(Reading time: 3 - 5 minutes)

காலி மனை - கிருஷ்ண பாபு

Land

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது என் மனைவியின் நீண்ட நாள்ஆசை.

ஒரு நல்ல நாளில் காலி மனை பார்க்க போண்டாமணி சைஸ் புரோக்கர்கள் இருவரின் நடுவில் பைக்கில் அம(ய)ர்ந்து சென்றேன்.

triplesல்தான் எத்தனை troubles? :(

டிக்கியின் மூன்று இன்ச் தவிர என் உடல்,பொருள்,ஆவி அனைத்தும் அந்தரத்தில் மிதந்தன..

மூக்குப்பொடி போடும் அரியவகை உயிரின(கிழ)ங்களில் ஒன்றான பின்சீட் போண்டா கால்வைக்க கூட foot stepsல் எனக்கு இடம் கொடுக்கவில்லை.

தொப்பியா சயனைட் குப்பியானு மயங்குற அளவுக்கு expiry date முடிஞ்ச cap போட்ட பைக் ஓட்டுநர் போண்டா திரேதாயுகத்தில் குளித்திருப்பார் போல..

இவர்களுக்கு நடுவில் என் உயிர் டெபாசிட் இழந்துவிடுமோ என்ற ஜுரத்தோடு நான்.

டேக்ஆஃப் ஆகுற விமானம் போல காலை தரைல உரசி உரசி மெல்ல தூக்கி பைக்காசனம் போட்டதுல முழங்கால் முதுகைத் தொட்டுடுச்சு! :(

ஒவ்வொரு ஸ்பீடுபிரேக்கர்லயும் A to Z அத்தனை கடவுள்ஸையும் கூப்பிட்டேன்.

'இன்னும் எவ்ளோ தூரம்யா போகணும்?'

'ரெண்டே நிமிஷம்ங்க'

தூரத்தைச் சொல்லாம நேரத்தைச் சொல்றானுக பாருங்க,அதுல இருக்கு இந்த புரோக்கர்களோட ராஜதந்திரம்..

குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல் தாண்டி பாலை வந்தடைந்தோம்.

பாலையை கொஞ்சம் குளிர(!)விட்டுட்டு சுத்திப் பார்த்தா ரிசல்ட்நாள் தேமுதிக கட்சி அலுவலகம் போல ஒரு ஈ காக்கா இல்ல.

தூரத்துல ஒரு சின்ன கட்டிடம் தெரிஞ்சது.இவங்க ஆபிஸா இருக்கும் போல..

'அங்கே ஒரு ஸ்கூல் வருது…பாலம் வருது…மில் குவார்ட்டர்ஸ் வருது..EB ஆபிஸ் வருது…'

Instant வாஸ்கோடகாமா ஆகி வழி சொல்ல ஆரம்பிச்சாங்க ரெண்டு பேரும்..

தலைமைச் செயலகம் ஒன்றைத் தவிர எல்லாமே 'வருது'லிஸ்ட்ல வருது.

'இது ரெண்டரை சென்ட்,இது மூணே முக்கா,அது நால்ரை சென்ட்'

ப்ளாட் கட்டங்களில் தாவித்தாவி பாண்டி விளையாடி டீடெய்ல்ஸ் சொன்ன அந்த சென்ட்ராயன்களை நிறுத்தி 'அந்த கார்னர் ஃப்ளாட் எவ்ளோ?'னேன்.

'அட,செம செலக்ஷன் சார்,டெவலப் ஆனதும் உங்க கடை பிராஞ்சை கூட இங்கே ஆரம்பிக்கலாம்!'

'தெய்வமே'ரேஞ்சுக்கு போய்ட்டாங்க.

திடீர்னு நிறைய பைக்ல doubles,triplesனு கூட்டம்..அந்த ஆபிசை நோக்கி போனாங்க.

போட்டி நிறைய இருக்கும் போலருக்கேனு நினைக்கும்போது விசில் சத்தத்தோட செம ஆர்ப்பாட்டமா ஒரு ஊர்வலம்.

என்னானு பார்த்தா… இறுதி ஊர்வலம்..

தூரத்துல இருந்தது இவங்க ஆபிஸ் இல்ல..எமதர்மன் ஆபிஸ் போல..

ரெண்டே நிமிசத்துல என் கார்னர் ஃப்ளாட் பின்னாடி பூவா கெடக்குது.

எந்த உணர்ச்சியும் இல்லாம அவர்களை பார்த்தேன்.

'அதுக்கு பாதை நம்ம ப்ளாட்டுகளுக்கு பின்னாடிதான்.ஒண்ணும் பிரச்னை இல்ல!'கோரஸ் பாடினாங்க.

வேற வழி இல்லாம 'சரி கெளம்புவோம்'னேன்.

வரும்போது அந்த பின்சீட் போண்டா கேட்குறாப்ல..

'ஆமா,உங்க ஆளுங்களுக்கு சுடுகாடு எங்கே சார் இருக்குது?'

'தெரியலீங்க'னேன்.

இதே பொழப்பா(?)தான் இருக்காங்க போல!

'தனி ஒரு மனிதனுக்கு ஃப்ளாட்

இல்லையெனில் சுடுகாட்டினை அழிப்போம்'கிற உயர்ந்த லட்சியத்தோடு இருக்கும் அவர்களோடு பைக்கில் மீண்டும் டேக்ஆஃபினேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.