள்ளே கீதா உறங்கி கொண்டிருக்க, கட்டிலருகே நெருங்கினான். மதுவின் நெடி, துயில தொடங்கி இருந்த கீதாவின் நாசியை அடைய மெதுவாக கண் திறந்தாள்... அறையின் இருளில் உருவம் ஒன்று நிற்பதை கண்டு விளக்கை உயிர்ப்பித்தாள். மாடர்ன் முனிஸ்வரனாய் நின்றிருந்தான் விஜய். இதயம் ஒரு நிமிடம் அவளின் தொண்டை குழி வரை வந்ததோ என்று என்னும் அளவிற்கு தாறுமாறாய் துடித்தது.

சில நிமிடங்களில் தன்னை நிதானித்தவள் தேர்ந்த நடிகையாய் உருவெடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.