(Reading time: 3 - 6 minutes)

நனைந்தது நிலவு - கிருஷ்ண பாபு

nanainthathu Nilavu

'காதல்னா என்ன தெரியுமா?' தலையை ஆட்டியபடி கேட்டாள்.

'சொல்லேன்.. தெரிஞ்சுக்கறேன்!' ஆடும் அவளது தோடுகளை ரசித்தபடி அவன்.

'உயிரையே கொடுக்குற அளவு ப்ரியம்!'கண்களை பெரிதாய் விரித்தாள்.

'ம்?கொடுத்துட்டா போச்சு.. கல்யாணத்துக்கு அப்புறம்!'

கண்ணடித்து சொன்னான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிறுகதை - ஓர் வாழ்க்கை - நிஷா லஷ்மி

படிக்க தவறாதீர்கள்...

'ச்சீ!இதான் உன்கிட்ட பிடிக்காதது! நட்புக்கும் காதலுக்கும் உனக்கு வித்தியாசமே தெரியல!' உதடை சுழித்தாள்.

சீரியஸானான்.

'சரி,உனக்கு என்னலாம் பிடிக்கும் சொல்லு!'

'ஏன்?'

'சொல்லேன் ப்ளீஸ்'

'மழை,மலை,குழந்தை,பாட்டு, டான்ஸ்,புத்தகம்,குளிர்,  ,உறக்கம்,கனவு'

'ம்ம்ம்..டிபிகல் இந்திய பெண்  நீ!!!!'

லேசாய் அலுத்தபடி சொன்னான்.

'ஆமா,உனக்கு பேய்,பிசாசு,ஆவி இதெல்லாம் பிடிக்காதா?'

'பிடிக்கும்!பேய்க்கதை, பேய்ப்படம்லாம் ரொம்ப பிடிக்கும்!'

'நேர்ல பேயை பார்த்திருக்கியா?'

'லூசாடா நீ? அதெல்லாம் சுத்த ஹம்பக்!'

'சரி..பேயை நான் உனக்கு நிரூபிச்சு காட்டுறேன்! என்ன பெட்?'

'நீயே சொல்லித் தொலை!'

'என்னை லவ் பண்ணணும்!சரியா?'

'ஓஹோ!இதுக்குதான் இப்டி சுத்தி வளைச்சியா?'

'டீலா இல்லையா?

'ஓகே.. டீல் ..ஆனா ஏதாவது cheating வேலை பண்ணுன, மவனே! பத்ரகாளி ஆகிடுவேன்!'

'சரி,இன்னிக்கு நைட் பதினோரு மணிக்கு பைக்கில் உங்க ஹாஸ்டலுக்கு பின்னாடி நிற்பேன். வந்துடு!'

'ம்'

ரவு பதினோரு மணி.

ஹாஸ்டல் சுவரை ஹைஜம்ப்பி

அவனது  பைக்கில் மறுபடி ஹைஜம்ப்பி தொற்றினாள்.

விர்ர்ர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்ம்………

'இதென்னடா கேரிபேக்ல?'

'மட்டன்..அப்பதான் வாடைக்கு பேய் வரும்!'

'என்னடா ஓவர் பில்டப்பா இருக்கு!நிஜமாவே கொஞ்சம் பயமாருக்கு!'

'என்னை இறுக்க்க்க்க்கிப் பிடிச்சுக்கோ!' அதிர்ந்து சிரித்தான்.

முதலில் விலகி இருந்தவள் பைக் இருளைத் துளைத்து செல்லச் செல்ல வியர்த்து அவனை நெருக்கினாள்.

ஊரைத் தாண்டி இருந்த மயானக்கரையில் பைக்கை நிறுத்தினான்.

'வா'

'பயமாருக்குடா,திரும்பிப் போயிடுவோமே?'

'ஷ்ஷ்ஷ்ஷ்!அந்த கேரிபேக்கை எடு..செல்போன்ல விடியோ எடுத்துக்கிட்டே வா!'

நடுங்கியபடி செய்தாள்.

உள்ளே இருந்து கறியை எடுத்து எறிந்தபடியே நடந்தான்.

காற்றில் ஏதோ ஒரு மாறுதலான குளிர்..அவனுக்கும் இப்போது வேர்க்க ஆரம்பித்தது.

'டேய்,போதும்டா!போவோம்!' மெல்ல விசும்பலாய் கேட்டாள்.

'செல்போனில் இதை விடியோ எடு!'என்றான்.

டார்ச் அடித்தாள்.அது ஒரு சமாதி..

'எனக்கு ரொம்ப பயமா இருக்கு' குழறி குழறி பேசினாள்.

'சரி போவோம் வா'என்றதும் நிம்மதியாய் பைக்கை நோக்கி ஓடினாள்.

'சாவியைக் கொடு! இப்ப நான்தான் ஓட்டுவேன்!நீ அப்பர் பெர்த்துக்கு போ!'

சிரிப்பு வந்தது அவனுக்கு - நார்மலுக்கு வந்துவிட்டாள்..

றுநாள். காண்டீனில்.

'ஹாய் ஹனி!'

'எடுறா கைய'

கையை தட்டிவிட்டாள்.

'பேயை காட்டவே இல்ல, பிறகென்ன லவ்வு?'

'அப்டியா சொல்ற? சரி,செல்போனில் எடுத்த விடியோவை போடு!'

கலவரமாக பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.

'ஒண்ணுமே இல்லடா இதுல!'

'அந்த சமாதில என்ன பேர் எழுதிருக்கு?'

பார்த்து சொன்னாள்.

'ஜெயராஜ்'

'அவர் செத்து ரெண்டு வருஷம் ஆச்சு! இப்போ இதை பார்'

பேப்பரை நீட்டினான்.

'என்னது இது?'

'போனவாரம் தேர்தல்ல ஓட்டு போட்டவங்க லிஸ்ட்! இதுல அவர் பேரும் இருக்கு பார்! இப்போ பேயை நிரூபிச்சிட்டேன்ல!'

'மொக்கையா போடுற!இந்தா வர்றேன்!'

ஸ்கேலால் அவள் அடிக்க வந்ததும் ஓட ஆரம்பித்தான்...

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.