(Reading time: 28 - 55 minutes)

காதல் மொழி… விழியா?... இதழா?...  – மீரா ராம்

This is entry #81 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

love

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளேஅவளைப் பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லைஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவுகள் மட்டுமேஇப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்ச்சேச்சேஅவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக் பயணம் செய்வதாவதுஅவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்அது அவளே தான்…!”

பைக்கில் இருந்தவனுடன் சிரித்து பேசிக்கொண்டே திரும்பியவள் அவனையும் இனம் கண்டு கொண்டாள்… “இது அவன் அல்லவா?...” என அவள் மனம் வினவ, புத்தியோ “ஆம்…” என்றது…

“அவனை இங்கே பார்த்தது ரொம்ப நல்லதாப் போச்சு…” என்றெண்ணியவள், தன்னருகில் முன்னே அமர்ந்திருந்தவனின் தோளில் கை வைத்து, எதையோ பேசி வேண்டுமென்றே சிரித்து அலட்சியமாக கூந்தலை எடுத்து முன்னே போட்டாள் அவனை கண்டு கொள்ளாதவாறு…

அவளின் செய்கை அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருந்தவன், அவள் பின்னாடியே சென்றான் காரில்… அவளின் வீட்டிற்கு இரண்டு தெரு முன்னாடியே அவள் இறங்கிவிட, பைக்கில் அவளுடன் வந்தவனோ விருட்டென்று சென்றுவிட்டான் கை ஆட்டி சிரித்து விடைபெற்றபடி…

பின்னர் மெதுவாக வீடு நோக்கி நடக்க தொடங்கியவள், வீடு வந்த சேர்ந்த போது, அவன் அவளுக்கு முன்னதாக அங்கே இருந்தான்… வீட்டின் முன் காரின் மீது சாய்ந்து நின்றவாறு அவளையேப் பார்த்திருந்தவன், அவள் வந்ததும் அவளைப் பார்த்து சிரித்தான்… பதிலுக்கு அவள் முறைத்துவிட்டு, கேட்-ஐ திறந்து அறைந்து சாத்துவது போல் சாத்திவிட்டு உள்ளே செல்ல,

உள்ளிருந்து, “ஏண்டி அந்த கேட் உனக்கு என்ன பாவம் செஞ்சுச்சு?... எதுக்குடி இப்படி அதை கொலை பண்ணிட்டு வர்ற?... பேருல மட்டும் தான் மதி இருக்கு… செய்யுற செயலில் எங்கேயாச்சும் இருக்குதாடீ உனக்கு?...” என அவளை திட்டிக்கொண்டே வந்தார் அவளின் அம்மா… அவரின் திட்டு காதிலே விழுகாதது போல் தனதறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டாள் அவள்…

வெளியே வந்தவர், வாசலில் தனது வருங்கால மாப்பிள்ளை நிற்பதைப் பார்த்துவிட்டு, விரைந்து சென்று அவனை வீட்டுக்குள் அழைத்து வந்து அமர சொல்லிவிட்டு அவனுக்கு குடிக்க காஃபி போட சமையலறைக்குள் நுழையவும், அவளின் தந்தை அங்கே வரவும் சரியாக இருந்தது… வந்தவர் அவனிடத்தில் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது அவன் ஒரு புடவையை அவரிடம் கொடுத்து, அம்மா கொடுத்துவிட்டதாக சொல்லி கிளம்பும்போது, திரும்பி அவளைத் தேடின அவனது விழிகள்… அதை உணர்ந்த அவளின் அம்மா, அவளை அழைக்க முற்படும்போது நான் கிளம்புறேன் அத்தை… வரேன் மாமா… என அவன் சென்று விட்டான்… அங்கிருந்து நேரே தனது அலுவகத்திற்கு சென்றவன் தனதறையில் அமர்ந்து சில நாட்கள் முன்பு அவளை முதன் முதலில் சந்தித்த நாளை நினைவு கூர்ந்தான்…

காலேஜ் முடிந்து சந்தோஷமாய் வந்து கொண்டிருந்தவளை அவளது அம்மா வாசலிலே மறித்து, பின்பக்கம் வழியே அழைத்து சென்று, முகம் கழுவி வர சொல்லி, புது புடவை ஒன்றையும் கொடுத்து கட்டிக்க சொல்ல, அவள் விழித்தாள்… கோவிலுக்கு போகணும்மா, சீக்கிரம் கிளம்பு என அவர் விரட்டியதும், ஓ… என்றபடி புடவையுடன் சிறுது ஒப்பனையில் வந்தவளை ரசித்துக்கொண்டே, “அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க… போய் இந்த காபியை அவங்களுக்குக்கொடும்மா… அம்மாவுக்கு வேலை இருக்கு…” என அவள் கையில் அவற்றை திணித்துவிட்டு அவர் அகல, மெல்ல அதை ஹாலுக்கு எடுத்து வந்தவள் அனைவருக்கும் கொடுத்தாள்… அவளைப் பார்த்ததும், அனைவரின் கண்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள, நடப்பது எதுவோ சரியில்லை என அவள் உணர்ந்த தருணம்,

“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்ற குரல்கள் கேட்க, அதிர்ந்தே போனாள் அவள்… “உன் பேரென்னம்மா?...” என அப்போது ஒருவர் கேட்க, வேறுவழியில்லாமல், “ஸ்ரீமதிரா…” என்றாள் அவள் அதிர்ச்சியில் இருந்து பின் வாங்காமலே… “நல்ல பேர்…” என்றவர், “இது என் பையன்… பேரு… ஆரத்விரேன்… எம்பிஏ முடிச்சிட்டு இப்போ சொந்தமா பிசினெஸ் பண்ணுறான்…” என சொல்ல… அங்கே இருந்த ஒரு முதியவர், நாம இருந்தா சின்னஞ்சிறுசுங்க எப்படி மனம் விட்டு பேச முடியும்… ஏப்பா விரேன்… எழுந்திருப்பா… போ போய் பேசிட்டு வா… என்றதும் மற்றவர்களுக்கும் அது சரி என்று பட, இரண்டு பேரையும் ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அறையில் பேச வைத்து விட்டு, அனைவரும் வெளியே பேசி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.