(Reading time: 10 - 20 minutes)

2017 போட்டி சிறுகதை 08 - மதிப் பெண்ணே! - ஆர்த்தி N

This is entry #08 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஆர்த்தி N

Beautiful moon

உண்மையை face பண்றத்துக்கு ஒரு தனி தைரியம் வேணும். அது நிறைய பேர் கிட்ட இல்லை.. அப்படி நம்ம உண்மையைக் கண்டு ஓடி ஒழியும் போது நம்மளை சுத்தி இருக்கறவங்க அதனால பாதிப்படைய நிறைய வாய்ப்புகள் இருக்கு.. அதை இச்சிறு கதையின் மூலம் உண்ர்த்த முயற்ச்சித்திருக்கிறேன்..எதுவந்தாலும் பாத்துக்கலாம் என்ற மனதைரியம் இருந்தா நம்மள நோக்கி வர பல problems ah ஈசியா சால்வ் பண்ணலாம்..

கதையை படியுங்கள்.. படித்து கதையின் நிறை குறைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. அன்புடன்,

ஆர்த்தி N

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

எப்படியாவது இத்திருமணம் கடைசி நிமிடத்திலாவது நின்று போகாதா என்று மிகவும் ஏங்கியது அப்பேதையின் நெஞ்சம்.. ஐயர் மந்திரங்கள் ஓத அவளருகில் இருந்தவனது கை அவள் கழுத்தில் அப்பொன் தாலியை அணிவிக்க வந்தப்பொழுது..

“இல்லைலலலல..”என அலறிக்கொண்டு எழுந்தாள் மதுவந்தி.

படுக்கையறையில் ஃபேன் சுழலும் சத்தம் கூட மதுவிற்க்கு பயங்கரமாக கேட்டது.பக்கத்து மேசையின் மேல் வைத்திருந்த ஒரு பாட்டில் தண்ணீரை மூச்சு விடாமல் குடித்தவுடன் தான் கொஞ்சம் சமாதானமானாள்..

அவள் கண்ட கனவு மீண்டும் படம் போல் அவள் கண்முன் விரிய மனமெங்கும் அதே வலி.. இதுக்கு மேல் தூக்கம் வராமல் அறையை ஒட்டியிருந்த பால்கனியில் போடப்பட்ட  ஊஞ்சலில் அமர்ந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன..

துவந்தியின் சொந்த ஊரானது தமிழகத்தின் நெர்கழஞ்சியமான தஞ்சாவூர்.. மதுவந்திக்கு உலகத்திலேயேப் பிடித்த ஊர் எதுவென்று கேட்டால் தனது சொந்த ஊரான தஞ்சாவூரை தான் சொல்லுவாள்.. அவள் மனம் அமைதி இல்லாமல் தவிக்கும் பொழுது அவள் சென்றடையும் இடம் தஞ்சை பெரிய கோவில்.. அக்கோவிலின் மேல் மதுவிற்கு அலாதி காதல்..அவளது சந்தோசம் துக்கம் என அனைத்து  உணர்ச்சிகளும் அக்கோவிலுக்கு பரிச்சயம்.

மதுவின் தந்தை கணேஷ் ராம் தஞ்சை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிகிறார்.மதுவின் தாய் மஹேஷ்வரி இல்லத்தரசி.ரொம்பவும் சாது.. அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசமாட்டார். பார்வதி கணேஷின் கூட பிறந்த தமக்கை.தம்பி குடும்பத்தின் மேல் பார்வதி மற்றும் அவரது கணவர் சேகர் மிகுந்த அன்புடையவர்கள்.கணேஷின் வீடு இருந்த தெருவிலே தான் அவர்களும் வசித்து வந்தனர்.இவர்கள் அனைவரும் தனி தனி இல்லத்தில் இருந்தாலும் ஒரே குடும்பமென ஒற்றுமையாக இருந்தனர்.

சேகர் பார்வதி தம்பதியரின் ஒரே புதல்வன் சரண்.சரண்  சிறு வயதிலிருந்து எல்லோரிடமும் அளவாக தான் பழகுவான்.மதுவிடம் அது கூட கிடையாது, என்னவென்றால் என்ன என்னும் அளவிற்க்கு தான் பேசுவான்.மது அவள் குடும்பத்திற்கு தான் முதலிடம் தருவாள் எப்பொழுதும்.. ஆதலால் அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் என எவரும் கிடையாது.

