(Reading time: 4 - 7 minutes)

யாருக்கு யார் நன்றி சொல்வது? - வின்னி

Nandri

நான் அவரருகே வருகிறேன் அவர் என்னை முன் ஒருபோதும் பார்க்காத மாதிரி உன்னிப்பாக அவதானிக்கிறார்! 

அவருடைய அந்த பார்வை எனக்குப் பயமாக இருக்கிறது!

நாற்பது வருடங்கள் அவருடன் வாழ்ந்து விட்டேன்.எனக்கு மூன்று மணமுடிக்காத ஆண் பிள்ளைகள்.

அவர் மருத்துவ மனையிலிருந்து வந்த மூற்று மாதமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள்! கான்சர் முற்றிவிட்டது! நாங்கள் அவருக்கு சொல்லவில்லை! 

“அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை சந்தோசமாக வைத்திருங்கள்”. வைத்தியர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்.

அவர் என் கையைப் பிடிக்கிறார், அவர் கையிலருந்த தனது கடைசி உயிலையும் அதனுள் ஓர் கடிதத்தையும் தருகிறார். அவர் கை இறுகுகிறது. உயிர் பிரிகிறது.

ன்புள்ள அஞ்சலை,

நான் கடைசியாக எழுதுவது

எமது  குடும்ப வாழ்க்கையில், நீ எனக்குச் செய்த பணிவிடைகளுக்கு, நான் ஒரு போதும் உனக்கு நன்றி சொல்லவில்லை!.

ஆனால் நான் உன்னோடு வாழ்ந்த நாற்பது வருடங்களும் என் மனதுக்குள்ளே ஒவ்வொரு நிமிடமும் உனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இனி ஒரு பிறவி எடுத்தால் உன்னோடுதான் வாழ்வேன். அது நிட்சயம்!

என்னை மன்னித்துவிடு! -திலீபன்

பி.கு: எமது பிள்ளைகள் விரைவில் திருமண வாழ்க்கையில் இறங்குவார்கள். அவர்கள் விரும்பும் பெண்களைக் கைப்பிடிப்பார்கள். அவர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் தான் எனது அன்பளிப்பு.

என்னருமைப் பிள்ளைகளே!

உங்களுடைய வாழ்க்கைத் துணைவிகளை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வரும். கவனமாக தெரிவுசெய்யுங்கள் அம்மாவைப்போல் எதுவும் வந்தால் விட்டுவிடாதீர்கள். அப்படி ஒன்று இப்ப  வருவது கடினம்.

உனக்கு மனைவியாகப் போறவள் ஒரு பெண், அவளுக்கு ஒவ்வொரு நிமிடமும் நன்றி சொல்ல மறக்காதே! 

ஒரு பெண் தனது பெயரை மாற்றுகிறாள்

தனது  வீட்டை மாற்றுகிறாள்

தனது குடும்பத்தை விட்டுப் பிரிகிறாள் 

உன்னோடு வந்துவிடுகிறாள்

உன்னோடு சேர்ந்து ஒரு வீட்டைக் கட்டி எழுப்புகிறாள்

உனக்காக பிள்ளையைச சுமக்கிறாள்,

மகப்பேறு அவள் உடம்பை மாற்றுகிறது

அவள் அழகான உடம்பு பெருக்கிறது

மருத்துவ மனையில் தாங்கமுடியாத வலியால் துடிக்கிறாள்.

தனது உயிரையே பணயம் வைத்து உன் பிள்ளையை பெறுகிறாள்.

பத்து மாதம் சுமந்து அவள் பெற்றெடுத்த பிள்ளைகளும் உன் பெயரையே சுமககின்றன!

தான் சாகும்வரை,அவள் செய்யும் எல்லாம் ....சுவையான உன் விருப்பத்துக்கு ஏற்ற சமையல், வீட்டை பெருக்குவது முதல் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது , உன் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாகப் பேணுவது, உன் பெற்றோரைப் பராமரிப்பது, செலவுகளைச் சமாளிக்க வேலைக்குப் போவது, உன்னை சந்தோசமாக வைத்திருப்பது, குடும்ப நலனை பேணுவது ....எல்லாம் உனக்காக................சிலவேளைகளில் தனது பொழுதுபோக்கை, சந்தோசத்தை, அழகை, தனது துக்கங்களை, நோய்களை எல்லாம் கவனிக்காமல் தொண்டு செய்யும் அவளுக்கு நீ நன்றி சொல்ல மறந்து விடாதே ?

அவள்!

ழகானவள்

தரவு கொடுப்பவள்

னியவள், இன்பமூட்டுபவள்

ன்றேடுப்பவள்

ன்னை பராமரிப்பவள்

ன் உணவு தருபவள்

ப்போதும் உன் நலன் பேணுபவள்

ழ்மையிலும் உன்னைத் தொடர்பவள்

யம்  தெளிப்பவள்

ற்றுமையைப் பேணுபவள்

யாமல் பணி செய்பவள்

டதம் தருபவள்

அவள் உனது தாய், மனைவி, அக்கா, தங்கை மகள். உனக்கு கடவுள் கொடுத்த வரம்!    

ஆண்கள் பெண்ணுக்குச் செய்யும் கைமாறென்ன?, சிந்தித்துப் பார்!

அவளைக்  காதலித்து கைவிடுவது 

அவளைக் குடித்துவிட்டு அடிப்பது,

அவளை குடிக்காமலே திட்டுவது ,

அவள் விருப்பு வெறுப்புகளை அறியாமல் நீ நினைத்தை செய்வது,

வேறு பெண்ணை அழகென்று வர்ணிப்பது

சிலவேளை அவளைக் கைவிட்டு வேறு ஒருவளோடு  திரிவது, ஓடிப்போவது,

அவளது திருமணக் கனவுகளை சிதறடிப்பது

அவன் கொடுப்பது கட்டளை அவள் செய்யவேண்டியது கடமை என்று நினை ப்பது. 

என்னருமைப் பிள்ளைகளே!  

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று பாசாங்கு செய்வது  பெண்களது மூடத்தனம் என்று நான் நினைக்கிறேன்.

அவர்கள் ஆண்களை விட மிகவும் உயர்வானவர்கள், எப்போதும் அவர்கள் உயர்ந்தவர்கள்தான்.

நீ அவளிடம் விந்தணுக்களை கொடுத்தால் அவள் அவற்றை குழந்தையாக்கி விடுவாள். 

அவளிடம் ஒரு வீட்டைக் கொடுத்தால் அவள் அதை இல்லமாக்கி விடுவாள்.தானே இல்லத்தரசிஆகி விடுவாள். 

அவளிடம் பலசரக்கையும் காய்கறிகளையும்  கொடுத்தால் அவள் ஒரு சுவையான உணவாக்கி விடுவாள்.

அவளைப் பார்த்து புன்னைகைத்தால் தன இதயத்தையே தந்துவிடுவாள்

ஆமாம், அவள்  நீ கொடுப்பது எதையும் பெருக்கி பலதாக்கி விடுவாள்

ஆகவே நீ அவளைத்  தீண்டினால் உன்னை நிர்மூலமாக்கி விடுவாள் !

நீங்கள் இவற்றை உணர்ந்து நடந்தால், நீங்கள்தான் உண்மையான ஆண்கள்! - இப்படிக்கு

அன்புள்ள அப்பா.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.