(Reading time: 18 - 35 minutes)

நேச(ய)ம் - M தேவி

This is entry #56 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

Life

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர்,தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்...

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே..இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்...

ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது...

அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்... அது அவளே தான்...!”

அதிர்ச்சியில் மூளை வேலை நிறுத்தம் செய்ய... அவன் கரங்களில் வண்டி தடுமாற ஆரம்பித்தது. முயன்று வண்டியை கட்டுக்குள் கொண்டுவந்தவன், மூளையையும் கொண்டுவந்தான். அடுத்து என்ன செய்ய என மூளை சிந்தித்து செயல்படும் முன் அனிச்சை செயலாக அவர்களை தொடர ஆரம்பித்தது மனமும்,வண்டியும்.

வலப்புறம் உள்ள ரோட்டில் திரும்ப வேண்டியவன் அதை விடுத்து அவர்களை தொடர ஆரம்பித்தான்.

வன் சுதாகரன். வளமான குடும்பத்தில் பிறந்தவன். அவனது குடும்பம் மூன்று தலைமுறைகளாக டாக்டர் குடும்பம். நகரத்தில் மிகப்பிரபலமான ஹாஸ்பிடல் அவர்களுடையது. குடும்பத்தில் எல்லோரும் மருத்துவர்களாய் இருக்க அவன் மட்டும் விதிவிலக்கு(காரணம்?). packers and movers கம்பெனி வைத்து நடத்துகிறான். ஆரம்பித்து இந்த ஐந்து வருடங்களில் அவனது கம்பெனியின் பெயரை சொன்னால் ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரியும் அளவிற்கு பிரபலமாகி இருந்தான். கடும் உழைப்பாளி. அம்மா,அப்பா,தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டவன். கொஞ்சம்... கொஞ்சம் என்ன நிறையவே பொசெசிவ் குணம் கொண்டவன்.

கடந்த மாதம் தான் ரியல் எஸ்டேட் நடத்தும் ஜனார்த்தனனின் மூத்த மகள் அம்ருதாவை அவனுக்கு பார்த்து முடிவு செய்தனர்.எல்லாவிதங்களிலும் அவன் குடும்பத்திற்கு பொருத்தமாக இருந்தவளை பார்த்தவுடன் பிடித்துப்போய் சம்மதித்தான்.

இந்த ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை மட்டுமே அவளிடம் பேசி இருக்கிறான். அது அவனது ஆர்வக்குறைவினால் அல்ல, இப்பொழுது தான் திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்கள் அதற்குள் அதிகம் நெருங்கி அவளை பயமுறுத்தி விட கூடாது, திருமணத்திற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பழகுவோம் என்ற எண்ணத்தில் தான். அவளுக்கு தெரியாது அவனது குணம் பற்றி... ஒன்றை பற்றினால் அதில் தீவிரமாக இருப்பவன். அன்பு செலுத்தினால் அதிகமாக செலுத்துவதும் வெறுத்தால் ஒரேடியாக வெறுப்பதும் அவனது குணம். பலமுறை அவன் தாயார் கூட இவ்வளவு தீவிரமாக இருக்காதே அது நல்லதற்கல்ல என்று கடிந்து கொண்டிருக்கிறார். அதனாலேயே இந்த ஒரு மாதத்தில் அவள் தன் எல்லாமுமாய் ஆன போதும் அவளை மிரட்டி விடக்கூடாது என அவளிடம் சற்று விலகி இருக்கிறான்.

அவளும் ஒன்றும் பழக அதிகம் ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை என்பது முக்கிய உண்மையும் கூட. ஆனால் அவனது அம்மாவிடமும், தங்கையிடமும் சகஜமாக பழகினாள். இல்லையேல் அவளுக்கு அவனை பிடிக்கவில்லை என்றே நினைத்திருப்பான். அவன் அவளை பற்றி அறிந்ததெல்லாம் அவன் அம்மா,தங்கை மூலமாகவே. குறிப்பாக அவன் தங்கை மூலமாக. இருவரும் தினமும் போனில் பேசுகின்றனர். பலசமயங்களில் அவனுக்கே சந்தேகம் தோன்றும், தன்னை திருமணம் செய்ய போகிறாளா? இல்லை தன் தங்கையையா? என்று.

ஒரு முறை கோபத்தில்(பொறாமையில்) தங்கையிடம் இதைகேட்க அவள் இரண்டு நாட்கள் அம்ருவிடம் பேசியதையும் சொல்லவில்லை, அம்ரு பற்றியும் சொல்லவில்லை. தவளை தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப தன் அவசரபுத்தியால் தங்கை மூலமாகவாவது அவளை பற்றி அறிந்து கொள்வதையும் கெடுத்து கொண்ட தன்னுடைய முட்டாள்தனத்தை நொந்துகொண்டு தங்கையை சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதையே சாக்காக வைத்து அந்த குட்டிச்சாத்தானும் அவனிடம் நன்றாக கறந்து விட்டது.

வளை பெண் பார்த்ததில் இருந்து நடந்த நிகழ்வுகளில் மூழ்கி இருந்தவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது அவளின் சிரிப்பு சத்தம். நேரங்கெட்ட நேரத்தில் சிந்தனையை அலையவிட்ட தன்னையே கடிந்து கொண்டு முன்னால் சென்ற இருவரையும் கவனிக்க ஆரம்பித்தான்.

அந்த வாலிபன் வலப்புறமாக திரும்பி அவளிடம் ஏதோ கூற அவன் கூறுவதை கேட்க வாகக முன்புறம் சாய்ந்து இருந்தவள் அவன் கூறியதை கேட்டு தோளில் விளையாட்டாக தட்டி ஒற்றை விரலை நீட்டி பத்திரம் காட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.

இதை பார்த்து கொண்டிருந்த சுதாகரனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. முதல் விசயம் அவள் தன்னைப்பார்த்து இப்படி இயல்பாக சிரித்ததில்லை. இரண்டாவது விசயம் தன்னிடம் பழக அவள் ஆர்வம் காட்டாதது. அதற்கு இவன் தான் காரணமோ? நெடு நாள் பழக்கமோ? பெற்றோரின் கட்டாயத்தினால் சம்மதித்தாலோ? என்று பலவாறாக எண்ணி குழம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.