(Reading time: 7 - 13 minutes)

தாழ்ந்த சாதி - மலர் மாணிக்கம்

No caste

 தாழ்ந்த சாதி என்ற வார்த்தை காதுகளில் விழும் போதெல்லாம் மனசெல்லாம் பாரமாக மாறி வலிக்க தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் வேலுச்சாமி தான்.

வேலுச்சாமி எனது நண்பன் என்று சொல்வதை விட,எங்களின் நண்பன் சொல்;வது தான் பொருத்தமாக இருக்கும். நான், முத்து, வேலுச்சாமி என மூன்று பேரும் எப்போதும் ஒன்றாகவே தான் சுற்றி திரிவோம்.

வேலுச்சாமி மலைப் பகுதியிலிருந்து பள்ளிக் கூடத்துக்கு வருபவன். தினமும் அவன் பள்ளிக் கூடத்துக்கு வந்ததுமே, நாங்கள் கேட்கும் கேள்வியே ‘இன்னைக்கு என்னடா ஸ்பெ~ல்’ என்பது தான.; அதற்கு காரணம் அவன் நாவல் பழம், இலந்தை பழம், வேலாம் பழம், சூரிபழம், களாக்காய், வள்ளிக் கிழங்கு என தினமும் எதாவது வகை வகையாக சாப்பிடக் கொண்டு வருவான். அவன் கொண்டு வரும் தின்பண்டத்தை, ஆசிரியர் பாடம் நடத்தும் போது, கடைசி பெஞ்சில் மறைத்து வைத்து சாப்பிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும்.

ஆசிரியர் வராத பாட வேளையில் மூவரும் ஒன்றாக தான் இருந்து அரட்டை அடிப்போம். பியர் கிரில்ஸ் என்பவர் டிஸ்கவரி சேனலில் வரும் மேன் விஸ் வைல்டு புரோகிராமில் தனியாளாக காடுகளை கடந்து வந்து பிரமிப்பை ஏற்படுத்துவது போல, வேலுச்சாமி வேட்டைக்கு போன கதை, யானை விரட்டப் போன கதை சொல்லுவான். கேட்கும் போது கண்முன்னே படம் ஓடுவது போல இருக்கும். அந்த அளவு எங்களை அவன் கதையில் கட்டிப் போட்டு விடுவான்.

ரு நாள் பள்ளி கூடத்துக்கு வந்த முத்து மூஞ்சை தூக்கி கொண்டு உம்மென்று இருந்தான். என்னிடமும், வேலுச்சாமியிடமும் பேசவேயில்லை.

ஏன்டா, காலையில இருந்து உம்முன்று இருக்க.. எதாவது பிரச்சனையா? என்று வேலுச்சாமி கேட்க..

 அதெல்லாம் ஒண்ணுமில்லடா…

‘சும்மா பொய் சொல்லாதடா?.. உம் மூஞ்ச பாத்தாலே தெரியுது.’

‘ஏதோ வீட்ல பிரச்சனன்னா சொல்லுடா’

‘டே வேலு… எங்க வீட்டுல சாவி கொத்து காணாம போயிடுச்சுடா.. அதுல தான் பீரோ சாவி, துட்டுடப்பா சாவி, நகப்பெட்டி சாவி, ரெங்குபெட்டி சாவி எல்லாமே இருந்துச்சுடா. எப்படி காணாம போச்சுன்னே தெரியலடா..’

‘நல்லா தேடி பாத்திங்களா?’

‘வீடு பூரா கலச்சு போட்டு தேடிட்டோம்டா.. கிடைக்கவே இல்லை.’

‘அதான் மனசுக்கு ரொம்ப க~;டமா இருக்கு..’

‘டே முத்து, நீ நாளைக்கு பதினொரு ரூபா பணம், அஞ்சு ரூபாய்க்கு வெத்தல பாக்கு சுண்ணாம்பு வாங்கிட்டு எங்க வீட்டுக்கு வாடா.. சாவிய கண்டு பிடிச்சரலாம்.’

அதெப்படிடா சாவிய கண்டுபிடிப்ப..

‘நம்பிக்க இருந்தா நாளைக்கு நான் சொன்னதலாம் வாங்கிட்டு வா..’

‘என்னமோ இவன் ஏதோ கடவுள் மாதிரி பேசுறான். ஏப்படி சாவி கண்டுபிடிப்பான்’ என்;று தோன்றியது.

மறுநாள் நானும் முத்துவும் அவன் சொன்ன பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு அவனுடைய வீட்டுக்கு போனோம். அவன் எங்கள் இரண்டு பேரையும், இன்னொரு வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கே திண்ணையில் பூசாரி வடிவத்தில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.

‘தாத்தா.. நான் சொன்ன பையன் இவன் தான் என்று முத்துவை கை காட்டினான்’ வேலுச்சாமி

‘தம்பி சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா..?’

‘வாங்கியாச்சு தாத்தா..’

‘தம்பி, நீ எங் கூட வா’ என்று முத்துவை கூப்பிட்டார். ‘வேலு, நீயும் அந்த தம்பியும் வெளியே இருங்க’ என்று சொல்லி விட்டு, வீட்டுக்குள் முத்துவை கூட்டிக் கொண்டு போனார்.

கால் மணி நேரம் கழித்து, முத்து வெளியே வந்தான். அவனுக்கு பின்னால் தாத்தா கதவோரத்தில் நின்று கொண்டு தம்பி சொன்ன இடத்தில சரியாப் பாருங்க என்றார். நானும் முத்துவும் வேலுச்சாமியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

முத்து அந்த தாத்தா உள்ள கூட்டிட்டுப் போய் என்னடா பண்ணுனாரு..

‘உள்ள கூட்டுட்டுப் போய், அவருக்கு எதிர உட்கார சொன்னாரு ஏதேதோ மந்திரமெல்லாம் சொல்ல சொன்னாரு. அப்புரம் காணிக்க கோட்டாரு பதினோரு ரூபா வெச்சேன். அப்புறம் வெத்தல பாக்கு கேட்டாரு குடுத்தேன்.

அந்த வெத்தலய அவர் உள்ளங்கையில வச்சு கருப்பா ஏதோ பூசி பாத்தாரு. அப்புறம் உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற மரத்தடியில போய் பாரு சாவி அங்க தான் இருக்கும்னு சொன்னாரு.’

‘சாவி அங்க தான் இருக்கும்னு நம்புரியாடா..’

‘ கொஞ்சம் நம்பிக்க இருக்குடா. பாப்போம் கிடைக்குதானு..’

நானும் முத்துவும் வீட்டுக்கு போனதும்.. வீட்க்கு பின்னாலருந்த, கொய்யா மரத்தடியில் தேடினோம். அந்த தாத்தா சொன்னது போலவே சாவி கிடைத்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.