(Reading time: 7 - 13 minutes)

2017 போட்டி சிறுகதை 13 - என் கணவன் என் தோழன் - டோனா

This is entry #13 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - டோனா

Husband is my Friend
 

யோ...!! தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கு எனக்கு...

எனக்கு மட்டும் எங்க இருந்து இந்த ஆசைலாம் வருதுனு கூடப் புரியலங்க...

அவங்கவங்க வீட்ல சண்டைய எப்படிடா solve பண்ணலாம்னு பாக்கறாங்க... நான் இங்க எப்படிடா சண்டைப் போடலாம்னு பாக்கறேன்..

எதும் புரியலையா..?? அது வேற எதும் இல்ல.. சின்ன வயசுல இருந்து எல்லாப் பொண்ணுக்கும் குட்டிக் குட்டி ஆசை இருக்கும்.. எனக்கும் இருந்துச்சு.. குட்டி தான்.. ஆனா இப்போ பேராசையோ-னு தோணிருச்சு..

என்னோட அவன்கூட கைக்கோர்த்து பேசிக்கிட்டே லாங் வாக் போகணும்.. டெய்லி ஒரு பத்து நிமிஷமாச்சும் எனக்குனு அவன் டைம் ஸ்பென்ட் பண்ணணும்.. weekly ஒன்ஸ் நைட் ஒரே ப்ளேட்-ல சாப்டனும்.. அப்பப்போ குட்டிக் குட்டியா சண்டை,, பெருசா சமாதானம்.. அவ்ளோதாங்க..

காலேஜ்-ல என் ப்ரண்ட்ஸ்ட்டலாம் சொன்னா,, ஹேய் பச்சமொளகா,, எது நடக்குதோ இல்லையோ.. கடைசி ஆசை கண்டிப்பா நடக்கும்னு சொல்வாங்க.. அவங்க வச்ச பட்டப்பெயர் மாதிரியே சும்மா சுள்ளு சுள்ளுனு கோவம் வரும்.. வந்த வேகத்துல சாரிக் கேட்டு தோஸ்த்தும் ஆயிடுவேன்.. அவங்க வச்ச கண்ணு தானோ.. அந்த கடைசி ஆசை மட்டும் நிறைவேறவே மாட்டேங்குது..

வேலைக்கு சேர்ந்த புதுசு.. ஒரு நாள் சாயங்காலம் train-ல இருந்து இறங்கி platform-ல நடந்து வந்துட்டு இருந்தேன்.. ட்ரெய்ன் நகர ஆரம்பிச்சுது.. அப்போ என் கால் பக்கத்துல பறந்து வந்து விழுந்துச்சு ஒரு புக்.. பதறி நகர்ந்துட்டு நிமிர்ந்துப் பாத்தப்போ train ஜன்னல் பக்கத்துல ஒரு கேங்.. புக்-க வீசுன கேங் தான்.. நான் பயந்து நகர்ந்தத பார்த்துப் ஈ-னு இளிச்சிது.. கோவத்த கட்டுப்படுத்திட்டு புக்-க எடுத்துட்டு நிமிர்ந்தேன்.. 

Train அதுக்குள்ள வேகமா நகர ஆரம்பிச்சிடுச்சு.. அப்போ ட்ரெய்ன் கதவு பக்கத்துல பதற்றமா ஒரு பையன்.. நா புக்-க எடுத்தத பார்த்த அந்த முகத்துல பதற்றம் போய் ஒரு நிம்மதி பரவிடுச்சு.. அவன்ட்ட வம்பு பண்ண அந்த கேங் புக்-க புடுங்கி வீசிறுக்கு.. இதெல்லாம் ஒரே நிமிஷத்துல நடந்து முடிக்க நான் அந்த புக்-க எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..

அது ஒரு leather bound bible.. ரொம்ப படிச்சதுல பழசான லுக்.. அத பார்த்ததும் கொஞ்சம் அந்த பையன் மேல நல்ல அபிப்ராயம் வந்தாலும் அவன் முகத்துல பரவிய நிம்மதிலயே கண்டிப்பா அவன் அந்த பசங்கட்ட சண்டைப் போடமாட்டான்னு புரிஞ்சிடுச்சு... நான் அந்த இடத்துல இருந்துருந்தா எவன் மொபைலயாச்சும் வீசிறுப்பேன்.. அவன் அமைதிய பார்த்தக் கடுப்புல எரிமலை மாறி மூச்சு விட்டுட்டே நைட் தூங்கிட்டேன்..

