(Reading time: 16 - 31 minutes)

உயிரின் உயிராகினாய் - விக்னேஷ் கார்த்திக்

This is entry #80 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

diary

" ஹே நஷி பாப்பா "

" ஹே  கார்த்திகா "

" அடியே நஷிகார்த்திகா "  தோழிகள் அனைவருமாய் சேர்ந்து தன் பெயரை ஏலம் போட எரிச்சலாய் நிமிர்ந்தாள்  கார்த்திகா ..

" என்னங்கடீ .. புக் படிக்கிறேன்னு தெரியுதுல ? அப்பறம் ஏன்டீ தொந்தரவு பண்ணுறிங்க  ?"

" ஹலோ மேடம், நாம எல்லாரும் என்ஜாய் பண்ணுறதுக்காக டூர் வந்திருக்கோம் .. இங்கயும் புக் படிச்சா என்னடி அர்த்தம் ?"

" இது புக்கா ?"

" அப்படின்னு நீதானே சொன்ன ?"

" அடச்சை .. இது என் அப்பாவோட டைரி.. அதுவும் அவருடைய லவ் ஸ்டோரி ஸ்பெஷல்  .. அவருக்கு தெரியாம சுட்டுட்டு வந்தேன் "

" அடிப்பாவி .. இதெல்லாம் தப்பு இல்ல? "

" அவனவன் அடுத்தவன் பேஸ்புக் ஐ டீயை ஹேக் பண்ணுறான் .. நான்  ஜஸ்ட் ஒரு டைரியை தானே சுட்டுட்டு வந்தேன் ? அதுவும் எங்கப்பா டைரி எனக்குத்தான் சொந்தம் " என்று சிரித்தாள் அவள் .. " இருடீ அங்கிளுக்கு போன் பண்ணுறேன் " என்று தோழி ஒருத்தி மிரட்ட , அவர்களின் பேச்சை செவிமடுக்கும் நிலையில் இல்லாமல் டைரியில் மூழ்கி போனாள்  நஷிகார்த்திகா .. வாங்க நாமளும் அவங்க காதல் கதையை கேட்போம் ..

து ஒரு அழகான வீடு.. வீட்டுக்குள்ள அழகான நிலைக்கண்ணாடி…கண்ணாடி முன்னாடி அழகாய் தேவதை மாதிரி ஒரு பொண்ணு (வைட் வைட்… நான் தான் டைரக்டர் விக்கி பேசுறேன்..அது ஏன் ஹீரோயின்னா தேவதை மாதிரி தான் இருக்கனுமா?நோ நோ நம்ம கதை ஹீரோயின் இன்ட்ரோல பேய் மாதிரி தான் இருக்கனும்..ஸ்டார்ட் மியூசிக்). அந்த நிலைக்கண்ணாடியில் முன்னே தனது ஈரக்கூந்தலை உளர்த்தாமல் பேய்போல நின்று கொண்டிருந்தாள் நமது கதாநாயகி..ஏற்கனவே பேய் போல இருந்த தோற்றத்தை இன்னும் மெருகேற்றுவதற்காக, கண்களை அகல விரித்து வேடிக்கை பார்த்தவள், அதோடு நிருத்தாமல் ஃபோனில் செல்ஃபியும் எடுத்து கொண்டாள். சில நொடிகள் அந்த படங்களை பார்த்துவிட்டு “ த்தூ கன்றாவி” என்று அவளே கூறியப்படி படங்களை அழித்தாள். இது அவளுடைய அன்றாட வேலைதான் என்ற அனுபவத்தில்ஃபோனும் மௌனமாய் கண்ணீர்விட்டது.! அடுத்ததாய் நம்ம ஹ..ஹா..ஹாசினி இல்லைங்க, ஹசீனாவின் ஒப்பனை நேரம்..! உடனே எல்லாரும் டீ குடிக்க போயிராதிங்க ! அவ்வளவு நேரம் எல்லாம் ஆகாது..தனது அகன்ற விழிகளை எடுத்து காட்டுவது போல மை பூசிவிட்டு, வலது கையில் ஒற்றை வளையல் அணிந்து, தனது நீல நிற சுடிதாருக்கு ஏற்ற காதணியை அணிந்து திருப்தியுடன் தனது அழகை கண்ணாடியில் பார்த்து ரசித்து கொண்டாள் ஹசீனா.. மீண்டும் அவள் செல்ஃபி எடுக்க ஆரம்பிக்க

