(Reading time: 8 - 16 minutes)

பல நாள் கனவே.. - ப்ரியா

This is entry #79 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

heart

ந்த மருத்துவமனையில் தோழியை சந்தித்து விட்டு வெளி வருகையில் ராகவியின் மனதில் அப்படி ஒரு சந்தோஷம். அங்கே அவனை பார்ப்பாள் என்று அவள் சற்றும் எதிர்பார்த்து செல்லவில்லை. கடவுளின் தயவு என்று தான் சொல்ல வேண்டும். வேறென்ன சொல்ல?! எத்தனை வருடங்கள்?!

அவன் முகத்தை சரியாக பார்க்க அவளால் முடியவில்லை தான். அதில் ஏதோ சிறு வருத்தம் மனதோரம் எழுந்தாலும் அவள் அதை புறம் தள்ளினாள். இப்போது சந்தோசமாக அல்லவே இருக்க வேண்டும்?

அவனை பார்த்ததை  கொண்டாடாமல் அவள் அழுது வடிவதா? அழகாக தான் இருக்கிறன்.. மனம் சிலாகித்து கொண்டது. அவனை தூக்கி வைத்து துள்ளி ஆடியது. மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சி அப்படி ஒரு மகிழ்ச்சி. அப்பப்பா இப்படி அவள் மகிழ்ச்சியுடன் இருந்து எத்தனை நாட்கள் ஆகி விட்டது? அதும் இந்த சில மாதங்களாக அவள் படும் பாடுகள் சொல்லி மாளாது.

அவளின் காதலை அதன் தூய்மையை உணராமல், அது நடக்கும் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை இல்லாமல் தூற்றாதவர் எவரும் இல்லை. அதையெல்லாம் மனதில் போட்டு புழுங்கி அவ்வபோது நரேனிடமும் பவித்ராவிடமும் பகிர்ந்து இருக்க விடில்.

அவர்களுக்கும் இவள் இப்படி பைத்தியம் போல இருப்பது பிடிப்பது இல்லை தான் ஆனாலும் இவள் மனம் கோணாமல் இருக்க பக்க பலமாய் இருந்தனர்.

பவித்ராவிற்கு தான் நன்றி கூற வேண்டும், போன வாரம் உடம்புக்கு ஏதோ செய்ய, ஏதேதோ பட்டி வைத்தியங்களை செய்து பார்த்தவள் அதெல்லாம் தோல்வியில் முடிய மயங்கி விழுந்தாள்.

நல்ல வேலையாக அந்த நேரத்தில் சரியாக வந்த நரேன் தான் பவித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்தான். அவளும் ஒரு மருத்துவராக கொஞ்சம் கடிந்து விட்டு மருந்து மாத்திரைகளுடன் ப்ரீ அட்வைசும் வழங்கி சென்றாள்.

கட்டாயப்படுத்தி அவள் தானே இன்று ஒரு செக் அப் எதுக்கும் செய்து கொள்ளலாம் என வர சொன்னாள். அதனால் தானே வந்தேன். அவனை பார்த்தேன். அவனில் தொடங்கி அவனில் முடிந்தது நினைவுகள்.

ருத்துவமனையில் இருந்து வந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கும் வந்து விட்டாள். வீட்டில் அவள் அத்தை வந்து இருந்தார்.

"வாங்க அத்தை"

"ம்ம்ம் ஹ்ம்ம் உடம்புக்கு என்னமோ பண்ணுதாமே டா கண்ணா?! என்னம்மா ஆச்சு?"

அத்தை பரிவாக விசாரிக்க, விழிகள் கலங்கி அம்மாவின் நினைவு வந்தது. அம்மா இப்படி கரிசனம் காட்டியதே இல்லையே.

"ஒன்னும் இல்லை அத்தை எப்பவும் போல தான்.. நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடனுமாம், உங்களுக்கு யார் சொன்ன நரேன் தானே?"

"அவன விட்ட யாரும்மா சொல்லுவா?"

"ஐயோ அத்தை அந்த கொரங்குக்கு வேலையே இல்லையா?"

"அடி கழுதை என் முன்னாடியே என் பையனை திட்டுறியா நீ?"

"அப்படி தான் திட்டுவேன்.. உங்க பிள்ளை என்ன உசத்தியா?"

"சொன்னாலும் சொல்லாட்டியும் உன்ன விட அவன் தாண்டி உசத்தி"

இதை ராஜம் என்னவோ இயல்பாக தான் சொன்னார் ஆனால் ராகவிக்கு கண்ணீர் கட்டி கொண்டது. அதை கவனித்தவர் பதறி கட்டி கொண்டார்.

"ஐயோ என் ராஜாதி என் பட்டு வைரமே நீ தாண்டி தங்கம் எனக்கு உசத்தி, இந்த காலத்தில யாருடி இவ்வளவு பாசமா என்னை பார்த்துக்கற, அவனை பெத்திருந்தா கூட அவனை விட நீ தானே டி இந்த நிலைமையிலும் ஓடி ஓடி தாங்குற என்னை"

"ம்ம்ம்ம் ஹ்ம்ம் போங்க அவன் வரட்டும் வீட்டுக்குள்ள விட மாட்டேன் பாருங்க"

"என் ராஜாத்திக்கு கோவம் போல?"

"ஆமாம்" சிறு பிள்ளை போல அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவளை வாஞ்சையுடன் தடவி கன்னத்தில் முத்தமிட்டார் ராஜம்.

அவ்வளவு தான் அவரை கட்டி கொண்டு செல்லம் கொஞ்சி, கதைகள் பேசி அவர் ஊட்டி விட சாப்பிட்டு, தூங்கும் வரையில் அவரை உரசி கொண்டே திரிந்தாள் ராகவி.

ரவு உணவிற்கு பிறகு, மொட்டை மாடியில் நடை பயின்று கொண்டிருந்தவளை காண வந்தான் நரேன்.

"ஏய் என்னடி இப்படி பனில நடந்துட்டு இருக்க?"

"...."

"கவி.. கவி.. கண்ணம்மா"

சட்டென்று திரும்பியவள் விழிக்க,

"இங்க என்னை பண்ற" என மீண்டும் நரேன் கேட்க,

"நரேன் இங்க வாயேன், ஒன்னு சொல்லணும்"

"என்னடா?"

"இன்னைக்கு அவனை பார்த்தேன் நரேன்.. நான் சொன்னேன் ல யாருமே நம்பல, கடைசில நான் சொன்னது நடந்துருது பாரு.. அவன் எனக்கே எனக்காக வந்துட்டான் நரேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.