(Reading time: 18 - 36 minutes)

முதல் காதல் - ஸ்ரீ

This is entry #74 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

heart

முதல் அணைப்பு

முதல்  முத்தம்

முதல் குழந்தை

முதல் காதல்!!!!!!!

மேற்கூறிய அனைத்துமே நம் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று..அதிலும் காதல் எப்பொழுதுமே சுகமான ஒரு அனுபவம்…ஒருவரை காதலிப்பதும் ஒருவரால் காதலிக்கபடுவதும் வரம்…

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை வானொலியில் ரசித்தவாறே சமையல் செய்து கொண்டிருந்தாள் மீனு.என்ன மீனு காலைலேயே ஒரே காதல் பொங்கி வழிகிறது என்று சிரித்து கொண்டே வந்தாள் அவளது தோழி ஐஸ்வர்யா.

அவளின் ககேள்விக்கு ஒரு வெற்று புன்னகையை பதிலளித்தாள் மீனு.அவள் என்றுமே ஒரு புரியாத புதிர் தான் அஎன்று தன்னுள் எண்ணியவாறே அவளுக்கு உதவி செய்ய தயார் ஆனாள் ஐஷ்…

இவர்கள் இருவரும் சென்னை யின் பிரபல கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிபவர்கள்..இவர்களின் அழகிய நட்பு உருவானதும் இங்கு தான்..ஐஷ் அனைவரிடமும் நட்போடு பழகுபவள்,ஆனால் மீனு இரண்டு வார்த்தை தொடர்ந்து பேசினாலே பெரிய விஷயம்,.

ஐஷ் மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள்,ஆனால் ஆசிரியர் பணி அவளின் கனவு.மீனு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஆசிரமத்தில் வளர்ந்தவள்.இப்படி எந்த ஒரு ஒற்றுமை யும் இஅல்லாத இவ்விருவரரின் நட்போ மிகவும் அழகானது..

கடந்த ஒரு வருடமாக இருவரும் ஐஷூவின் சென்னை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.உயிர் தோழியாய் இருந்த போதும் ஒரு கணிசமான தொகையை வாடகையாய் கொடுத்தே தங்கி இருந்தாள் மீனு,அவள் குணம் அறிந்தவளாததால் ஐஷூவும் அதை மறுக்கவில்லை..

தே நேரம் கோவையில்,என்ன டா ஹரி இந்த நேரத்துல ஆபீஸ்ல இருப்பநு நெனச்சேன்..அதிசயமா வீட்டுல இருக்க என்றபடி தன் அத்தை வீட்டினுள் நுழைந்தான் ஜகன்…

இல்லடா திடீரென ஒரு ட்ரெய்னிங்காக இரண்டு மாசம் சென்னை போகசொல்லிடாங்க,அதான் கிளம்பிட்டு இருக்கேன் என்று சொன்னவனை புரியாமல் பார்த்தான் ஜகன்,.

ஏன்டா உன் குடும்ப தொழிலே அத்தனை இருக்கு நீ என்னடானா இப்படி ஊர் ஊரா சுத்தி கஷ்டபட்டு இருக்க…அதற்கு அழகாய் சிரித்தவன்,நான் எப்பவும் சொல்றது தான்டா,எனக்கான அடையாளம் நா சம்பாதிச்சதா இருக்கனும் பெத்தவங்க குடுத்ததா இருக்க கூடாது...

இது தான் ஹரி,பல கோடிகளுக்கு சொந்தகாரன்,29 வயது இளைஞன்.ஆண் எ ன்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் இலக்கணம்., ஆனாலும் தன் சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்ற கொள்கை உடையவன்..ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவன்..

என்னவோ டா ஹரி நாங்க எவ்வளவோ சொல்லிடோம் நீ கேக்குறதா இல்ல,உனக்குநு ஒருத்தி  வந்த அப்பறம் அவ சொல்லிதான் கேக்க போற…

அதற்கு வாய்ப்பே இல்லடா மாமா பையா,.என்னை புரிந்தவள் எப்படிடா எனக்கு எதிரா யோசிப்பா என்றான் புன்னகையுடன்..

என்னடா ஹரி உன் கான்ஃவிடன்ஸ் அ பாத்தா ஆள் ரெடியா இருக்கு போல என்றான் சந்தேக பார்வையுடன்..

ஏன்டா நீ வேற அப்படி ஒன்னு நடந்தா இந்நேரம் கல்யாணம் பண்ணி ஹனிமூன் போய்ருப்பேன்டா,உன்னை மாறி லவ்வே சொல்லாம சுத்திட்டு இருப்பேன்னு நெனச்சியா?

டேய் ஹரி என்று பதட்டமும் அதிர்ச்சியியுமாய் அழைத்தான் ஜகன்,.ரொம்ப டென்ஷன் ஆகாதடா,இன்னும் ஐஷூ கிட்ட உன் லவ்வ சொல்லல அததான் சொன்னேன்,.என்ன எதாவது Workout ஆச்சா??

டேய் ஒரு அண்ணன் மாறியாடா பேசுற என்றான் ஜகன்..

போதும் டா நல்லவனே..சரி நான் சென்னைல உன் ஆளு வீட்ல தான் தங்க போறேன்..எதாவது ஹெல்ப் பண்ணணுமா சொல்லு பண்ணிடலாம் என்றான் ஹரி தன் அக்மார்க் புன்னகை மாறாமலே...

சாரிடா ஹரி என்ற ஜகனை தட்டி கொடுத்தவன்,இதுல சாரி சொல்ல ஒன்னுமே இல்லடா..

அது இல்லடா சின்ன வயசுல இருந்தே என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நீ தான் உன்ட கூட சொல்லயேநு தான்..என்று இழுத்தான்..ஜகா எவ்வளவு க்ளோஸ் ப்ரெண்டா இருந்தாலும் லவ் ங்கிறது அவரவரோட பர்சனல் ஸ்பேஸ் டடா அது வேற இது வேற டா,.இதுவே பொண்ணு என் தங்கைநால தான் உன்ட கேட்டேன் இல்ல நீயா சொல்ர வர வாயே தொரந்து இருக்க மாட்டேன் என்று கூறி கண் சிமிட்டினான் ஹரி…

மனதில் எழுந்த நிம்மதியுடன் நண்பனை தழுவிக் கொண்டான்..ஆமா எப்போ எப்படடி டா கண்டுபுடிச்ச ஹரி என்று தன் சந்தேகத்தை கேட்டான்..ஆமா இது பெரிய ரகசியம்,அதான் அவ லீவுக்கு வந்தா குட்டி போட்ட பூனை மமாதிரி இங்கயே சுத்தி சுத்தி வரியே.,இதுல முகம் பூரா 1000 வாட்ஸ் பபல்ப் போட்ட மாறி பிரகாசம்  வேற இதெல்லாம் போதாதா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.