(Reading time: 7 - 14 minutes)

2017 போட்டி சிறுகதை 17 - திருமண பந்தம் - மங்கலஷ்மி

This is entry #17 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை 

எழுத்தாளர் - மங்கலஷ்மி

Mangalyam

ராமசாமி ஈஸி சேரில் அமர்ந்து அன்றைய நாளிதழில்; பார்வையை ஓட்டினார். அறுபத்து ஐந்து வயதிலும் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடியவர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் மனைவிக்கும், மகனுக்கும் உதவியாய் இருப்பவர்.

ஆனால் அன்றைய செய்தித்தாள் கைகளில் தவழ்ந்தாலும் கண்கள் அதில் பார்வையை ஓட்டினாலும் உள்ளம் அதில் ஈடுபடவில்லை என்பதை அவர் முகமே காட்டிக் கொடுத்தது.

“இந்தாங்க காபி” கையில் இருந்த காபியை கணவரிடம் நீட்டிக்கொண்டே அவர் அருகில் அமர்ந்தாள், அவரின் மனைவி மரகதம்.

அவரிடம் எந்த வித பதிலும் வராதது கண்டு, என்னங்க!... என்னங்க!... என்று அழைத்தாள். அப்பொழுதுதான் இராமசாமி அருகில் மனைவி இருப்பது கண்டு என்ன மரகதம் என்றார். காபியை நீட்டிண்டு இருக்கேன், அப்படி என்னங்க சிந்தனை, என்றாள்.

“நம்ம ராஜாவைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.”

“ஏங்க ராஜாமணி அண்ணனுக்கு என்னாச்சி!,” என்னமோ! ஏதோ என்ற பதற்றத்துடன் மரகதம் கேட்டாள்.

“அவனுக்கு ஒன்னும் ஆகலை. ஆனா அவனால் அந்த குடும்பம் படும்வேதனை, துன்பம் கொஞ்சநஞ்சமல்ல, எப்பதான் அவன் பொண்டாட்டிக்கும், பிள்ளைகளுக்கும் விடிவுகாலம் பிறக்குமோ! நேற்று நடந்ததை நீ பார்த்திருந்தா வெறுத்தே போயிருப்ப” என்றவர் நினைவில் நேற்றைய காட்சி ஓடியது.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ராமசாமி தன் நண்பன் ராஜாமணியை சந்தித்து பேசிவிட்டு வருவார். நேற்றும் அப்படிதான் இராஜாமணியைப் பார்க்க சென்றார்.

ராஜா!... ராஜா!...” குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே செல்ல…

“பாவி!.. பாவி!... நீ நல்லா இருப்பியா? நீ எல்லாம் ஒரு மனுஷனா?, உனக்கு எல்லாம் சாவு வரமாட்டெங்குதே! விடுய்யா… விடு! என் முடியை விடு…” அவன் மனைவி சுமதி கதற,

“விடமாட்டேன்டி… உன்னை விடமாட்டேன். நான் செத்தா என் சம்பள பணத்தை வாங்கி நீயும், உன் பி;ள்ளைகளும் சொகுசா வாழலாமுனு பார்க்கிறீங்களா” என்றவரின் கைகள், அவள் மனைவி சுமதியின் தலைமுடியில் இருந்தன.

“விடுப்பா!... விடுப்பா!... அம்மாவை விடுப்பா!... ஏம்பா இப்படி தினம் தினம் குடிச்சிட்டு வந்து சண்டைப் போடறீங்க” என்ற அவர் மகனின் குரல் அழுகையும் கோபமுமாக வெளிப்பட்டது. 

“நீ! போடா… எனக்கு சொல்ல வந்துட்ட…” ராஜாமணி மகனைத் தள்ளினார்.

இதனைக் கணட இராமசாமி, அதற்குமேலும் பொறுக்க முடியாமல்,

“என்னடா இராஜாமணி இதெல்லாம், ஒரு படிச்சவன், அதுவும் உத்தியோகத்தில் இருப்பவன் செய்யும் காரியமாடா இது” என்று கேட்டார். படபடப்பு அடங்கவில்லை.

“வாடா… வா! நீயே நியாயத்தை சொல்லு நான் குடிச்சா இவளுக்கு என்னடா, எப்ப பார் குடிக்காத குடிக்காதனு தொணதொணக்கறா! அதுமட்டுமா? இதோ நிக்கறானே என்னமோ படிக்கறானாம், காசு, காசுனு, கேக்கறா, குடிக்கவே காசு போதலை தேதி பிறக்கறதுகுள்ள யார்யார்கிட்டையோ வாங்கி குடிக்கறேன். அதான் வந்தது கோபம் , விட்டேன் நாலு அறை” என்றார்.

என்னடா பேசற நீ! நீயும் படிச்சவன் தானே, பிள்ளை படிக்க காசு கேட்ட அடிப்பியா? உன் உடம்பும் கெடாம நல்லா இருக்கணும் தானே கேக்கறா? இதுக்காகவா இப்படி இவர்களை கஷ்டப்படுத்துவாய் என்றார்.

‘குடி ஒரு மனிதனை எந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்குறது பார் எண்ணிய அவர் இராஜாமணிக்கு புத்திமதி கூறினார். ஆனால் இராஜாமணியோ செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி அவர்பாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தார்.

இது தினம் தினம் நடக்கும் கூத்தாயிற்று, பேசி… பேசி இராஜாமணி ஓய்ந்து ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டார். சுமதியோ அழுகையுடன் அவனைப் பற்றி புலம்பித் தள்ளினார்.

“இம்… உங்களுக்கு எப்பதான் விடிவுகாலம் வருமோ! இவன் எப்ப தான் இந்த குடியை நிறுத்தப்போறானோ! எப்பதான் திருந்தப் போறானோ!... இராமசாமி சொல்ல…”

“இந்த ஆளாவது திருந்தறதாவது, அது இந்த ஜென்மத்தில நடக்காதுண்ணா, இந்த மனுஷன் செத்தாதான் நானும் என் பிள்ளைகளும் நிம்மதியா இருக்க முடியும்”.

இதையே அவர் மகன்களும் சொல்ல மேற்கொணடு எதுவும் பேசாமல் புறப்பட்டுவிட்டார்.

தையெல்லாம் கேட்ட மரகதம், “சுமதி சொல்வது போல அந்த அண்ணன் செத்தா தான் அவங்க நிம்மதியா… சந்தோஷமா வாழமுடியுங்க…” என்ற மரகதத்தை முறைத்தார் இராமசாமி.

“என்ன மரகதம் பேசற அவன் செய்யறது தப்புதான். அதுக்காக அவனை நீயுமா சாகனும்னு சொல்லற

“தப்புதாங்க!... ஏதோ… சுமதி மேல இருந்த ஆதங்கத்துல பேசிட்டேன்.”

“சரி… சரி!... இந்த காபி வேண்டாம் வேற காபி கொண்டா” என்றார்.  

திருமணம் ஆன புதிதில் இராஜாமணி ஒழுங்காகத்தான் இருந்தார். அவர்கள் வாழ்க்கையும் மற்ற கணவன், மனைவி போல் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும்தான் இருந்தது. ஆனால் பணிபுரியும் இடத்தில் சிலரிடம் ஏற்பட்ட பழக்கம் குடிக்கக் கற்றுக்கொடுத்தது. இது நாளுக்கு நாள் அதிகமாகி முழுநேர குடிகாரனாகவே அவரை மாற்றிவிட்டது. இதனால் சண்டையும், சச்சரவும் அதிகமாகி, அவன் மனைவியும், பிள்ளைகளும் அதிக தொல்லைக்கு ஆளாயினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.