(Reading time: 17 - 33 minutes)

விடிஞ்சதும் இரவு - கோ.அருண்பாண்டியன்

This is entry #61 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

broken

ன் தூக்கத்தை கலைக்க, அலைப்பேசி போராடிக் கொண்டிருந்தது. நான்அரைத்தூக்கத்தில் என் வலது கையை மட்டும் தலையணையருகே அனுப்பினேன். சில நொடிகள் அலைப்பேசியை தேடி அலைந்த என் கைகளில் அலைப்பேசி சிக்கிக் கொண்டது. அலைப்பேசி தோல்வியை தழுவியது. நேற்று ஞாயிறு, நண்பர்களுடன் தடாக்கு சென்றிருந்தேன். இன்று, நள்ளிரவு இரண்டு மணிக்கு தான் நான் வீடு திரும்பினேன். நான் இன்னும் தூக்கத்திலிருந்து மீளவில்லை. சில நொடிகளில் ஆழ்ந்து தூங்கிப் போனேன்.

சில நிமிடங்களில், மீண்டும் அலைப்பேசியின் போராட்டம் தொடங்கியது. தூக்கம் கலைந்து என் இமைகள் மட்டும் பாதி திறந்தன. பொறுமையாக இடது புறம் திரும்பிப் படுத்தேன். என் தலையணைக்கு மேலே அலைப்பேசியின் போராட்டம் தீவிரமாக இருந்தது. இந்த முறை அலைப்பேசி வெற்றி பெற்று விட்டது. நான் எழுந்து அமர்ந்தேன்.

அலைப்பேசியில் நேரம் காலை ஒன்பது முப்பது. நான் பத்து மணிக்குள் என் அலுவலகத்தில் இருக்க வேண்டும். தவறினால், மேனஜரின் அன்பு மழையில் நனைய நெறிடும். அந்த மழையின் வெள்ளத்தில் நீச்சலடிக்க பழகியிருந்தேன் என்றாலும், பெரும்பாலும் அம்மழை என்னை மூழ்கடித்து விடும்.

உடனே என் மீதுள்ள போர்வையை அகற்றி, வேகமாக எழுந்து, காலை கடன் செலுத்தி, பல் துலக்கி, குளித்து முடித்து, சாப்பிட்டு, ஓட்டமும், நடையுமாய், சென்னை திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தேன்.

என்னிடம் பைக் இருக்கிறது. ஆனால், திருமங்கலத்திலிருந்து, வடபழனியில் உள்ள அலுவலகத்திற்கு பைக்கில் செல்வதை விட, பேருந்தில் செல்வதே சுலபமாகவும், அலைச்சல் குறைவாகவும் இருக்கும். அந்த டிராப்பிக்கில் பைக் ஓட்டுவது வீண் அலைச்சல். நான் வீட்டை விட்டு வெளியே வந்ததிலிருந்து என் கண் இமைகள் சுருங்கியே இருப்பதை என்னால் உணர முடிந்தது. என்னை சுற்றி புழுதிப் பறந்துக் கொண்டிருந்தது. அதனுடே வாகனங்கள் குதித்து, குலுங்கி, ஆடி சென்றுக் கொண்டிருந்தன.

திருமங்கலம் பேருந்து நிறுத்தம். சாலையை சற்று சிரமப்பட்டே கடந்தேன்.

என் அலைப்பேசியைப் பார்த்தேன். நேரம் பத்தாகிருந்தது.

உடனே, மேனஜரின் முகம் என் கண் முன் வந்து சென்றது. மிக அருகில் வந்து சென்றதால் சற்று பயந்து விட்டேன். பிறகு, சுதாரித்துக் கொண்டேன்.

வாகன நெரிசலில் ஆவடி முதல் தாம்பரம் வரை செல்லும் பேருந்து நகர்ந்து என்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

ஆவடி என்ற பெயரைப் பார்த்ததும் ஒரு சில நொடிகள் என் மன ஓட்டம் நின்றது. தினமும் பேருந்தில் ஏறும் போது அதன் பெயர் பலகையைப் பார்த்ததும் சில நொடிகள் என் மன ஓட்டம் நிற்பது இயல்பான ஒன்று தான்.

பொதுவாக, ஆவடி ஊர் பெயர், கேரளா ஊர் பெயர், கருப்பு நிற சுடிதார், கருப்பு நிற ஃப்ரேம் கொண்ட மூக்கு கண்ணாடி, வட்டவடிவ காதணி, சிறிய ஸ்டிக்கர் பொட்டு, சிலுவையில் அறையப்பட்ட ஏசு நாதர் கொண்ட சைன், நாய் குட்டி, போன்றவற்றைப் பார்த்தாலோ, அதைப் பற்றிக் கேட்டாலோ என் மனம் சில நொடிகள் தன் கட்டுப்பாட்டை இழக்கும். விசில் சத்தத்தோடு பேருந்து என் முன் நின்றது.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன் வெளியே ஒரு கூட்டம் முட்டி மோதி ஏறவும், ஒரு கூட்டம் முட்டி தள்ளி இறங்கவும் முயன்றுக் கொண்டிருந்தது.

எனக்கு வேறு வழியில்லை இதில் கண்டிப்பாக ஏறியாக வேண்டும். என் இரண்டு வருட பயண அனுபவத்தை பயன்படுத்தி, உள்ளே நுழைந்து என் தலைக்கு மேல் உள்ள கருப்பு நிற இரும்பு கம்பியை பிடித்து கொண்டேன். ஆனால், என்னுடைய ஒரு காலுக்கு மட்டுமே இடம் கிடைத்திருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், பைக்கிலே அலுவலகத்திற்கு செல்லலாமே என்று தோன்றும். ஆனால், அது இதை விட அலைச்சல் நிறைந்தது.

பேருந்து நகர ஆரம்பித்தது.

கண்டக்டர், கூட்டத்தை விலக்கி, முன் நகர்ந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தார். நான் டிரைவர் அருகே உள்ள படியின் அருகே நின்று கொண்டிருந்தேன். அவர், கியர் கம்பியைப் பிடித்து இழுத்து கியர் போடும் சத்தம், அந்த கூட்டத்தின் சத்தத்திலும், வாகன நெரிசலின் ஹாரன் சத்தத்திலும் கூட மிக தெளிவாக கேட்டது. கண்டக்டர் என்னருகே வந்து டிக்கேட் என்றார். நான் பார்ஸ் என்றேன். அவர் என்னை கடந்து சென்று விட்டார்.

பேருந்தினுள் பலர் பல மொழிகளில் பேசிக் கொண்டிருந்தனர்.

என்னை விட வயது குறைந்த ஒரு இளைஞன், அதே வயதுடைய அவனின் நண்பனுடன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரின் கால்களுக்கும் இடம் கிடைத்திருந்தது.

என் கால்களுக்கும், அவர்களின் கால்களுக்குமிடையே, ஒரு ஐந்து கால்கள் இடைவேளி இருந்தது.

அவன் சத்தம் குறைவாகத் தான் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், எனக்கு நன்றாக கேட்டது. அவன் நன்றாக, சரளமாக ஆங்கிலம் பேச தெரிந்தவனென்று நினைத்தேன். ஏனென்றால், அவன் பேசியது எனக்கு புரியவில்லை.

எனக்கு அருகிலே வலது பக்க இருக்கையில் கன்னடம் பேசும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.