(Reading time: 2 - 3 minutes)

இங்க எல்லாம் இப்படித்தான்... - கிருஷ்ண பாபு

Planet

க்கிரகமும் கிரகப்பெண்களும்  என்னை மயக்குகின்றனர்! எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நண்பா! இனி நான் பூமிக்கு திரும்புவதாக இல்லை!'

'பணமே எங்கள் கிரகத்தில் கிடையாது நண்பரே!' புதிதாய் கிடைத்த அக்கிரக நண்பன் சொன்னான்.

'பிறகு?'

'வாழ்நாட்கள்தான்  இங்கே பணம்.அதைச் செலவழிக்கவும் சம்பாதிக்கவும் ஏராளமான வழிகள் உண்டு இங்கே!'

'புரியவில்லையே!'

'வாழைப்பழம் ஒரு கிலோ ஒரு மணி நேரம். அதாவது வாங்குபவன் ஆயுளில் ஒரு மணிநேரம் குறையும்; விற்பவனுக்கு கூடும்!'

'ஆஹா!என் கையிருப்பு வாழ்நாட்கள் இன்னும் எவ்வளவு உள்ளன நண்பா?'

'நீங்கள் எங்கள் கிரகத்திற்கு புதுமுகம் என்பதால் இரண்டாயிரம் வருடங்கள் அறிமுகச்சலுகை ஆயுள் நண்பரே!'

'ஆஹா! இத்தனை ஒளியாண்டுகள் deep freezer கோமா கனவுகளுக்கு பலன் ஆரம்பித்துவிட்டது! இதோ வருகிறேன் அழகிகளே!'

''நில் நண்பா!ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்!'

'அதற்குள் என்னய்யா அவசரம்?வந்து கேட்கிறேனே!'

'இரண்டாயிரம் ஆண்டுகளில் ஒரு திருத்தம்!'

'சொல்லித் தொலையுங்கள்!'

'அதில் கிரக நுழைவு வரியாக கொஞ்சம் பிடித்திருக்கிறேன்!'

'எவ்வளவு?'

'ஐந்து செகண்……!'

'போய்த் தொலையுங்கள்!'

'முழுதாய் கேளுங்கள். இன்னும் ஐந்து செகண்டுகள்தான் உள்ளன உங்கள் ஆயுளில்!'

'அ…ட…ப்…பா…வி…க…ளா…!'

வாய் பிளந்தது.

.

.

.

.

.

.

.

.

.

'சார்…சார்… சீக்கிரம் பணத்தை எடுங்க! வண்டி நிறைய நிக்குது பாருங்க!'

என்னை உலுக்கினான் பெங்களூர் நுழையுமுன் இருந்த கடைசி டோல்கேட் நுழைவு வரி வசூலிப்பாளன்..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.