(Reading time: 3 - 5 minutes)

சந்தோஷங்கள் - கிருத்திகா

icecream

ந்த ஐஸ் கிரீம் பார்லர் அது மட்டும் எனக்கு எப்போதும் பிடித்த இடம் 

பள்ளிபருவத்தில் இருந்து என் துக்கம் சந்தோசம் இரண்டிற்கும் ஆறுதல் தரும் , ஒரு ஸ்கூல் எதிரில் அமைந்து இருந்தது அந்த இடமோ சுவையோ எது என்று தெரியவில்லை ...... என்னை அங்கே இழுத்தது 

தாயில்லாத எனக்கு தாய்மடி அதுதான் .... நண்பர்களுக்கு ட்ரீட் எப்போதும் அங்குதான்..

இன்று மனமகி வேலையின் காரணமாய் வேறு இடம் சென்றாகிவிட்டது இப்பொழுதும் அந்தபக்கம் சென்றால் கண்டீப்பாக ஐஸ் கிரீம் வேண்டும் எனக்கு .. என் மனைவி கூட சிலமுறை என்னை கிண்டல் செய்துவிட்டாள் 

நாட்கள் செல்ல செல்ல மனதில் குழப்பம் கோவம் ஆத்திரம் அதிகரித்துவிட்டது 

இதோ இன்று காலை கூட வேறு ஏதோ ஒரு கோவத்தில் சாப்பாடு சரி எல்லை என்று தட்டை தூக்கி வீசிவிட்டு வந்து விட்டேன் 

வண்டி தன்னால் ஐஸ் பார்லர் நோக்கி பறந்து விட்டது 

ஒரு மங்கோ வாங்கினேன் எனக்கு பிடித்தத் கடைசி சீட்டில் உட்கார்ந்தேன் பின் மனதில் உள்ள குழப்பங்களையும் பிரச்சனைகளையும் நினைத்துகொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தேன் 

அண்ணா ஒரு வெண்ணிலா என்று கூறிய மழலை குரல் என்னை நிகழ கலதிரிக்கு கொண்டு வந்தது....

அவளுக்கு ஒரு 5 வயது இருக்கும் அவள் தாயின் கைகோர்த்துக்கொண்டு நின்டிருந்தாள் கடைக்காரர் கொடுத்தவுடன் சந்தோஷமாக வாங்கி கொண்டு எனக்கு எதிரில் இருத்த டேபிள் வந்து அமர்ந்தார்கள் ..

அந்த சிறுமி முகத்தில் நிரந்த சந்தோஷத்துடன் அதை பிரித்து  ஸ்பூனில் கொஞ்சம் அள்ளி நாக்கில் வைத்து வாயை மூடினாள்  பின் கண்களையும் மூடி கொண்டு ஜில் என்று பரவும் உணர்வை ரசித்து அது கரைந்து தொண்டை வழியே எறங்கும் சில்லிப்பை ரசித்து முழுங்கி பின் கண்திறந்தாள் 

அவள் தாயை பார்த்து புன்னகைத்தாள் பின் அவள் கடைசி சொட்டு வரை இவரே செய்து முடித்தாள் 

அவள் உண்ணுவதை பார்க்கும் போதே ஏன் நாக்கில் எச்சில் ஊறியது 

நன் ஏன் கையை பார்த்தேன் ஏதோ யோசித்து கொண்டே சாப்பிட்டதில் நான் உண்ட பிலவோர் கூட மறந்து விட்டது ..

அந்த சிறுமி சென்றுவிட்டாள்  ஆனால்  அந்த பிஞ்சு என்னக்கு மிகபெரிய உண்மையை உணர்த்தி சென்றது 

நம் வாழ்வில் நாம் வயது ஆகா ஆகா சின்ன சின்ன விஷயங்களை ரசிப்பதை நிறுத்தி விடுகிறோம் அது குழந்தை தனம் என ஒதுக்கி விடுகிறோம் நம்மில் உள்ள மிருகத்திற்கு தீனி போட்டு விடுகிறோம் குழந்தையை மறந்து விடுகிறோம் 

திருமணத்தில் கூட இதழை சுவைக்கும் முத்தங்கள் பெரும்பாலும்மனதை சுவைப்பதில்லை..... காரணம் , எப்போதும் நாம் பார்வையாளனாகவே இருக்கிறோம்.... , 

இமை மூடி உள்ளுணர்வை ரசிக்க மறந்துவிடுகிறோம்........ 

மனைவியின் சமையலை பாராட்ட வார்த்தைகளையும் அவளுக்கு வாங்க பூக்கடையும் தேடி பறக்றது வண்டி ..

நீங்களும் உங்களுள் இருக்கும் குழந்தையை தேடுங்கள் நீங்கள் துளைத்த சந்தோஷங்கள் திரும்ப கிடைக்கும் 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.