(Reading time: 16 - 31 minutes)

ஹாப்பி பெர்த் டே டூ யூ  - அன்னா ஸ்வீட்டி

Happy Birthday

ரிதா ரிது ரி என்றெல்லாம் இஷ்டபடி அழைக்கப்படும் மனுரிதாவுக்கு விழிப்பு வந்த போது அறைக்கு வெளியே கட முசா சத்தம். ஆமா பெரிசாவும் இல்லாம சிறுசாவும் இல்லமா…..என்னதுன்னு முடிவு செய்ய முடியாம ஒரு மார்க்கமா இருந்துச்சு சவ்ண்ட்….

கழட்டாம கைல போட்டுட்டே தூங்கிட்ட வாட்சை திருப்பி டைம் பார்த்தாள் ரிதா. இரவு 12 ஐ நெருங்கிக் கொண்டு இருந்தது…. என்னமோ டயர்டா இருக்குதுன்னு இன்னைக்கு உலக அதிசயாமா சீக்கிரம் தூங்கினா யாரோ ஒரு எலி எழுப்பி விட்டுடே…

ஹாஸ்டலில் தன் அறையைவிட்டு வெளியில் வந்து பார்த்தாள் அவள். ஓ மை காட்.!!!!! அந்த பெரிய ஹாலில் HAPPY BIRTH DAY TO YOU என  ஏற்றப்பட்ட  லேவண்டர் நிற மெழுகு வர்த்திகளால் எழுதப்பட்டிருந்தது…. அருகில் ஒரு பெரிய பூங்கொத்து….. கூடவே மூன்றடி நீளம் இரண்டடி அகலத்தில் ஒரு பெர்த் டே கார்ட்…

இவளுக்குத்தான் நாளை பிறந்த நாள்…அதாவது இன்னும் சில நிமிடங்களில்….. இவளுக்காக யார் இதை செய்ய முடியும்??? வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்க….அவசர அவசரமாக பால்கனி வழியாய் எட்டிப் பார்த்தாள்….போய்க்கொண்டிருக்கும் ஒருவனது பின் உருவம்தான் தெரிகிறது….

ஹாஸ்டல் வாசலில் நின்றிருந்த  காரில் ஏறும் போது சிதறிய சின்ன வெளிச்சத்தில் அவன் பக்கவாட்டு முகம் பார்வையில் படுகிறது…..யார் இவன்???

யாரா இருந்தா என்ன? பொறுக்கி!!! கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குள்ள திருட்டுத்தனமா வந்துட்டு போகனும்னா கண்டிப்பா பொறுக்கி தான்…. அதுவும் இத்தனை மணிக்குன்னா மகாபொறுக்கி!!!

ஆனா கிளம்பி போயேவிட்டவனை என்ன செய்யவாம்….? அவன் பூவையும் கார்டையும் திரும்பிக் கூட பாராமல் போனாள் அவள். ஏதோ அவளால முடிஞ்சது…

மறுநாள் அதிகாலையில் எழும்பும் போது இந்த நிகழ்ச்சியை அவள் நினைக்க கூட விரும்பவில்லை….பிறந்தநாள் அல்லவா…மகா உற்சாகமாய் ஆரம்பித்தாள் நாளை….. காலையில் முதல் வேலையாக பக்கத்திலிருந்த சர்ச்சுக்கு போனாள்….

அங்கிருந்த ப்ரேயர் ஹாலில் போய் கண் மூடி ஜெபித்து விட்டு எழும் போது பார்த்தால் அவளுக்கு அடுத்திருந்த சேரில் ஒரு வைட் அன்ட் ரெட் கலர் பிறந்தநாள் கிஃப்ட் ரேப்பரால் அழகாய் சுற்றப்பட்டிருந்த ஒரு பார்சல்….

சுர் சுர் என ஏற திரும்பிப் பார்த்தால்….அவன் தான்…..அந்த சேருக்கு அடுத்து தரையில் முழந்தாளிட்டு கண் மூடி ஆழ்ந்த ஜெபத்தில் இருந்தான்…..அது ஜெபமா நடிப்பா கடவுளுக்குத்தான் வெளிச்சம்…..

