(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 24 - காத்திருந்த காதல் - எஸ்.ஐஸ்வர்யா

This is entry #24 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - தொடக்கத்தில் இருந்து தொடர்க / முடிவுக்கேற்ற கதை

எழுத்தாளர் - எஸ்.ஐஸ்வர்யா

Love waits

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன....இதோ இன்னும் சில நொடிகளில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலிஅணிவித்து கணவனாக போகிறான்....நினைக்கும்போதே சுளீர் என வலித்தது....

சைக் காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சுவர்க்கம் ஆகுமே...”

பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தன மணமகள் பவித்ரா-வின் செவிகளில். மனம் முழுக்க தன்னவன் என்று அவள் இத்துனை நாட்கள் நினைத்து நினைத்து அவனை அணுஅணுவாய் இரசித்து காதல் செய்த ராகவ்-வின் நினைவலைகள். என்றோ ஒருநாள் அவன் அருகில் அமர்ந்து அவன் மனைவி ஆகும் அந்த நொடியை நினைத்து மகிழ்ந்திருந்தவளின் மனம் இன்று சோகக்கடலில் மூழ்கியது...

காரணம் அவள் அருகில் இன்று மணமகனாக அமர்ந்திருப்பது கல்யாண்.. அவன் வேறு யாரும் இல்லை அவளது சொந்த அத்தைமகன். அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் காலத்திலிருந்தே அவனை அவள் நண்பனாகவே ஏற்றாள். அவனை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அவளிடம் துளியுமில்லை. பவித்ராவின் தந்தையும் கல்யாணின் அன்னையும் உடன்பிறந்தவர்கள். இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாய் ஒரே வீட்டில்தான் வசித்துவந்தனர்.

பவித்ரா-கல்யாண் திருமணம் நடைபெற வேண்டுமென்பது அவர்களின் சிறுவயதிலேயே தீர்மானம் செய்யப்பட்ட ஒரு விஷயம். இதைப்பற்றி பவித்ராவிற்கு ஏதும் தெரியாத நிலையில் கல்யாண் அவளை ஒருதலையாக விரும்பவும் துவங்கினான். கல்லூரியில் இருவரும் வெவ்வேறு துறைகளில் படித்து வந்தனர்.

பவித்ரா ஐடி துறையில் மூன்றாம் ஆண்டும், கல்யாண் கணினி துறையில் நான்காம் ஆண்டும் படித்து வந்தனர். கல்யாண் நான்காம் ஆண்டு இறுதியில் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வுசெய்யப்பட்டான். படிப்பு முடிந்தவுடன் பயிற்சிக்காக பெங்களூர் செல்ல வேண்டும். நினைக்கும்போதே வலித்தது அவனுக்கு.

அவன் தன் குடும்பத்தையும், பவித்ராவையும் விட்டுப்பிரிந்ததே இல்லை. சிறுவயது முதலே பவித்ராவும் கல்யாணும் நல்ல நண்பர்கள். அவள் அவனிடம் எதையுமே மறைத்ததில்லை. அவனும் கல்லூரி வகுப்பு நேரம் போக மற்றநேரங்களில், ஏன் இடைவேளை விடும் நேரங்களில்கூட பவியுடனே இருப்பான்.

அவள் எதை விரும்பிக்கேட்டலும் உடனே அவளுக்காக அதை விட்டுக்கொடுத்துவிடுவான். பவித்ராவின்மீது கல்யாணுக்கு இருந்த நேசத்தை, அன்பை, காதலை அவன் வெளிப்படையாக அவளிடம் சொல்லாவிட்டாலும் அவள் அதை உணர்ந்திருப்பாள் என்றே அவன் நினைத்திருந்தான். பல நேரங்களில் நாம் பிறர் மீது வைக்கும் இந்தத்தவறான நம்பிக்கையால் தான் பின்பு நிஜம் புரியும் நேரத்தில் அதை ஏற்க மறுக்கிறது நம் மனம்.

ஆனால் பவித்ராவிற்கு காதல் போன்ற விசயங்களில் என்றுமே விருப்பம் இருந்ததில்லை. அவள் இலட்சியம் எல்லாம் தானே ஒரு பெரிய நிறுவனம் துவங்கி அதில் வரும் லாபத்தில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான். பவித்ராவிற்கு நண்பர்கள் என்று பெரிய வட்டரம் ஒன்றும் இல்லை.

அவளுக்கு மிக நெருக்கமாக இருந்த இரண்டே நண்பர்கள் தன்னுடன் படிக்கும் வித்யாவும், தன் அத்தைமகன் கல்யாணும் தான். எவரும் எளிதில் தன் வாழ்வில் நுழைந்துவிடமுடியாத நிலையில்,

“ சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலியே...நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே...”

அவளை ஈர்க்கத்துவங்கினான் அவன். பெயர் ராகவ். அவனும் அவள் படிக்கும் துறையில் படிக்கும் மாணவன். எப்பொழுதும் அமைதியாக, படிப்பில் கண்ணாய் இருப்பவன். படிக்க கஷ்ட்டப்படும் நண்பர்களுக்கு உதவுபவன். வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் நூலகத்தில் பொழுதைக் கழிப்பவன். அவனுக்கு தந்தை இல்லை என்பதால் குடும்ப பொறுப்பை ஏற்று,தன் அன்னையை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். அவனுக்கு எல்லாமே அவன் அன்னைதான்.

தன் சிறுவயதிலேயே தன் தந்தையை பறிகொடுத்தபின் தன் அன்னை இவன் படிப்பிற்காக பட்ட துயரங்களை பார்த்து வளர்ந்தவன். பலரும் பெண்களை மதிக்காத இந்த உலகத்தில் பெண்கள் மீது பெரிய மரியாதைகொண்டவன் இவன். இவனது குணங்கள், செயல்கள், வீட்டுப்பொறுப்பு, அன்னையிடம் இவன் கொண்ட அன்பு, பெண்களை இவன் மதிக்கும் பாங்கு இவை அனைத்தையும் பவித்ரா இரசித்துக் கொண்டிருந்தாள். தான் அவன் மீது கொண்டுள்ள அன்பை அவனிடம் வெளிப்படுத்த நினைக்கும்போதெல்லாம் தன் இலட்சியம் நிறைவேறியபிறகே அதை வெளிப்படுத்தவேண்டும் என்று ஏதோ ஒன்று அவளைத்தடுத்துக்கொண்டே இருந்தது. அவளும் அவனை தூரத்தில் இருந்தபடியே தன்னவனாக நினைத்து வாழத்துவங்கினாள்.

இருவரும் இறுதி ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். கல்யாணின் படிப்பு முடிந்து பயிற்சிக்காக பெங்களூரு கிளம்ப நேரம் வந்தது. எப்படியாவது அவளிடம் தன்காதலை வெளிப்படுத்திவிட்டு அவள் பதிலுடன் செல்ல வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. ஆனால் முடியவில்லை.

“அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்? பெண் கண்களைப்பார்த்துக் காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன்...”

மனம் முழுக்க குடும்ப நினைவுகளுடனும், பவித்ரா மீது வைத்துள்ள பேரன்புடனும் பெங்களுரு கிளம்பினான். பவித்ராவும் கல்யாணைப்பிரிந்து இருக்க வேண்டியதை நினைத்து மிகவும் வருந்தினாள். தன் நண்பன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவள் வருத்தத்தை நீக்கியது. அனைவரும் அவனை வழி அனுப்பிவைத்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.