(Reading time: 2 - 4 minutes)

சடங்கு - சித்ரா. வெ

This is entry 65 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

sadangu

21 வயதை அடைந்த அவளுக்கு சுற்றமும் நட்பும் சூழ அவனுடன் திருமணம்... பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் நுழைந்தாள் முதலிரவு அறைக்கு... ஒரு மாதம் அவனுடன் திகட்ட திகட்ட சந்தோஷமான வாழ்க்கை...

திடிரென்று ஏற்பட்டது அந்த விபத்து... முடிந்து விட்டது ஒருமாதத்திலேயே அவள் வாழ்க்கை... உடல் முழுக்க கட்டுக்களோடு பிணமாக தான் வந்தான் அவன் வீட்டுக்கு... அவனை கிடத்தி வைத்திருந்த இடத்தில் அவளையும் அமர வைத்தார்கள்... குங்குமத்தில் பெரிய பொட்டிட்டு... தலை நிறைய பூவை வைத்து... கை நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து... அவன் அருகில் அவளை அமர வைத்தார்கள்...

அவனின் இறுதி ஊர்வலமும் முடிந்துவிட்டது... ஆனாலும் 16 நாட்கள் அவள் அப்படியே தான் அமர்த்தப்பட்டிருந்தாள்... அதன்பிறகு அவளை அழைத்து சிறுவயதிலிருந்தே சூடிக் கொண்டிருந்த பூ, பொட்டு, கண்ணாடி வளையல் ஒவ்வொன்றாக அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது... இப்போதெல்லாம் வெள்ளைபுடவை இல்லையென்றாலும் நெற்றியில் வீபூதியை வைத்து அவளை விதவை கோலத்தோடு மூலையில் உட்கார வைத்து விட்டார்கள்...

சுமங்கலி பெண்கள் அவளை அந்த நேரத்திலே பார்த்து விட வேண்டுமாம்... திடிரென்று அவளை காணக் கூடாதாம்...

ஒவ்வொருவராக அவளை பார்த்து விட்டு சென்றனர்... அவள் அன்று முழுவதும் அப்படியே தான் உட்கார்ந்திருந்தாள்...

சிறிது காலம் போகலாம்... அவள் ஸ்டிக்கர் பொட்டு வைத்து கொள்ளலாம்... கண்ணாடி வளையல் இல்லாமல் வேறு வளையல்கள் அணிந்துக் கொள்ளலாம்... பிளாஸ்டிக் பூக்கூட வைத்துக் கொள்ளலாம்...

அவளது மன மாற்றத்திற்கு பிறகு அவள் இன்னொரு திருமணம் கூட செய்துக் கொள்ளலாம்...

ஆனால் அந்த நாட்களில் அவளின் மனவேதனை யாருக்கு தெரியும்... இதோடு நம் வாழ்க்கை அவ்வளவு தானா... என்று அந்த நேரம் அவள் மனது நினைத்திருக்கும் தானே... அப்படி அவளுக்கு தோன்றவில்லையென்றாலும்... அந்த சடங்குகள் எல்லாம் அவளுக்கு அப்படி நினைக்க வைத்திருக்குமே...

அந்த காலத்தில் இருந்து பெண்களுக்காக பல பேர் போராடி அதில் வெற்றியும் கண்டு இப்போது பெண்கள் பல வகையில் முன்னேறி இருந்தாலும்...

மூடநம்பிக்கையில் இதையெல்லாம் சடங்குகள் என்ற பேரில் செய்து விதவைகள் அதுவும் இளம் விதவைகளின் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் அதே பெண்கள்...

இதையெல்லாம் நேரில் பார்க்கக் கூட வேண்டாம்... காதால் கேட்டாலே போதும் திடுக்கிட வைக்கிறது.

This is entry #65 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.