(Reading time: 30 - 60 minutes)

பிருந்தாவனம்  - ராஜி

Brindhavanam

தூவானம் தூவ தொடங்கிய அந்த அந்தி மாலை பொழுதில் மிதமான வேகத்துடன் எந்த வாகனத்துடனும் போட்டி போடாமல் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டு இருந்தது அந்த கார் 

 மாலை வேலை அழகை மறுக்க மனமில்லாமல் ரசித்துக்கொண்டு வந்தவளை தடுக்கும் பொருட்டு குரல் குடுத்தான் சித்தார்த்

“ சுஹா போதும்டா ரொம்ப சில்  வெதர்ரா இருக்கு இப்பதான் ஃபீவர் கோல்ட்னு எதுவும் இல்லாம உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கு விண்டோவ ஏத்திவிடு “

“ இன்னும் ஒன் கிலோமீட்டர்ங்க பிளீஸ் பிளீஸ் “

“ இததான் த்ரீ கிலோமீட்டர்ஸ்ஸா சொல்லிட்டு வர போதும் ‌விண்டோவ ஏத்திவிடு “

“ இன்னும் ஒன்லி ஒன் கிலோமீட்டர்ங்க பிளீஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் “

“ ஹஸ்பண்ட் சொன்னா கேக்கவேக்கூடாதுணு மேரேஜ்க்கு முன்னாடி எதாதும் சபதம் எடுத்து இருக்கியா ஒழுங்கா ஏத்திவிடு “

அவனின் சின்ன கண்டிப்பை மேன்முறுவலுடன் ஏறிட்டவள் “இப்ப விண்டோவ ஏத்திவிடாட்டி போலீஸ் ஆபிசர்  என்ன பண்ணுவீங்கலாம் “

“ ம்‌ம்‌ம் என்ன பண்ணலாம் மண்டைலயே நங்குனு ஒன்னு வச்சு குளோஸ் பண்ண சொல்லலாமா “

வைப்பீங்க வைப்பீங்க வெவ்வெவ்வா

ஹேய் ஒன் செக் சீஃப் கால் பண்றார்

ஒரு சில நொடிகளில் கார் சாலையோரம் நிறுதப்பட அந்த ஃபோன் கால்லை பேசி முடித்துவிட்டு விண்டோவை லாக் பண்ணி தங்கள் பயணத்தை தொடர்ந்தான்

“சித்து பிளீஸ் விண்டோஸ்ஸ இறக்கிவிடுங்க”

“ டோன்ட் பி சைல்ட்டிஷ் சுஹானா அடம்பிடிக்காம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுமா “ என்று கூறிக்கொண்டே அவளுக்காக ரேடியோவை ஆன் செய்தான்

“பாரு பேபி அப்பாக்கு அம்மா மேல பாசமே இல்ல பெர்த் டே அன்னைக்கு கூட திட்டிட்டே இருக்கார் “ என்று தனது மேடிட்ட வயிற்றை தடவிக்கொண்டே குழந்தையிடம் கம்ப்ளைண்ட் பண்ண ஆரம்பித்தாள் சுஹானா

“ சுஹா எத்தனதடவ உனக்கு சொல்றது ஏழு மாச கருக்கு காதுகூட கேக்க ஆரம்பிச்சு இருக்கும் உன்னோட தாட்ஸ் தான் நம்ம ப்ரின்சஸ்ட்டயும் ரீச் ஆகும் ஆகும் இனிமேல் அப்பாவ பத்தி பாப்பாட்ட கம்ப்ளைண்ட் பண்ண நிஜமாவே கொட்டிருவேன் “

“ அவருக்கென்ன ராஜாகுட்டி அம்மா பையன் அம்மா நிஜமாவே சொல்றாங்களா இல்ல சும்மா விளயாடுராங்களானு ஈசியா புருஞ்சுப்பார் “