ஆனால் ஜெபிக்கும் ஒருவனை இழுத்துப் பிடித்து நாலு அறை வைக்க இவளுக்குத்தான் மனம் வரவில்லை….. பிறந்த நாள் அதுவுமா செய்ற முத வேலை இதாவா இருக்கனும்…? எழுந்த கோபம் எரிச்சல் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு விடு விடுவென வேகமாக வந்துவிட்டாள்….

அன்று ஆஃபீஸ் போய் அத்தனை பேரையும் பார்க்கவும் இந்த கடுப்பெல்லாம் மறைய மதியம் லன்சுக்கு ஃப்ரெண்ட்ஸுடன் அந்த ஹோட்டலுக்கு போன போது அவள் முழு மகிழ்ச்சியில் தான் இருந்தாள். ஆனால் அங்கும் அவனைக் காணும் வரைதான்.

முதல்ல எல்லாம் நல்லாதான் போச்சு….இவங்க கேங் எல்லோருமா அங்க இவங்களை ரிசீவ் செய்த வெய்ட்டர் காமிச்ச டேபிள்ள செட் ஆகி….ஆர்டர் குடுத்து அரட்டை அடிச்சுன்னு……எல்லாமே எஞ்சாய்மென்ட்தான்….

ஆனால் கடைசியில் பில்லை கேட்கும்போது …”இங்க இருக்கிற 5 டேபிள்ஸும் பெர்த்டே செலிப்ரேஷனுக்காக புக் செய்த டேபிள் மேம்… புக் செய்தவங்களே பில் பே செய்துடுவாங்க… “ என்ற பதில் கிடைக்கவும் பத்திக் கொண்டு வந்தது எரிச்சல் இவளுக்கு….

யாராய் இருக்கும் என பார்க்கும் முன்னமே யூகிக்க முடிந்தது….. அந்த அவன் தான் சற்று தள்ளி இருந்த டேபிளில் இருந்து எழுந்து நின்றான்…..

“இது எங்க பில்….” என இவர்களுக்கு எவ்ளவு பில் வரும் என யூகம் இருந்ததோ அந்த அளவு பணத்தை அங்கே எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள் ரிதா…. பப்ளிக் ப்ளேஸ்ல எதுக்கு சீன்….. ஆனா இருக்கு இவனுக்கு…..  அக்கா வீட்ல சொல்லி எதுக்கும் இவன கொஞ்சம் மிரட்டி வைக்கிறது நல்லது…. எவ்ளவு தூரம் இவளை ஃபாலோ பண்றான்…என்ன செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்???

மாலை ஆஃபீஸில் பெர்மிஷன் எடுத்து சற்று சீக்கிரமாகவே அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு போய் சேர்ந்தாள்…. வழக்கமா வீக் என்ட்ஸில் இங்க அவ குழந்தைகளுக்கு படிப்பில் ஹெல்ப் செய்ய வர்றது வழக்கம். இன்னைக்கு ஸ்வீட் கொடுக்க வந்திருக்கிறாள்….

 குட்டீஸ் எல்லாம் இவளைப் பார்க்கவும் ஏக குஷி….. ஸ்வீட் கொடுத்து, கொஞ்சி, கதை பேசி, கம்ளெயிண்ட் கேட்டு என எல்லாம் முடிந்து கிளம்ப நினைக்கையில் வழக்கம் போல் மனம் நிறைந்து இருந்தது…

அந்த காப்பகத்தை நடத்தும் ஜோதி அக்கா இவளிடமாக வந்தவர் “ரிதா இன்னைக்கு  டின்னர் வரையும் இருந்துட்டு போயேன்மா…. சரோஜா அக்க இன்னைக்கு லீவு…..யாரோ புதுசா ஒருத்தர் பெர்த் டே செலிப்ரேஷனுக்காக இன்னைக்கு நைட் பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொண்டு வர்றதா சொல்லியிருக்கார்மா…. பரிமாற நீயும் இருந்த ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்….பிள்ளைங்களும் சந்தோஷப் படுவாங்க….”

அத்யாவசிய தேவை என்றாலொழிய அக்கா இப்படி வாய்விட்டு கேட்டுவிடமாட்டார்கள் என இவளுக்குத் தெரியும்…..அதனால் மறுக்க முடியாமல் சம்மதித்தாலும்…..பிள்ளைகளோட சாப்பாடாச்சே…..சரி என்றுவிட்டாலும்….வருவது யாராக இருக்கும் என இப்போதே இவளுக்கு தெரிந்துவிட்டது…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.