“ ஹேய் எரும..என்னடீ பண்ணுற ?காலேஜுக்கு டைம் ஆச்சு டீ “ என்று குரல் கொடுத்தார் அவளது தாயார். “இதோ வந்துட்டேன் மா “ என்று குரல் கொடுத்தவள்  வெண்ணிலவை மறைக்கும் கார்மேகம் போல, கருப்பு நிற பர்தா அணிந்து தனதழகை மறைத்தாள். ஹீரோயின் வந்தாச்சு.. அப்போ ஹீரோ வருனுமே!

னது பைக்கை ஒரே உதையால் ஸ்டார்ட் ( வைட் வைட் நானேதான் பேசுறேன்..ஹீரோயினுக்கே பேய்ன்னு பட்டம் தந்தாச்சு…அப்போ ஹீரோவுக்கு மட்டும் என்ன கெத்து ? நோ நோ அதெல்லாம் தப்பு.. ஸ்டார்ட் மியூசிக்..)

காலையிலேயே ஸ்டார்ட் ஆகாமல் போக்கு காட்டும் பைக்குடன் போராடி கொண்டிருந்தான் கிருஷ்ணா.. அலுவலகத்திற்கு தயாராகி இருந்த அவனின் தந்தை அவனை கண்டு சிரித்தார்.. “ என்னடா ? இன்னைக்கும் லேட்டா? இதுக்குத்தான் என்னை மாதிரி பஸ்ல போகனும்னு சொல்றது!”

“ செம்ம வெறுப்புல இருக்கேன்பா..ஒழுங்கா போயிரு”

“ அது ஒரு டுபாகூர், நீ ஒரு டுபாகூர்.. ரெண்டும் ஒன்னு சேர்ந்தா இப்படித்தான்” என்று மீண்டும் கேலியாய் சிரித்தார் கார்த்திக்.

“அப்பா ப்லீஸ்ப்பா.. ஆஃபிஸ்க்கு டைம் ஆகுது நீ கெளம்பு..என்னை கலாய்க்கிறேன்னு டைம் வேஸ்ட் பண்ணாதே..அதான் ஊரே சேர்ந்து கலாய்க்கிறதே” என்றான் கிருஷ்ணன் சமாதானமான குரலில்.

“ அப்படி சமாதானமா பேசிப்பழகு தம்பி ..நான் வரேன்”.. எப்படியோ ஒருவழியாய் பைக்கை ஸ்டார்ட் செய்து கிருஷ்ணன் கிளம்ப, சாலையோரம் தனது நண்பனுடன் நடந்து கொண்டிருந்த தந்தையைப் பார்த்து வண்டியை நிறுத்தினான். “ எப்படி இருக்கீங்க அங்கிள் ?” ..” நான் இருக்குறது இருக்கட்டும், ஏன்டா அம்பி, உங்கப்பா சட்டையில க்ரீஸ் தடவி இருக்கு.. இதையெல்லாம்  நீ கவனிக்க மாட்டியா ? நல்ல அப்பா நல்ல புள்ள போ” என்றப்படி அவர் விலக நாயகன் கமல்ஹாசன் போல நெஞ்சை பிடித்து கொண்டு சோகமாய் நின்றார் கார்த்திக்.. “அய்யோஅப்பா, ஆஃபிசுக்கு லேட்டாச்சுப்பா…போய் சட்டைய மாத்திட்டு போ..டாட்டா டேடி” என்று சிரித்துவிட்டு பைக்கில் சிட்டாய் பறந்தான் கிருஷ்ணா..10 வயதிலேயே தாயை இழந்த கிருஷ்ணாவிற்கு கார்த்திக் தான் உயிர்நண்பன்.

 ஆஃபிசுக்கு லேட்டாகிவிட்ட பதட்டத்தை கிருஷ்ணா வர, எதிரில் ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாள் ஹசீனா…காதலும் ஒரு விபத்துதான் ..இவர்களுக்கு ??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.