(Reading time: 9 - 17 minutes)

நிதி பணம் ரூ.20000 - மலர் மாணிக்கம்

Money

நான் ஒரு கல்லூரி மாணவன். கல்லூரி விடுமுறை நாட்களில் எதாவது வேலைக்கு போவது வழக்கம். அப்படித்தான் இன்றும் எலக்ட்ரிசன் ரூபன் அண்ணனோடு மகிழாபுரம் மாதா கோவிலுக்கு வந்தேன்.

கோவிலில் ஜெபம் முடிந்து எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். கிட்டதட்ட எல்லோரும் வெளியே வந்தபின், நானும் எலக்ட்ரீசன் ரூபன் அண்ணனும் செருப்பை கழற்றிவிட்டு கோவிலுக்குள் போனோம். எங்களுக்கு எதிரே ஒரு வயதான தாத்தா நடந்து வந்தார். கையில் பெரிய சாவி கொத்து வைத்திருந்தார். பார்ப்பதற்கு கோவில் பராமரிப்பாளர் போலிருந்தார்.

‘வாங்க ரூபன்”

‘வணக்கம் தாத்தா. எங்க இருக்க லைட் எரியல?”

‘வாங்க” என கோவிலுக்கு உள்ள கூட்டிப் போய் மாதா சிரூபத்திற்கு மேலிருந்த இரண்டு லைட்டையும் காட்டி ‘அந்த ரெண்டு லைட்டும் தான்ப்பா எரியல சீக்கிரமா பாருங்க. பன்னிரண்டு மணிக்கெல்லாம் கரண்ட் போயிரும்.”

‘சரிங்க தாத்தா” என்று ரூபன் அண்ணன் ஏணியை எடுத்து வந்து சுவரில் சாற்றி வைத்து மேலேறி ஒரு லைட்டை கழற்ற ஆரம்பித்தார். நான் ஏணியை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டிருந்தேன்.

கோவிலுக்குள் யாருமில்லை என்று தான் முதலில் நினைத்தேன். கோவிலின் மத்தியில் வாலிப பசங்களும், பெண்களும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள் சுமார் இருபது பேர் இருக்கும். அவர்களின் முன்பு பைபிள், அதற்கு மேல் டைரியும் பேனாவும் வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு இளையோர் குழு அல்லது ஏதாவது நற்பணி மன்ற கூட்டமாகவோ இருக்கலாம் என தோன்றியது. எல்லோரும் பக்கத்தில் இருப்பவர்களோடு அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள்.

இப்போது அந்த வாலிப பசங்களின் கூட்டம் அமைதியானது. நடுவிலிருந்த ஒருவர் பேச ஆரம்பித்தார் பார்ப்பதற்கு கூட்டத்தின் தலைவர் போலிருந்தார்.

நான் ஏணியை பிடித்தக்கொண்டே கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ‘எல்லோருக்கும் இனிய காலை வணக்கம் உங்க எல்லாரையும் அன்னை தெரசா இளையோர் கூட்டத்திற்கு அன்போட வரவேற்கிறேன். முதல்ல எல்லோரும் ஜெபம் பண்ணுவோம்” என்று அவர் சொல்ல,

அனைவரின் தலையும் தரையை பார்த்து கவிந்தது. சில மணிதுளிகள் ஜெபம் செய்து விட்டு நெற்றியிலிருந்து மார்பு வரை சிலுவை குறியிட்டு நிமிர்ந்தனர்.

 தலைவர் சற்று குரலை உயர்த்தி, ‘ அடுத்த வாரம் நம்ம இளையோர் இயக்கத்தோட 10வது வருசம். அதனால அதுக்கு நிறைய புரோகிராம் பண்ண போறோம்;” என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனார்.ஆனால் அவர்கள் அனைவரும் தலைவரிடம் எதையோ எதிர்பார்த்தபடி பார்த்தனர்.

அதை புரிந்து கொண்ட தலைவர், ‘நீங்க என்ன எதிர்பார்க்குறீங்கன்னு புரியுது.ஒரு வருஸமா எவ்வளவு நிதி சேர்த்திருக்கோம்? அந்த தொகை எவ்வளவுன்னு தெரியனுமா?” என்று கேட்க

அனைவரும் ஒரே குரலாக ‘ஆமாம்ம்ம்……..…… என்றனர்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நம்ம செயலாளர் சொல்வாங்க” என்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்.

ரோஸ் கலர் சுடிதார் அணிந்த பெண் உட்கார்ந்த இடத்திலேயே சற்று நிமிர்ந்து, ‘எல்லோரும் ரொம்ப எதிர்ப்பார்ப்போடு இருக்கிங்கன்னு பார்த்தாலே தெரியுது. கடந்த வருடம் பிறருக்கு உதவணும் என்கிற நோக்கத்தோட நாம சேர்த்த நிதி பணம் எவ்வளவு தெரியுமா? ஐந்தாயிரமில்ல, பத்தாயிரமல்ல, பதினஞ்சாயிரமும் இல்ல. இருபதாயிரம் ரூபா” என்று சொன்னதுமே,

அனைவரும் வேகமாககை தட்டி, ரொம்ப சந்தோசப்பட்டனர்.

‘தம்பி, டே தம்பி”(மேலிருந்து எலக்ட்ரீசன் ரூபன் அண்ணன்)

 ‘சொல்லுங்கண்ணே.”

‘ஏணியை நல்லா பிடிச்சிக்கோ” என்று இரண்டு லைட்டையும் கழற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்தார்.

‘;தம்பி, இந்த ரெண்டு லைட்டையும் கழற்றி வையுங்க. கொஞ்சம் ஜாமான் வாங்க வேண்டியிருக்கு, நான் போய் வாங்கிட்டு வாறேன்” என்று ரூபன் அண்ணன் கிளம்பிபோனார்.

இப்போது எனது கவனம் முழுவதும் அந்த இளையோர் கூட்டத்திற்குள் போனது. அங்கே தலைவர் ‘ இப்படி மௌனமா இருந்தா எப்படி, நிதி பணம் இருபதாயிரத்தை எப்படி யூஸ் பண்ணலாம்னு ஐடியா குடுங்க”என்றார்.

அதற்கு சிவப்பு கலர் சுடிதார் போட்ட பெண், ‘அண்ணே! அந்த பணத்தை வச்சு, எதாவது ஒரு ஆசிரமத்திற்கு டூர் மாதிரி போய் கலைநிகழ்ச்சி நடத்தி அவங்களை சந்தோசப்படுத்திட்டு, டொனே~ன் குடுத்திட்டு வராலம்” என்றாள்.

 தலைவர் தலையசைத்துக் கொண்டே டைரியில் குறித்தார் ‘ அடுத்து வேற ஐடியா”

‘நம்ம சர்ச்சுக்கு எதாவது பொருள் வாங்கி கொடுத்து அதுல நம்ம யூத் குருப்போட பேர போட்டுருவோம். பாக்குறவங்கல்லாம் நல்லா பாராட்டுவாங்க, நமக்கும் பெருமையா இருக்கும்;” என்று சாம்பல் நிற பனியன் போட்டிருந்தவன் சொன்னான். தலைவர் அதையும் குறித்துக் கொண்டார்.

வெள்ளை நிற சட்டை போட்ட ஒருவன்,‘அண்ணே படிக்க முடியாதவங்களுக்கு உதவி செய்யலாம்னு நினைக்கேன்.”

‘ம்ம்ம்” என்று தலைவர் தலையசைக்க, அவன் மேலே பேச ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.