(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 21 - நலம்நலம் அறிய ஆவல் - மங்கலஷ்மி

This is entry #21 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம்நலம் அறிய ஆவல்

எழுத்தாளர் - மங்கலஷ்மி

Transgender

தாரைத்தாரையாய் கண்ணீர் வழிந்தோட அருகே நின்ற மூத்தமகன் ரமேஷையும் மகள் வனிதாவையும் பார்த்தாள் கல்யாணி. மனகுமுறலில் பட்டென்று பேச அவளால் முடியவில்லை. இத்தனைக்கும் நகரத்திலேயே புகழ்பெற்ற மருத்துவமனையின் பேர்போன மருத்துவர். 

ஆனால் தனக்;கெதிரே கைநீட்டி கேள்விக்கணைகளை தொடுக்கும் பிள்ளைகளுக்கு என்னபதில் சொல்வதென்று தெரியாமல் தவியாய்தவித்தாள். 

“என்னம்மா!... பதிலையேகாணோம். இன்றைக்கு இரண்டில் ஒன்று தெரிஞ்சாகனும்”. மகன் ரமேஷ் கூற

“ஆமாம்மா!...வெளியில் தலைக்காட்டமுடியலை. ப்ரண்ட்ஸ் எல்லோரும் கிண்டல் செய்யறாங்க. ஒன்னு அவன் இருக்கனும் இல்லை நாங்கஇருக்கனும். நீங்களே முடிவுபண்ணிக்குங்க”.   

“ஏண்டா!.....ஏண்டா….இப்படிபேசறிங்க. உங்களை சுமந்த வயிறுதானே!. அவனையும் சுமந்தது. எப்படிடா…எப்படிடா! அவனை… அவனை…விடமுடியும்”.

“என்னசெய்விங்களோ ஏதுசெய்விங்களோ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இன்னும் ஒரு வாரம்தான்இ அதற்குள்ள நீங்கதான் முடிவு எடுத்தாகனும்” . கோபத்தின் உச்சியில் ரமேஷின் வார்த்தைகள் வெளிவர

“என்னம்மா….” என்றவாறு இளையமகன் உள்ளேவர அவசர அவசரமாக கல்யாணி கண்களை துடைத்துக் கொண்டாள். நால்வர் கண்களும் ஒன்றோடு ஒன்றுமோதின.

ரமேஷ்சும் வனிதாவும் தீ கங்குகளாய் சுட்டனர். அவர்களைக்கண்டதும் ஆசையாய் முகம்மலர்ந்தது. ஆனால் பார்வையில் தென்பட்ட வித்தியாசம் அவனுக்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. அடக்க முற்பட்டு தலையைக் குனிந்து கொண்டான். 

எப்படி இருந்த பிள்ளைகள் இன்று எதிரும்புதிருமாய் இருக்கின்றனரே என்ற வேதனையில் துடித்தாள்.  

“நீ போப்பா…உன்அறையில் போய்படி. அம்மா டீ கலந்துகொண்டு வருகிறேன்.” என்றவாறு இளையமகன் சுரேஷை அனுப்பிவைத்துவிட்டு திரும்பினாள்.  

ரமேசும் வனிதாவும் அவளை முறைத்துவிட்டு காலால் தரையை உதைத்துவிட்டு வெளியேறினர். 

ல்யாணி இளையமகனைத்தேடி அவன் இருக்கும் அறைக்குச்சென்றாள். கட்டிலில் அவன் இல்லாமல்போக சுற்றிலும் பார்வையைவிட்டாள். ஜன்னல் அருகில் நின்றமகனிடம் சென்று தோள்மீது கைவைத்து திருப்பினாள். அவன் கண்களில் கண்ணீர் வழிவது கண்டு பெற்றமனம் துடித்தது.  

“ஏம்பா!....ஏம்பா!....அழற” அழுகையின் காரணம் தெரிந்தாலும்

ஆறுதல் சொல்லவோ அதற்கான காரணத்தை அகற்றவோ வழி தெரியாமல்கேட்டாள். 

ஏம்மா… அதற்கான காரணம் உனக்குதெரியாதா என்பது மாதிரி சுரேஷ் பார்க்க, அவனை அணைத்துக்கொண்டாள் கல்யாணி. சிறிது நேரம் அங்கு மௌனமே மொழியாய் இருந்தது.    

“ஏம்மா நான் தெரிந்தேவா இதையெல்லாம் செய்கிறேன். நானும் பழையமாதிரியே இருக்கனும்தான் ட்ரைப்பண்றேன்.முடியலைம்மா? நல்லா இருக்கியா என்ன செய்து என்று யாரும் கேட்கலைனாலும் திட்டாமலாவது இருக்கலாமேமா?”.அழுதுக்கொண்டே கூறியவனை தட்டி ஆறுதல்படுத்தினாள். 

சிரியர் அழைப்பதாய் சுரேஷ் சொன்னவுடன் கல்யாணியும், ராகவனும் பள்ளிக்கு சென்றனர்.

ஆசிரியர் எதிரே கல்யாணியும் ராகவனும் அமர்ந்திருந்தனர்.  

“நான் கேட்கறேனேனு தப்பா எடுத்துக்காதிங்க,வீட்டில் ஏதேனும் பிரச்சனையா”…?

“அதெல்லாம் இல்லை சார்”,கல்யாணியும் ராகவனும் ஒருசேர கூறினர். 

“நல்லா படிக்கிற பையன். இப்பயெல்லாம் வகுப்பறையில் பாடத்தை சரியாகக் கவணிப்பது இல்லை. எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறான். முன்பிருந்த கலகலப்பு இல்லை. இப்படியே போனா பெயில் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கு.”

ஆசிரியர், கூறகூற கல்யாணியும் ராகவனும் உள்ளுக்குள் பொடிபொடியாய் நொருங்கினர்.   

“இனிமே இப்படி நடக்காது சார். நாங்க பார்த்துக்கறோம்” .என்றாள் கல்யாணி ஒருவழியாய்.

ஆனால் ஆசிரியரோ, “நான் அதுக்காக சொல்லவில்லை. நீங்க இரண்டுபேரும் மருத்துவராக இருக்கிறிங்க, உங்களுக்கு தெரியாதது இல்லை. பெத்தவங்களும் கூட இருக்கிறவங்களுமே புரிந்து கொள்ளாமல் ஒதுக்குவதால்தான், அவனை மாதிரி இருக்கிறவங்க வாழ்க்கையே திசைமாறிபோயிடுத்து. இந்தச்சமுதாயத்தின் ஒதுக்கத்தால் தவறான வழியில் ஈடுபட்டு வாழ்க்கையை சீரழித்துக்கொள்கறார்கள். அவர்களும் மானிடப்பிறவிதான் என்பதை என்றுநாம் உணர்கின்றோமோ! அப்பொழுதுதான் அவர்களுக்கு விடிவுகாலம் வரும்”. என்றார். 

னத்தமனதுடன் வீடு வந்து சேர்ந்தபோது, அவர்கள் கண்டகாட்சி இன்னும் நிலைகுலைய செய்தது. 

ரமேசும் வனிதாவும் நெரடியாகவே அவனை திட்டிக்கொண்டிருநதனர். சுரேஷ் திருப்பி பதில்; கூறாமல் அழுதுகொண்டிருந்தான்.; 

“அண்ணா….இல்லைண்ணா…..வந்து….”தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வந்தன, இருவரிடமும் மன்றாடிக் கொண்டிருந்தான் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.