ரு மாசம் கழிச்சி நான் வீட்டுக்கு வர்றப்போ வீட்டுல மூணு பேர் புதுசா வந்திருந்தாங்க.. அப்பா அம்மா அப்புறம் அந்த புக்-காரன். பார்த்ததும் புரிஞ்சிடுச்சு பொண்ணு பார்க்க வந்துருக்காங்கனு...

அவன் என்ன பார்த்ததும் அவன் முகத்துல ஒரு spark.. எனக்கும் லைட்டா ஏதோ ஒரு இலகுவான feel..

எனக்கு பொண்ண புடிச்சிருக்கு.. அவங்களுக்கும் ok-னா ப்ரோசீட் பண்ணலாம்னு அவன் ஓபன் ஸ்டேட்மன்ட் விட என் அம்மா என் பக்கம் பார்த்தாங்க.. ஏதோ உந்த நானும் ஓ.கே சொல்ல இனிதே நடைப்பெற்றது எங்கள் திருமணம்..

மேரேஜ் அன்னிக்கு நைட் என் ரொம்ப நாள் டவுட் க்ளியர் பண்ணலாம்னு நினைத்து ரூம்குள்ள போனேன்.. 

இதான் அப்போ நடந்த பேச்சு..

'உங்கட்ட ஒன்னு கேக்கணும்' 

'கேளும்மா..'

அவன் சொன்ன விதத்தில் கிறங்கிய மனதை சமாளித்து கேட்டேன்.. 'அன்னிக்கு trainல நடந்த சம்பவத்துக்கு ஏன் நீங்க கோவப்படல..??' 

'என் எஜமானனே(jesus) சாந்தமும் மனத்தாழ்மையுமானவர்.. அவரே பொறுமையா இருந்தப்போ நான் எப்படி..?? அதான்மா கோவம் வரல.. வருத்தமா மட்டும் தான்மா இருந்துச்சு..'என நிறுத்திவிட்டு 'அப்புறம் நீ எனக்கு கஷ்டப்பட்டு மரியாதை தரவேணாம்.. எப்படி வருதோ அப்படியே கூப்பிடு.. நீ நீயா இரு கண்ணம்மா' என்று அவன் பேச பேச,, என் மனசுல top gear-ல ரொம்ப வேகமா உயர்ந்துக்கிட்டே போனான்..

ன் ஆசைலாம் சொன்னதில்ல அவன்ட்ட.. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்.. அடிக்கடி பேசிட்டே வாக் போறதுல இருந்து ஒரே தட்டுல சாப்டுற வரைக்கும்.. தேங்க் காட்..

கூடுதல் தள்ளுபடியா அவன் டெய்லி வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இழுத்து வச்சி நெத்தில ஒரு உம்மா குடுப்பான்.. ஏதாவது தெரியாம hurt பண்ணியிருந்தா ஸாரி கண்ணம்மா என்று சொல்லிவிட்டு தான் வெளில கிளம்புவான்..இதுதான் நான்கு மாதமாக அவனது வழக்கம்.. 

குட்டி சண்டைக் கூட போட்டதில்லைங்க.. அடிக்கடி அவன் கைவண்ணத்தில் சமையல் மணக்கும்.. அடிக்கடி ஸ்வீட் சர்ப்ரைசஸ்... இப்படி Mr.Perfect-ஆக அவன் இருக்க எங்க இருந்து நான் பச்சமொளகாயா வெடிக்கிறது.. Mrs.சாந்தசொரூபினி தான் நானும்.. ஆனா சண்டை ஆசை மட்டும் போகவே இல்லைங்க..

அவன் ஆபிஸ் வீட்ல இருந்து 10 நிமிஷம் தான் பைக்ல போனா.. மதியமும் சாப்பாடு கொண்டுப்போய்டுவான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.