சரண் மிலிட்டரியில் மேஜராக இருந்தான்.மது அவ்வருடம் தான் தனது பொறியியல் படிப்பை முடித்து அவள் படித்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியில் சேர்ந்தாள்.பெற்றோர்களின் ஆசைக்கேற்ப்ப அவர்களிருவர்க்கும் திருமணம் நிச்சயம் நடந்தது. நிச்சயம் முடிந்து சரண் பணிக்கு திரும்பினான்.ஒரு வாரம் கழித்து சரணுடன் பணிப்புரிந்தவர்களிடம் இருந்து ,சரண் எல்லையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்து விட்டான், அவன் சடலம் கூட கிடைக்கவில்லை என தகவல் வந்தது. இரண்டு குடும்பமும் உருக்குலைந்துப் போனது. மது தான் மிகவும் ஒடிந்து போனாள். துக்கம் விசாரிக்க வந்த அவளின் மாமாவின் சொந்தங்களில் ஒரு தம்பதி இவளது ராசியினால் தான் சரணின் முடிவு இவ்வாறு அமைந்து விட்டது என தூற்றிவிட்டுச் சென்றார்கள்.. அதைக் கூட அவள் பொறுத்துக் கொண்டாள்.ஆனால் அவளதுப் பிரியத்திற்க்குரிய அத்தையே ஒரு முறை அவ்வாறு உறைக்கவும் நொறிங்கிப் போனாள். பார்வதி தான் உறைத்தது தவறு என்று உணர்ந்தாலும் மகனை இழந்த சோகத்தில் மதுவை நோகடித்தார். இதனால் இருக் குடும்பங்களுக்கும் பிளவு ஏற்ப்பட்டது.

ரு வருடங்கள் கழித்து மதுவிற்க்கு அவள் வீட்டில் வரன் தேட ஆரம்பித்தவுடன்.. தனக்கு திருமணமே வேண்டாம் என ஒரேடியாக மறுத்து மன நிம்மதிக்காக தனது சொந்த ஊரை விட்டு மும்பைக்கு பணியாற்ற வந்துவிட்டாள்.இங்கு ஒரு பிரபலக் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள்.மும்பை வந்து மூன்று வருடங்கள் ஆயிற்று..ஆனால் அவள் மனதின் காயம் இன்னும் ஆறவில்லை.

மொபைல் அலாரம் சத்தம் கேட்டு அவள் நினைவலைகள் அறுந்தன.. நேற்று இரவு வந்த ஃபோன்காலின் விளைவு தான் அக்கனவு என அவளுக்கு புரிந்தது.. தலையை உலுக்கிக் கொண்டு தனது எண்ணங்களை புறம் தள்ளி கல்லூரிக்கு செல்லத் தயாரானாள்.மதுவுடன் வீட்டை பகிர்ந்துக் கொள்ளும் உடன் பணிப்புரியும் தோழி சொந்த விசயமாக அவளது ஊருக்கு சென்றிருந்தாள்.ஏழரைக்கு அவள் கல்லூரிப் பேருந்து வந்துவிடும், வீட்டைப் பூட்டிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி செல்லுகையில் அவள் முன் புன்னகை மற்றும் கையில் பூங்கொத்துடன் ஏதிர்பட்டான் ரிஷிக் குமார். எரிச்சலுடன் நிமிர்ந்து அவனை திட்ட வருகையில்..

“ஹேய் வெய்ட் .. நேத்து நான் கால் பண்ணப்போவே பேசி இருந்தா இப்போ வந்திருக்கமாட்டேன் இல்ல.. அதானால அது உன்னோட தப்பு தான்”என கூலாக பழியைத் தூக்கி அவள் மேல் போட்டான்.

“ஒரு பொறுப்பான பதவில இருக்கிங்கன்றத மறந்துடாதிங்க.. இப்போ வழியை விட்டீங்கனா நான் ஸ்டாப்க்கு போவேன்”எனக் கூறி அவனைத் தாண்டிச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.