(Reading time: 7 - 14 minutes)

உயிருள்ளவரை உன்னை தொடர்வேனடீ - புவனேஸ்வரி

This is entry #78 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

love

" ஹாய்  மாதவ் அங்கிள் " .. எதிர் வீட்டில் குடி இருக்கும் சிறுமி ஆர்த்தி கை காட்டவும் , எப்போதும் அவளை கொஞ்சிவிட்டு போகும் மாதவ் , இந்த முறை சிறு தலை அசைவோடு வீட்டிற்குள் புகுந்துகொண்டான் .. தலை வலித்தது அவனுக்கு .. இன்று நேற்றும் அல்ல , கடந்த மூன்று மாதங்களாய் அவனை தொடர்கிறது பல மர்மங்களும் தீராத தலைவலியும் .. அவன் தலைவலியை உணர்ந்து கொண்டது போல சமையலறையில் இருந்து காபியின் வாசம் நாசியை வருடியது .. எப்போதும் ஒரு திகிலுடன் சமையலறைக்குள் வருபவன் , இந்த தடவை தைரியமாகவே வந்தான் ..

யாரும் அங்கு இருப்பது போல தெரியவில்லை .. ஆனால் அவனுக்கு தெரியும் அங்கு இருப்பது யாரென்று ..

"  தேங்க்ஸ் " என்றபடி காபியை அவன் பருக போக , பாத்திரங்கள் தடதடவென விழுந்தது

" சரி சரி ஓகே ..தேங்க்ஸ் சொல்லல ...போதுமா ? ஏற்கனவே தலை வலிக்கிறது .. நீ வேற படுத்தாதே " என்றவன் காபியை குடித்து முகம் சுளித்தான் ..

" ஷ்ஷ்ஷ் .. சக்கரை போடலையா ? அதுக்குத்தான் பாத்திரத்தை தட்டி விட்டியா ? " என்று பேசிக்கொண்டே சக்கரையை சேர்த்து கொண்டான் ..தூரத்தில் இருந்து அவனை பார்க்கும் யாருக்கும் , அவன் பைத்தியக்காரனாகத்தான் தெரிவான் .. ஆனால் அவனை பைத்தியக்கரானாய் மாற்றுபவள் , யார்  கண்ணுக்கும் தெரிவதில்லை ..

" உன்கிட்ட நான் பேசணும் .. "

" ..."

" நீ இங்கதானே இருக்க ? "

" .."

" உனக்கு என்ன டீ வேணும் ?"

" ..."

" இது பாரு உனக்கு என் மேல பாசம் ஜாஸ்தின்னு எனக்கு தெரியும் .. ஆனா இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது .. என் அம்மா இன்னும் மூணு நாளில் இந்த வீட்டுக்கு வராங்க .. அவங்க நிச்சயமா உன்னை உணர்ந்திடுவாங்க .. அதுக்கப்பறம் நீ நிரந்தரமாய் உனக்குன்னு இருக்குற  இடத்துக்கு போய்தான் ஆகணும் .. "

" ..."

தலைவலி அதிகமானது அவனுக்கு .. அதற்குள் அவனது அறையில் சத்தம் கேட்டது .. அவனுக்கு மாற்றிக்கொள்ள உடை தயாராய் மெத்தை மீது இருந்தது .. ஹீட்டர் ஆன் செய்யப்பட்டு இருந்தது ..

" நான் வருவேன்னு முன்னாடியே தெரியுமா ? "

".."

" அது சரி வர வைத்தவளே நீதானே ? " என்று முணுமுணுத்தவாரு  குளியரையுக்குள் புகுந்து கொண்டான் மாதவ் ..

" தவா நீ ஏன் டா என்னை பார்க்க இவ்வளவு லேட்டா வந்த ?" அந்த வார்த்தை தான் மீண்டும் அவனது செவியை துளைத்தது .. மூன்று மாதங்களுக்கு முன் அவள் சொன்ன அதே வார்த்தை .. அவள்தான் ரூபினி ! மாதவின்  அன்பு தோழி .. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றால் , மாதவ் இன்றி ரூபினிக்கு ஓர் அணுவும் அசையாது .. காலையில் " குட் மார்னிங் " வாழ்த்தில் ஆரம்பித்து இரவு உறங்குவதற்கு முன் என்ன புத்தகம் படிக்கலாம்   என்பது வரை அனைத்தையுமே அவனை கேட்டு தான் செய்வாள் அவள் ..

" இது வேண்டாம் ரூபினி " என்று கூறினால் " சரி ஆதவ் " என்பாள் ..அதேபோல " இதுதான் டா சரியாய் இருக்கும் " என்றாலும் " ஓகே டா ஆதவ் " என்று தலையாட்டுவாள் ..

" நான் மாடியில இருந்து குதின்னு சொன்னா குதிச்சிட்டு தான் என்னனு கேட்பியா டீ ? " என்று பலமுறை கேலியாய் கேட்பான்  மாதவ் .. ஒரு சிறு புன்னகையுடன்  தலை அசைப்பாள்  அவள் .. அவ்வளவுதான் அவளது பதில் .. சிலநேரம் அவனுக்கே அவள் போக்கை கண்டு கோபமாய் வரும் சில நேரம் , இவளை பாதுகாப்பது தனது பொறுப்பு என்றே கூறி கொள்வான் மாதவ் ..

எல்லாம் சுமூகமாய் போய் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் அவனுக்கு பிடித்த நீல நிற புடவை அணிந்து அவனது வீட்டிற்கே வந்திருந்தாள் ரூபினி ..

" ஹே ருபீ  ..என்னடீ வரேன்னு சொல்லவே இல்லையே "

" சர்ப்ரைஸ் "

"வீட்டுல அம்மா இல்ல .. சமைக்கணுமேன்னு நெனச்சுட்டே இருந்தேன் ..நல்லவேளை  நீ வந்துட்ட .. வா வந்து சமைச்சு போடு " என்றான் உரிமையாய் .. மறுப்பேதும் சொல்லாமல் அவனுக்கு பிடித்த சமையலை சமைத்து வைத்தாள்  ரூபினி ..

" ஆஅ ... வாசம் தூக்குது ..என்னடி சமைச்ச ?"

" டேய் பறக்காத .. முதல்ல போயி உட்காரு ..நானே கொண்டு வரேன் "

" ஆ பசி பசி .. சோத்தை  போடு .."

"பறக்காத .. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பெர்மிஷன் கொடு "

" என்ன டீ ? "

" லைப் லாங் நான் உனக்கு இப்படி வடிச்சு கொட்டனும் .. சம்மதமா ? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.