(Reading time: 12 - 24 minutes)

புத்தம் புதுக்காலை... -  சின்ன. பத்மநாபன்

This is entry #86 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

morning

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளேஅவளைப் பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லைஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவுகள் மட்டுமேஇப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்ச்சேச்சேஅவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக் பயணம் செய்வதாவதுஅவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்அது அவளே தான்…!”

""யாருடன் போகிறாள்? எதற்காக?''

எனது போன் நம்பர் தெரியும். அவசரம் என்றால் கூப்பிட்டவுடன் எனது பைக்கை எடுத்துக்கொண்டு அவள் முன்நிற்பேன் என்று தெரிந்தும்...

போனவாரம் அவள் பேங்க்கிற்கு  அடுத்த பஸ் ஸ்டாப்பில் இருக்கிற கிருஷ்ணா பவனில் காபி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், ""வா, வசந்தி உன்னை என் பைக்கில் ஆபிசில் விட்டு விட்டுப்போகிறேன்'' என்றேன்.

""நோ கழுத்தில தாலி ஏறட்டும். அப்புறம் தான் உங்களோடு பைக் சவாரியயல்லாம். நான் நடந்தேபோய்க் கொள்கிறேன். ஓகே பை'' என்று நடையைக் கட்டினாள்.

""இப்போது, யாரோ ஒருத்தனோட பைக்கில் ""ஜம் மென்று'' உட்கார்ந்து கொண்டு போகிறாள்னா என்ன அர்த்தம்?''

தனக்குள் பேசிக்கொண்டான் வாசு.

""அண்ணே இந்தாங்க ஒரு டீ ரெண்டு பிஸ்கட்'' என்று டீக்கடைக்காரனிடம் இருபது ரூபாய் நோட்டை நீட்டியவன்  அவசரமாய் ரோட்டை கிராஸ் செய்து ஆபீஸ் பக்கம் நடந்தான்.

""அட, மீதிச் சில்லறையை வாங்கிக்கல'' வாசு சாருக்கு ஏதோ அவசர வேலையோ? நாளைக்கு வரட்டும்''!

""வசந்தியின் மொபைலுக்கு போன் செய்தான்''

""புத்தும் புதுக்காலை.... ட்யூனுக்குப் பதில்,'' நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. சற்றுநேரம் கழித்து டயல் செய்யவும்'' ஆபிஸ் வாசலிலிருந்து மீண்டும் டயல் செய்தான்''. ""சுவிட்ச் ஆப்ஃ  அல்லது  எல்லைக்கப்பால்'' என்கிற வழக்கமான மொபைல் மகாபுராணம் தொடர்ந்தது.'' ஆபிஸ்ல உட்கார்ந்ததும் பியூன் வந்து நின்றான்.

""சார், இந்தப்பாலிசுதாரருக்கு""செக்'' எழுதீட்டீங்களான்னு "'மேடம் கேக்கிறாங்க.

''""இல்லைன்னு போயிச்சொல்லு.''என்று வழக்கத்திற்கு மாறாக உரத்துச் சொன்னான்.

பி.யூ.ன்''சாருக்கு என்ன.""காண்டோ?''என்று முணுமுணுத்தபடி  நகர்ந்தான்.

போன் செய்வது பயனற்றது என்று பட்டது. வேர் ஆர் யூ.? என்று எஸ் எம் எஸ் அனுப்பமுனைந்தான்.  ""நாட் சென்ட்'' என்று வந்தது.

ரியாக நாலரை மணிக்கு பைக்கை எடுத்துக்கொண்டு மூலைக்குளம் பேங்க் காலணி ஐந்தாம் நம்பர்வீட்டு முன் நிறுத்தினான். வெளிகேட், உட்புறக்கதவு இரண்டிலும் பூட்டுக்கள்.'' வசந்தியின் அப்பா ரிடையர்ட் இராணுவமேஜர் மாலை நேரத்தில் வீட்டை விட்டு""எங்கேயும் போகமாட்டேன்'' ""ஒன்லி மார்னிங் வாக், அன்ட்தேட்டுவித் மை ஓய்ப்!! என்று ஒரிருமுறை சொன்ன ஞாபகம்.. நான்காம், ஐந்தாம் வீட்டில் உள்ளவர்களிடன் கேட்டுப்பார்த்தான். அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதில் அதிக ஆர்வம் காட்டும் ரிடையர்ட் கிளார்க் அம்புஜம் அம்மாதான்,

''காலம்பற ஒருபத்தரைமணிக்கு மேஜரும்,வீட்டம்மாவும் அவங்ககார்ல வெளியே போனாங்க. வசந்தி ஒன்பதரை மணிக்கு பேங்க்குக்குப்பூயிட்டா.

''""சரி, நா அப்புறம் வந்து பாக்கிறேன்.''பேங்க்கிலிருந்து ஏழுமணிக்குத்தான் கிளம்புவாள், ""சரி, கெழங்க ரெண்டும் எங்க போச்சுங்க?'' பேங்க்வாசலில் நின்று கொண்டு போன் அடித்தான்.""சாரி நீங்கள் டயல் செய்தவாடிக்கையாளர்.... '' போனை ஆப்செய்துவிட்டு,""பேங்க்கில் அவளைத்தேடினான். எதற்கும் மேனேஜரைக் கேட்போமே என்று அவர் அறைக்கண்ணாடிக்கதவைத் தட்டியபடி, ""மே ஜ கம் இன்'' ""கம்யூட்டர் கீபோர்டில் எதையோ டைப் செய்து கொண்டிருந்த'' கே.சி.சர்க்கார்'' கண்ணால்  ஜாடைகாட்டி  உள்ளே வரச் சொன்னார்.

""சார். எக்ஸ் கியூஸ் மீ?'' ""வசந்தி  ஆன்லீவ் ஆர்......?'' 

""ஒ, பஸந்தி, கான், ஆன் பெர்மி-ன். நாலோக்கோ பரும்''

""தேங்க்யூ'' வங்காளி மேனேஜர் யாருக்கும் பங்காளி வசந்தி பசந்தியாகி வருவாள். வரும் என்று அஃறிணை கூட பரும்' ஆகிவிட்ட சோகம். அவன் வெளியே வருவதற்குள் அறிமுகமில்லாதவரின் மொபைலில் அழைப்பு வந்தது.

"" ஹலோ, வாசு பேசுகிறேன்.''

எதிர்முனையில்  வசந்தி விசும்பலுடன். நான் நாங்க ""சத்யா கிளினிக், புஸ்ஸிவீதியில, ஐசியுவில

''""போன்  வை. இதோ வந்துகிட்டிருக்கேன்.

''""ஐசியுல, யாருக்கு என்ன ஆச்சு?''

அவனைப் பார்த்ததும் அவள்'' ஒவ்வென்று அழத்தொடங்கிவிட்டாள். பக்கத்திலிருந்த பிரசாந்த் தான் பேசினான்.

“சார் காலை பத்தஹ்ரை மணிக்கு வெங்கடா சுப்பாரெட்டியார் சிலைக்கிட்டே,ஆக்ஸிடென்ட். மேஜர் ரைட்லவந்திருக்கார். கடலூர் பஸ்டிரைவர் சைட்ல இடிச்சுட்டான். அவருக்கு மூளைல, வலது கை, கால்ல பலத்த அடி மூளைளைல ரத்தம்கட்டி இருக்காம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.