(Reading time: 16 - 32 minutes)

அவளுக்காக … ! - ராசு

This is entry #88 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

for u

வர் என்னைக் காதலிக்கிறாரா? இல்லையா?’ என்று வழக்கம்போல் வசந்திக்கு சந்தேகம் வந்தது.

இரவில் வீடு திரும்பிய சிவராமன் முகத்தில் இருந்து எந்த உணர்வையும் புரிந்துகொள்ள முடியவில்லை அவளுக்கு. எப்போதும் நடக்கிறதுதான். அமைதியாக அவளைப் பார்த்தவன்

“நான் அவளைப் பார்த்தேன்” என்றான்.

வசந்திக்கு அவன் யாரைப் பற்றி சொல்கிறான் என்று புரிந்துதான் இருந்தது.

ஏனெனில் திருமணமாகி இத்தனை வருடங்களில் அவன் அவளைத் தவிர வேறெவளைப் பற்றியும் பேசியதில்லை.

அதனால் அவளுக்கு எந்த மாதிரி தன் கணவனுக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் அவனுக்கு உணவு எடுத்து வைக்க கிளம்பிவிட்டாள்.

அவனும் அவளிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.

எப்போதுமே இப்படித்தானே.

தன் மனைவியிடம் தான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் பேசுவான். அதற்கு அவள் பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டான். ‘அவளைப் பற்றி தன் மனைவியிடம் பேசுகிறோமே! அவளின் உணர்வுகள் எப்படி இருக்கும்?’ என்று தெரிந்துகொள்ள கூட அவன் இதுவரை முயன்றதில்லை.

எல்லாவற்றையும் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிப்போவாள் வசந்தி. தன் மாமியார் சாரதாவிடமும் எதையும் காட்டிக்கொள்ள மாட்டாள்.

திருமணம் ஆவதற்கு முன்பே தன் மகனைப் பற்றி வருங்கால மருமகளிடம் கூறியவர் சாரதா.

“இதோ பாரும்மா. நடந்ததெல்லாம் நான் உன்னிடம் சொல்லிவிட்டேன். இனி உன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு உன்னது. அவனை உன் முந்தானையில் முடிஞ்சு வச்சுப்பியோ இல்ல தண்ணி தெளிச்சு விடுவியோ! அது உன் சாமர்த்தியம்” என்று கூறியவர் இதுவரையில் எதிலும் தலையிடவில்லை.

தன் பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொண்டு அவர் அக்கடா என்று ஒதுங்கிவிட்டார். ஆனால் மருமகள் சோர்ந்துபோகும்போது ஒரு தாயின் ஸ்தானத்தில் தன் தோள் சாய்த்து ஆறுதல் படுத்துவார்.

“எப்படி ஆயிட்டா தெரியுமா? மாசு படிந்த ஓவியம் போல அவ அழகை சோகம் திரை போட்டு மறைச்சிருக்கு. எப்படி வாழ வேண்டியவ?” அவன் சொன்ன விதம் கண்டு அவளால் கலங்கத்தான் முடிந்தது.

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்று புரியவும் நொந்து போனாள்.

தன்னோட இடத்தில் தன் கணவன் அடுத்த பொண்ணைப் பற்றி யோசித்தால் அவளுக்கு எப்படி இருக்கும்.

‘நான் வாங்கி வந்த வரம் இதுதான் போலும்’ பெருமூச்சு விட்டவள் சமையலறையில் ஒதுங்க வைக்கச் சென்றாள்.

டுக்கை அறையில் நுழைந்தவள் சிவராமன் கண்கள் மூடி படுத்திருந்தததை பார்த்து விட்டு அவளும் பேசாமல் கட்டிலின் அடுத்த பக்கத்தில் படுத்துவிட்டாள்.

கணவன் தூங்கவில்லை என்று அவளுக்கு தெரியும். நடந்ததை எண்ணிப் பார்த்துக்கொண்டிருப்பான். அவளாலும் தூங்க முடியவில்லை.

‘என்னடா இது? அடுத்த பொண்ணைப் பற்றி மனைவியிடம் பேசுகிறோமே! அவளுக்கும் மனசுன்னு தனியா இருக்குமே?’ என்று அவன் என்றுமே எண்ணி பார்த்ததாக தெரியவில்லை.

வசந்தி பெற்றோர் இல்லாமல் மாமன் வீட்டில் வளர்ந்தவள். அவள் பெயரில் மட்டுமே வசந்தம் இருந்தது. மிகுந்த இடிபாடுகளுக்கிடையில் வளர்ந்தவளுக்கு பள்ளிப்படிப்பிற்கு மேல் படிப்பு மறுக்கப்பட்டது.

சாரதா தன் மகனுக்காக பெண் பார்க்கப்போனபோது கட்டின புடவையோடு அனுப்பினால் போதும் என்று சொல்லிவிட திருமணம் முடிவானது. ஆனால் சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரியை விட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளின் மாமி ஒரு பிரச்சினையைக் கிளப்பி சிவராமன் வீட்டாரின் சுயமரியாதையைத் தூண்டிவிட திருமணம் நின்றுவிடும் நிலைமை வந்தது. தன் மாமியின் சூதை அறிந்த வசந்தி கலங்கிப்போனாள்.

கோயிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு சாரதாவைப் பார்க்க வந்தாள்.

“ஒரு வேலைக்காரியாய் உங்கள் வீட்டில் காலம் பூராவும் சேவை செய்யறேன். நான் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தயவுசெய்து என்னை அந்த நரகத்தில் இருந்து காப்பாத்துங்கள்.”

அவள் கால்களில் விழுந்து கதறினாள்.

பெண் குழந்தை இல்லாத சாரதா அவள் கதறலில் மனம் இளகிப் போனாள். எந்தப் பொண்ணை காட்டினாலும் மகன் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருந்ததால் அவனிடம் வசந்தியையே காட்டினாள். அவனும் மறுபேச்சு பேசாமல் அவளை ஏற்றுக்கொண்டான்.

ஆனால் அவளை அந்த வீட்டில் வேலைக்காரியாய் இல்லாமல் ஒரு மகாராணியாய்தான் நடத்தினர். சிவராமனும் தன் காதலைக் காட்டவில்லையே தவிர ஒரு கணவனாய் நடந்துகொண்டான். வீட்டின் பொறுப்பு அவளிடமே கொடுக்கப்பட்டது.

இருந்தும் என்ன செய்ய? கணவனின் காதல் கிடைக்கவில்லையே. ஒரு வேலைக்காரியாய் இருக்கிறேன் என்று கேட்டவள் எப்படி காதலை யாசிப்பாள். வாய் மூடி மௌனியானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.