(Reading time: 2 - 4 minutes)

உன்னோடுதான் வாழ்க்கை - கிருஷ்ண பாபு

Couple

ன்னைப் பிடிச்சிருக்கா?'

'அது…வந்து…'

'பரவாயில்ல,எதுவாக இருந்தாலும் சொல்லு!'

'தப்பா நினைக்காதீங்க!நான் ஏற்கனவே ஒருத்தனை விரும்புறேன்.வீட்டு கட்டாயத்துனாலதான் இங்கே வந்தேன்.'

சங்கடமான ஒரு மௌனம் நிலவியது சிறிதுநேரம்.

அவனே கலைத்தான்.

'அவன் என்னைவிட அழகா?'

'ஒருத்தரை பிடிக்க அழகு அவசியமில்லையே!'

'எங்கே வேலை பார்க்கிறான்?'

'உண்மையச் சொன்னா அவன் ஒரு ரவுடி!எல்லா ரோடும் சண்டை போடுவான்.'

'ரவுடியா?'

'ஆமா!ஆனா நல்லவன். சுதந்திரமானவன். நான்னா அவனுக்கு கொள்ளை ப்ரியம். நான் விரும்புற எதையும் திருடியாவது தருவான்.'

'well,இந்த மாதிரி பசங்களுக்குதான் இப்ப கிரேஸ்! இல்ல?are you not ashamed of it?'

'not at all... thats not a bad one than your job'

'போதும்..பிறகு ஏன் இங்கே வந்தீங்க?'

'ஏன்னா  எங்க வீட்ல யாருக்கும் அவனைப் பிடிக்காது. எனக்காக அவன் ரெண்டு தடவை அடிவாங்கினதை நினைச்சா இப்பவும் அழுகையா வருது. வேண்டாவெறுப்பாதான் இங்கே வந்தேன்.'கண் கசிந்தது.

'சரிசரி, நீ போ நான் ஏதாவது சொல்லி நிப்பாட்டிடுறேன்.'

'ம்' கிளம்பினாள்.

'ஒரு நிமிஷம்!'

'ம்?'

'சுதந்திரம் நிச்சயம் உயர்ந்ததுதான்! ஆனா எந்த நிலையிலும் பிறர் பொருளை திருடாமல் வாழ்வது அதைவிட betterதானே? பொருள் என்று உன்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.'

மௌனமாய் யோசிக்கத் தொடங்கினாள்.

'நம் அனைவர்க்கும் ஒவ்வொரு கடமை உள்ளது.இளமை வேகத்தில் அதை மறந்து தொலைப்பது நம் சந்ததிகளுக்கு நாம் செய்யும் துரோகம் அல்லவா?' மென்மையாய் கேட்டான்.

கம்பீரமான இவனது அழகும் பேச்சும் இயல்பான தன்மையும் அவளுக்கு மறக்கச் செய்தன முதல் காதலை.

'தப்புப் பண்ணிட்டேனோனு தோணுது!' குறுகுறுத்தாள்.

'தப்பா நினைக்கலனா ஒண்ணு சொல்லவா?'கண்ணடித்து கேட்டான்.

'ம்'

''தப்பு'ப்  பண்ணாத வரைக்கும் பிரச்சினை இல்லை!'

முறுவலாக சிரித்துக்கொண்டாள்.மெல்ல காதல் உலகில் அடியெடுத்து வைத்தனர் இருவரும்!

வெளியே இவள் வீட்டினர் பேசிக்கொண்டனர்.

'எனக்கு இங்கே நிற்கவே கூச்சமா இருக்கு! நான் கார்ல இருக்குறேன்.'

'சரி,mating முடிஞ்சதும் நானே ரோஸியை கூப்பிட்டு வர்றேன்.'

உள்ளே ரோஸியின் சத்தம் கேட்டது.

'லவ் லவ்'

ச்சே…

'வவ் வவ்'.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.