(Reading time: 18 - 36 minutes)

வீட்டுல எலி வெளியில புலி - மதிவதனி

This is entry #71 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

eli - puli

டப் போச்சே…’

‘செம டைட்டில் சௌமி…’ என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டவள், கடகடவென கணினியில் டைப் செய்தாள். தன் கைப்பேசியில் இருந்து கம்ப்யூட்டரில் பதிவேற்றியிருந்த புகைப்படத்தை, சிறிது நேரம் தேடியவள்,...

‘சரியா ஃபைல் பண்ணாம எப்போவும் தேடுறதே உனக்கு வேலையா போச்சு’ முனகியவளின் கண்ணில், அவள் தேடிக் கொண்டிருந்த புகைப்படம் பட,... “யுரேக்கா…” என்றுக் கூவியவள்,... அதனைத் தான் டைப் செய்தவற்றோடு  இணைத்தாள்.

“ஆல் செட் சௌமி… நெட் கனெக்க்ஷன் வந்தவுடனே, வலைப்பூவில் போட்டுட வேண்டியது தான்” என்று தன் பதிவில் ஒரு கடைசி பார்வையை செலுத்தி விட்டு, கணினியை அணைத்தாள்.

வெட்டிப் பேச்சு…’ வலைப்பூவை சமீபத்தில் தான் ஆரம்பித்து இருந்தால் “சௌமி” என்று வீட்டினராலும், நண்பர்களாலும் பிரியமாக அழைக்கப்படும் சௌமியா. மென்பொருள் ப்ரோக்ராமராக சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த  சௌமி, மூன்று மாதங்களுக்கு முன் தான், வீட்டினர் முழு சம்மதத்துடன், தான் காதலித்த சஞ்சய்யை வெற்றிகரமாக கரம் பற்றினாள்.

திருமணம் முடிந்ததும், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு கடந்த மூன்று மாதங்களாக, முழு நேரக் குடும்பத் தலைவியாகவும், சஞ்சயின் ‘மியா’வாகவும்  இருக்கிறாள்.

உத்தராகண்ட் மாநிலத்தின் கோர்பெட் தேசிய பூங்காவை ஒட்டிய வன பகுதியில் இந்திய வனத்துறையின் துணை வனப் பாதுகாவல் அதிகாரியாக பணிபுரிகிறான் சௌமியின் காதல் கணவன் சஞ்சய்…!

அடிப்படையில் கால்நடை மருத்துவனான சஞ்சய், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, இந்திய வனத்துறையில் (IFS) தேர்ந்தேடுக்கப்பட்டவன். பயிற்சிக் காலம் முடிவுற்றதில் இருந்து இதுவரை வங்காளத்தின் சுந்தரவனக் காடு சரகத்திலும், உத்தராகண்டின் பல்வேறு பகுதிகளிலும் துணை வனப் பாதுகாவல் அதிகாரியாக பணியாற்றி உள்ளான்.

பாஷை தெரியாத ஊரில் கணவனோடு தனிக் குடித்தனம் வந்த சௌமியாவுக்கு, நண்பர்கள் வாரக் கடைசியில் புதுமணத் தம்பதியருக்கு அளித்த விருந்துகள், அவர்களோடு வெளியே சுற்றுவது என்று பொழுது நன்றாகவே ஜாலியாக போனது.

புது ஊர்… இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறம், தனிமை அத்தனையாக தெரியாத வகையில், ஆரம்ப நாட்களில் நேரம் கிடைக்கும் போது அருகே இருந்த சுற்றுலாத்தளங்களுக்கு கணவனோடு சென்று வர, அக்கம் பக்கம் வசிக்கும் பெண்களோடு காலையிலும், மாலையிலும் இயற்கையை ரசித்தவாறே நடைப்பயிற்சி போவது, என்று மகிழ்ச்சியாகவே இருந்தது சௌமியாவுக்கு.

சஞ்சய், தன் வேலையில் பிசியாகி விட,... அவனுடைய ‘மியா’வுக்கு பொழுது போகவில்லை. எவ்வளவு நேரம் தான் வீட்டை சுற்றியும், பொருட்களை இடம் மாற்றியும், நிதம் ஒரு புது சமையலை செய்கிறேன் என்றும் அலப்பறை செய்துக் கொண்டு இருப்பது…?

அவர்கள் தங்கி இருந்த குவார்ட்டர்ஸ் இருந்த இடம், நகர எல்லைக்கு அப்பால் காட்டுப் பகுதிக்கு அருகே இருந்தது. அக்கம் பக்கம் கடைகளோ, மால்களோ எதுவும் இல்லை. ஆரம்ப ஜோர் வடிந்த பின்னர்,... நேரத்தை போக்க வழியில்லாமல் இருந்தவளுக்கு, தெரிந்ததெல்லாம் கம்ப்யூட்டர் ஒன்று மட்டுமே…!

நேரத்தை நெட்டித்தள்ள ‘வெட்டிபேச்சு’ என்ற பெயரில் ஒரு வலைப்பூவை துவக்கினாள். தான் காண்பவற்றை, செய்யும் சமையலை, படிக்கும் தகவல்களை என்று பதிவுகளை இட ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் மந்தமான வரவேற்பு தான் கிடைத்தது.

அதனால், சமூக வலைத்தளம் மூலம் தன் தோழிகளுக்கு தன் வலைப்பதிவை பற்றி மியா தெரியப்படுத்த,... அடுத்த சில நிமிடங்களில் ஆளாளுக்கு ஒரு கமெண்ட்டை பதிய,... அதற்கு மியாவும் பதில் தர,... இப்படியே ஹனுமார் வாலாக, பதிவுகள் நீள,... இப்போது மியா, பயங்கர பிசியாகி விட்டாள்.

சலாடும் உப்புமா…” என்ற தலைப்பில், தான் செய்ய முயன்ற அரிசி உப்புமாவை பற்றியும், அதற்கு கணவனின் முகப்பாவனையையும் படமாக எடுத்து பதிவிட,... இங்கே வனத் துறை ஆஃபீசில் பணியில் இருந்த சஞ்சயின் மொபைல்  அலறியது.

“மச்சி,... இப்படியாடா மாறிடுவ…? அந்த உப்புமாவை எங்க வீட்டு செல்ல நாய் குட்டிக்கு கூட நாங்க வெக்க மாட்டோம். வாயில்லா ஜீவன் பாவம்னு பார்ப்போம்… அதைப் போய்… அப்படி நக்கி சாப்பிடுவியா…? என்னத்தான் லவ் மேரேஜ்னாலும் இப்படியா…?” நண்பன் ரகு வினவ,...

‘நேத்துக் காலையில நாம உப்புமா சாப்பிட்டது இவனுக்கு எப்படி தெரியும்’ என்று யோசித்த சஞ்சய், அதை கேட்டும் விட்டான்.

“நண்பா… எனக்கு மட்டுமில்லடா… முகநூல்ல இருக்க, உன் நண்பர்கள், அவங்களோட நண்பர்கள் எல்லாருக்கும் தெரியும்டா…!”

“என்னது… எப்படிடா…?”

“ம்ம்ம்… போய், உன் சௌமியாவோட ஸ்டேட்டசைப் பாரு.”

அவசரமாக அலுவலகக் கம்ப்யூட்டரில் முகநூலில்  நுழைந்தவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அவனுக்கு நூறு நோட்டிஃப்பிகேஷனுக்கு மேல் வந்து இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.