கொஞ்சம் நேரம் பேசாம தூங்குமா – சித்தார்த்

இது எப்பொழுதுமே இருவருக்குள்ளும் இருக்கும் கியூட்டி நாட்டி ஃபைட் தான் பிறக்கபோகும் குழந்தை ஆணோ பெண்ணோ அவர்களின் உயிர் தானே!!! அதுதான் இருவரின் எண்ணமும் ஆனால் அது ஆண் என்று இவளும் பெண் என்று இவனும்  தங்களுக்குள் பேட் கட்டி சண்டையை ஸ்டார்ட் செய்வர் அதே மாதிரி தான் அவளும் இப்பொழுது இந்த டாபிக்கை ஆரம்பித்தாள் ஆனால் இவனோ எதற்க்கும் பிடி குடுக்காமல் இறுக்கமாகவே இருந்தான் ஏதோ சரியில்லை என்பது மட்டும் இவளுக்கு புரிகிறது

“ என்னாச்சு சித்து காலைல இருந்தே ரொம்ப மூடியா இருக்கீங்க “

“ நத்திங் சும்மா ஒரு கேஸ் பத்தி யோசுசிட்டே வந்தேன் “

“ யாராச்சு வொய்ஃப் பர்த்டேக்கு அவள அவுட்டிங் கூப்பிட்டு வந்து இப்படி கேஸ் பத்தி யோசிக்கிறேன் காஸ் பத்தி யோசிக்கிறேன் வருவாங்களா இதுல மொக்கை டிரைவிங்

வேற.... கொஞ்சம் பாஸ்ட்டா போங்கங்க “

“ அல்மோஸ்ட் நெருங்கிடோம்டா இன்னும் ஒன் ஹவர் தான் உன்ன இந்த ஸ்டேஜ்ல வச்சுட்டு நான் எப்படி  பாஸ்ட்டா ட்ரைவ் பண்ண கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா “

“ ம்‌ம்‌ம் ஓகே...... நான் சித்து தோலுல சாஞ்சுட்டு இப்படியே தூங்குவேணாம் நீங்க பிளேஸ் வந்தோனே என்ன எழுபுவிங்கலாம் சரியா “ என கூறிக்கொண்டே அவன் தோல் சாய்ந்துக்கொண்டாள்

இப்படி சிரித்த முகமாக குழந்தை போல் இருப்பவளிடம் அதை எப்படி மறைத்தோம் ஒருவேளை இதை முன்னமே சொல்லி இருந்தால் இத்தனை நாட்களில் அவளின் மனநிலை என்னவாய் இருந்து இருக்கும்  தாயும் செயும் ஆரோக்கியமாக  இருந்து இருப்பார்களா ஆனால் எனக்கே இது சமீபத்தில் தானே தெரிந்தது... இல்லை தெரிந்த உடன் அவளிடம் சொல்லி இருக்க வேண்டுமோ என்று தொடங்கிய இடதுக்கே மீண்டும் வந்தான்

என்ன ஆனாலும் பரவாயில்லை இதை இன்றே அவளிடம் கூற வேண்டும் அவள் பிறந்தநாள் அன்று அவளிடம் இதை கூற வேண்டும் என்ற முடிவுடன் தான் அவளை அங்கு அழைத்து செல்கிறான்

சித்தார்த் சுஹானா மனமொத்து வாழும் தம்பதிகள் வாழ்க்கையை அதன் போக்கில் சென்று பார்க்க வேண்டும் என்பது தான் இருவரின் எண்ணமும் ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன? அப்படி சாதார்ணமாக சென்றுவிட்டால் அது வாழ்க்கையும் இல்லயே இதோ இன்று இவன் எடுத்த முடிவு அவளுள் எத்தனை மாற்றங்களை உருவாக்கும் என்பதை அறிந்தும் அவளை அழைத்து செல்கிறான் இவன்

நினைவுகள் அதன் போக்கில் செல்ல அவர்கள் இறங்கும் இடமும் வந்தது..... அவன் எழுப்பும் முன்னே அவளும் எழுந்து விட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.