(Reading time: 13 - 26 minutes)

எந்தன் காதல் நீ தானே..!  - சரண்யா நடராஜன்

This is entry #60 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

Love

காத்திருந்தாய் அன்பே..

எந்தன் காதல் நீ தானே..!

இந்த பாட்டு வரிகளை கேட்கும் போது எல்லாம் எனக்காகவே எழுதிருக்காங்கன்னு நினைக்க தோணும்..

என்ன ஒரு வித்தியாசம் நான் என் தியாக்காக பாட வேண்டியது..

முதல் காதல் அது எல்லோருக்குமே மறக்க முடியாத ஒரு பொக்கிஷம்.. சிலருக்கு அள்ள அள்ள குறையாத அன்பையும், சந்தோசத்தையும், சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு வேதனை, வலியையும் கொடுக்கறது தான் இந்த காதல்..

ஜெயிக்குதோ, தோக்குதோ முதல்ல வர காதல் எல்லாருக்குமே சம்திங் ஸ்பெசலா இருக்கும்..

அவளை விட்டு வந்ததுக்கு அப்புறம் இந்த உயிர் இன்னும் இந்த மண்ணில இருக்குன்னா அதுக்கு ஒரே காரணம் மறுபடியும் ஒரு தடவையாவது அவளை பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு தான்..

அவளை நான் வேணும்னா தனியா தவிக்க விட்டு வந்துருக்கலாம்.. ஆனால் என்னோட உயிருல, நான் பார்க்குற ஒவ்வொரு இடத்துலயும், என்னோட உடல்ல ஒவ்வொரு செல்லயும் இருக்கற அவளையும், அவளோட நினைவுகளையும் யாராலயும் பிரிக்க முடியாது.. அவளுக்கும் அப்டி தான் இருக்கும்..

கடைசி வரை என் கண்ணுக்குள்ள வச்சு அவளை பார்த்துப்பேன்ற அவளோட நம்பிக்கையை நான் ஓரே நிமிஷத்துல உடைச்சு இப்போ வரை அவ கண்ணுல உறுத்தற தூசியா மாறிட்டேன்..  எல்லாத்துக்கும் காரணம் நான் தான்.. அவ என் மேல வச்ச அன்பை, காதலை, நம்பிக்கையை உடைச்சிட்டு இப்போ அவ முன்னாடி போய் நான் மன்னிப்பு கேட்டா என்னை மன்னிப்பாளா..? என்னை ஏத்துக்குவாளா..?

கால சுத்தி வர பூனையாட்டம், எப்பவும் என் தியாக்குட்டி என்னையே சுத்திக்கிட்டு இருக்கறப்ப அவளோட அருமை எனக்கு தெரியலை.. அவளை விட்டு தள்ளி இருக்கறப்ப தான் அவளோட காதலையும், அவ இல்லைன்னா நான் இல்லைன்ற உண்மையும் புரிஞ்சுது..

அவ என் கூட இருக்கப்ப இல்லாத இந்த உணர்வு ஏனோ, அவளை விட்டு வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது.. இந்த உணர்வுக்கு பெயர் தான் காதல்னா ஆமா நான் அவளை காதலிக்கிறேன்.. அவ கண்ல காதலோட வரப்பலாம் எனக்கு அது தெரியல.. இப்போ எனக்கு அது புரியரப்ப அவ என்னோட இல்லை.. இப்ப வரைக்கும் எனக்காக அவ எவ்வளவு வேணா அழுதிருக்கலாம்.. ஆனால், இனி அவளை அழ விடாம பார்த்துக்கணும், உடைச்ச அவளோட நம்பிக்கைய மீட்டு எடுக்கணும் ஒரு முடிவோட தான் இந்த பயணத்தை நான் ஆரம்பிக்கிறேன்..

ஆனால் என் தியா....?

என் தியா என்ன பண்ணாலும் நான் அதை ஏத்துக்க தான் வேணும்.. ஏன்னா என்னால அவ பட்ட கஷ்டத்தை நானும் அனுபவிக்கணும்.. அவளோட வலியை நானும் உணரணும்னுதான் இந்த 2 வருசம் அவளை விட்டு பிரிஞ்சு இருக்கேன்.. அவளோட காதலை உணர்ந்து இந்த இரண்டு வருசம் அவளை பிரிஞ்சு இருக்கறதுக்கு நானே இவ்வளவு வருத்தப்படறனே.. என்னை பார்த்த நாளில் இருந்து இப்போ வரைக்கும் கிட்டத்தட்ட 7 வருசம் என் தியா எவ்ளோ கஷ்டப்பட்ருப்பா..?  இப்பவும் என் நினைவுகள்ள தான் ஒவ்வொரு நிமிஷத்தையும் செல்வழிச்சிட்டு இருப்பா..

சந்தியா இது தான் என்னோட தியாவோட பெயர்.. என்னோட காலேஜ்..

என்னோட சின்ன வயசு கனவு BE CIVIL..  இஞ்சினியரிங்ல எவ்வளவோ டிபார்ட்மென்ட்ஸ் இருந்தாலும் எனக்கு பிடிச்சது, என்னை இழுத்தது என்னவோ சிவில் தான்..

சின்னதோ, பெரியதோ ஒவ்வொரு கட்டிடத்தை பார்க்கும் போதும் அதை ரசிச்சு, அவங்களோட திறமையையும், கற்பனைத் திறனையும் பார்த்து ரொம்ப வியந்திருக்கேன்.. இந்த மாதிரி நாமளும் ஏன் பண்ணக்கூடாதுன்ற ஒரு யோசனை தான் எனக்குள்ள சிவில் படிக்க ஆசையை விதைச்சுது.. என்னை அதை நோக்கி பயணிக்கவும் வச்சுது..

ஒருவேளை கட்டிடக்கலையை பத்தி தெரிஞ்சுக்கணும், அதை படிக்கணும், அதுல நிறைய சாதனைகளை செய்யணும் இப்படியே என் புத்தியும், என் மனசும் அதை நோக்கியே பயணிச்சதாலேயே என்னவோ என் தியாவோட காதல் என் கண்ணுக்கு தெரியலை போல..

சந்தியாவும் BE தான்.. ஆனால் அவ CS.. 

அவ எப்போ என்னை பார்த்தா, எப்படி என்னை அவளுக்கு தெரியும்னு எனக்கு எதுவுமே தெரியாது.. ஆனால் அவளை நான் முதன் முதலாக பார்த்தது என்கிட்ட வந்து அவ காதலை சொல்லும்போது தான்..

நான் அதிகமா பொண்ணுங்க கூட பேச மாட்டேன்.. எப்பவும் என்னை சுத்தி என் ஃப்ரண்ட்ஸ் மட்டும் தான் இருப்பாங்க..  நான் தான் பேசமாட்டேன்.. ஆனால், என் ஃப்ரண்ட்ஸ் பொண்ணுங்க கூட பேசரத தடுக்கமாட்டேன்..

BE முதல் வருடம் படிக்கும் போதே என் கிட்ட வந்து அவளோட காதலை சொன்னா... அப்போ நான் பொண்ணுங்களோட பேசறதோட சரி.. என் கிட்ட வந்து ஒரு பொண்ணு அதும் எனக்கு யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு காதலிக்கிறேன் சொல்லும் போது நான் என்ன பண்ணிருப்பேன் யோசிச்சு பாருங்க.. எனக்கு வந்த கோபத்துக்கு அவளை நான் அடிக்காம விட்டதே ஆச்சர்யம் தான்.. என்னை நானே கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு சொன்னேன்..   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.