(Reading time: 36 - 72 minutes)

முதல் காதல் – மீரா ராம்

This is entry #76 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

heart

மாங்கல்யம் தந்துனா நேனா…” என்ற மந்திரம் காற்றில் கலந்து பரிக்ஷித்-ன் செவிகளை எட்ட, மணமேடையில் அமர்ந்திருந்த ஆணின் கரம் தன்னருகில் இருந்த பெண்ணின் கழுத்தில் தனது உறவை உறுதி செய்தது… அந்த பெண்ணின் கண்கள் சற்றே கலங்கியவாறு எதிரே சற்று தூரத்தில் தள்ளி நின்ற அவனிடத்தில் தஞ்சமடைய, அவனது விழிகளோ அதை எதிர்கொண்டு துயரத்தை வெளிப்படுத்தியது இதழ்களில் குறுஞ்சிரிப்புடன்… அவளருகில் இருந்த அவளது கணவனைப் பார்க்கையில், அவள் நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கை அவன் மனதின் உண்டானது… அந்த நம்பிக்கையோடு அவளைப் பார்க்க, அவள் விழிகளிலோ நீர்… அன்று இறுதியாக அவளை சந்தித்த நாளில் அவள் கொண்ட கண்ணீர் இன்று மணமேடையிலும் அவளது விழிகளில் நிறைந்திருக்க, செய்வதறியாது நின்றவனின் பார்வையில் அவள் அப்பாவின் மகிழ்ச்சியான முகம் தெரிந்தது… அவளது தந்தை முகம் எங்கும் பூரிப்பு… தனது கடமையை இனிதே நிறைவேற்றிவிட்ட திருப்தியில் ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் அவர்…

அவரின் சந்தோஷத்தை, ஆனந்த கண்ணீரை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்து அவர் தனது இரு கரங்கள் சேர்த்து கும்பிட, அவன் இல்லை என்பது போல் தலை அசைத்தான்… மனதில் துக்கம் இருந்த போதிலும், உதட்டில் புன்னகையை உலவவிட்டவனின் பார்வை மீண்டும் அவளிடத்தில் போக, சட்டென்று அவன் கால்கள் அங்கிருந்து நகர்ந்தன… மனதில் குடி கொண்ட வேதனை கண்ணீராய்த் தேங்கி அவனது விழி என்னும் அணைக்கட்டை உடைத்து கன்னங்களில் வழிந்து நெஞ்சில் வந்து தஞ்சமடைய, சுவாசிக்கவே சிரமப்பட்டான் அவன்… பெரும் பாரம் ஒன்று நீங்கமாட்டேன் என இதயத்தில் அமர்ந்ததாய் அவன் உணர, கால்கள் சென்ற திசையில் பயணம் மேற்கொண்டான் நடைபிணமாய் பகல் முழுவதும்…

ரவில், சோர்ந்து போய் கலங்கிய விழிகளுடன் வீட்டிற்குள் நுழைந்த போது, “ரிஷி….” என்ற அவனது தாய் சாரதாவின் குரல் கேட்டது…

“ம்ம்மா…” என தாயின் அருகே சென்றவன், “இன்னும் தூங்கலையாம்மா… நேரமாச்சு…. வாங்க போகலாம்….” என அவரின் தோள் மீது கை வைக்க, அவர் அவனது முகத்தையே பார்த்து, “அழுதியா…” என கேட்க, அவன் பதிலே சொல்லவில்லை… “சொல்லு ரிஷி… அழுதியா?...” என அவர் மகனின் முகம் பற்றிக் கேட்க, அவன் உடைந்து போனான்… “ம்ம்மா…. நான் ஆசப்பட்டவ….” என தாயைக் கட்டிக்கொண்டு எதுவும் பேசாமல் நின்றவன், நீரை மட்டும் சிந்தவில்லை… ஏனெனில் அவனது விழிகளில் நீரைக் கண்டால் அவர் உடைந்தே போவார் என அறிவான் அவன்…

“எல்லாம் சரி ஆகிடும் ரிஷி …. அம்மா இருக்கேன்ல உங்கூட…. ஹ்ம்ம்…” என அவர் அடக்க முடியாமல் கண்ணீர் சிந்திட, “ம்மா…. ப்ளீஸ்… வேண்டாம்மா… நீங்க வாங்க… தூங்கலாம்…” என அவரை அழைத்துக்கொண்டு அறையினுள் படுக்க வைத்துவிட்டு, தனதறையில் தூங்காமல் கட்டிலின் மேல் அமர்ந்திருந்தான் அவளை எண்ணி… சற்று நேரத்தில் நிலா வானத்தின் உச்சிக்கு வந்திருந்தது… அமைதியான அந்த சூழ்நிலையில் கண்ணாடி பாத்திரம் உடைந்த சத்தம் கேட்க, என்னாயிற்று என கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கண்ணாடி உடைந்ததிற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை… சாரதாவின் அறையில் கைவைத்தவன், உள்ளே செல்லலாமா என யோசிக்க, வேண்டாம் தூங்குபவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி இரண்டடி எடுத்து வைக்க, உள்ளே முனகல் சத்தம் கேட்டது… பட்டென்று கதவைத்திறந்தவன், தரையில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்து கிடந்த தாயின் அருகே ஓடினான்…

மருத்துவமனையில் அவரை அனுமதித்துவிட்டு “எங்கிட்ட இருந்து என் அம்மாவையும் பறிச்சிடாத கடவுளே…” என வேண்டிக்கொண்டிருந்த போது, டாக்டர் வந்து, “மைல்ட் ஹார்ட் அட்டாக்… இனி கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க… போதும்… பயப்பட வேண்டாம்…” என சொல்லிவிட்டு செல்ல, சாரதாவிடம் சென்றான் முற்றிலும் துவண்டு போய்… சிறு பிள்ளைபோல் அவரது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக்கொண்டவனின் விழி நீர் பட்டு கண் விழித்தவர், அவனது கலங்கிய தோற்றத்தைக் கண்டு, “ரிஷி… நான் என்ன சொன்னாலும் கேட்பீயா?...” எனக் கேட்க, அவனோ, “சொல்லும்மா….” என கூற, “நீ கல்யாணம் பண்ணிக்கணும்…” என பேரிடியை அவன் தலை மேல் இறக்கினார் அவர்…

“உனக்கு இது அதிர்ச்சியா இருக்கும்னு எனக்கு தெரியும்… ஆனா அம்மாவுக்காக ரிஷி… ப்ளீஸ்…” என அவர் கெஞ்ச, அவனால் அதற்குப் பின் மறுப்பை கூட எப்படி சொல்ல என தெரியவில்லை… “எனக்காக… ரிஷி… நான் உன்னை விட்டுப் போயிடுவேனோன்னு பயமா இருக்கு… நான் சாகுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு ரிஷி… நடக்குமா?... நான் ஆசப்படுறது?...” என அவர் அவனின் பதிலை எதிர்பார்த்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கேட்க, “நீ ஆசப்படுறதாவது நடக்கட்டும்ம்மா…” என சொல்லிவிட்டு தாயைப் பார்க்க, அவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் தன் மனதின் வலியை ஓரமாய் ஒதுக்கினான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.