(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 31 - என் விழிவழியில் நீ...!!! - வசுமதி

This is entry #31 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்

எழுத்தாளர் - வசுமதி

 Beauty

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த .... மூக்கணாங்கயிறு தானே???”, என்றது.

மூக்கணாங்கயிறு என்று பெயரை  கேட்டவுடன் சடாரென்று நிமிர்த்தேன் நான். இது அவளே தான். பிறரால் மூக்கணாங்கயிறு, மூக்கழகி என செல்லமாய் அழைக்கப்படும் என் தோழி மூதூரெழிலி. எனக்கு மட்டும் மூக்கொழுகி.

மூதூர் என்பது கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். தனது தாய் மண்ணின் மீதிருந்த பற்றினால் அவளது பாட்டனார் அப்பெயரை அவளுக்கு சூடியதாய் அவள் தாய் சொல்லி கேட்டுருக்கிறேன்.

பெயருகேற்ற எழிலி தான் அவள். பிறகு எங்கிருந்து வந்தது மூக்கணாங்கயிறு???

சிறு வயதில் மேக்ஸுக்கும் எனக்கும் எப்பொழுதும் அடிதடி தாங்க. ஒருமுறை மேத்ஸில் நான் பார்டர் கூட தாண்டவில்லை.அதனால் என்னை ஒரு மேக்ஸ் வாத்தியாரிடம் ட்யூசன் சேர்த்தார் என் தாய். அங்கு தான் எனக்கு அறிமுகமானாள் “மை பார்ட்னர் இன் கிரைம்” மூக்கழகி சாரி மூதூரெழிலி.

என்னை ட்யூசன் சேர்த்துவிட்ட என் அன்னையை திட்டிக்கொண்டே வாத்தியார் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்கு ஒரு குட்டி பெண் பச்சை மஞ்சள் பாவாடை சட்டையில் ஏதோ ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பூனை நடை பூட்டு அந்த முற்றம் வைத்த வீட்டின் பின்பக்கம் செல்வதை பார்த்தேன். அந்த பெண் என்ன செய்கிறாள் என ஆர்வம் தாங்காமல் நானும் அவள் பின்னால் சென்றேன்....

அந்த வீட்டின் பின் கட்டில் மாட்டுக் கொட்டகையும் மாட்டிற்கு தேவையான வைக்கப்போர் தாரும் இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவள் அந்த வைக்கப்போர் தாரின் மேல் தாவி ஏறினாள். அங்கு அவள் தன் அடியில் வைத்திருந்த புத்தகத்தை அந்த தாரின் உள்ளில் புதைத்தாள்.

ஆர்வம் தாங்காமல் நான்,"ஏ என்னப்பா பண்ற?",என கேட்டேன்.

என்னை பார்த்து முதலில் அதிர்ந்தாலும் சுதாரித்து கொண்டு,"யார் நீ? எங்க வீட்ல என்ன பண்ற",என்று கேட்டாள்.

நானும் எனது சோக கதையை அதாங்க எனக்கும் மேக்ஸுக்கும் ஆன தள்ளுமுள்ளையும் நான் ட்யூசன் வந்த கதையையும் விம் போட்டு விளக்காத குறையா விளக்கினேன்.

என் கதை முடிந்ததும் என்னை அவள் ஒரு நிமிடம் குறுகுறுவென பார்த்த அவள்...

கண்ணிமைக்கும் நேரத்தில் என் கையை பற்றி தாரின் மேல் ஏற்றி விட்டாள் அவள். என் புத்தகப்பையை பிடிங்கி அதிலிருந்த என் மேக்ஸ் புத்தகத்தையும் அந்த தாரில் புதைத்தாள்.

ஏன்? எதற்கு? என கேட்பதற்குள் அதே வேகத்தில் என்னை தரதரவென தாரிலிருந்து கீழே இறங்கியவள் தன் வேகத்தை தன் வீட்டு முற்றத்தில் குரைத்தாள்.

பின் என்னிடம் ரகசியமாக,"எனக்கு மாரியே உனக்கும் மேக்ஸ் வரமாட்டீங்குதுல, அதான் நம்ம புக்க ஒளிச்சி வெச்சேன்.அப்பா கேட்டா புக்க காணோம்னு சொல்லிரலாம். அப்பதான் படிக்க வேணானு சொல்லுவாங்க. சோ இனிமேல் என் மை பார்ட்னர் இன் கிரைம் நீ தான். பிரண்ட்ஸ்???",என்று என கண்ணடித்து கை நீட்டினாள்.

எனக்கும் அந்த டீலிங் பிடிக்கவே சரி என்று பதிலுக்கு நானும் கைகொடுத்தேன்.

சீப்பை ஒளிச்சி வெச்சா கல்யாணம் நின்னு போயிடும்ங்கர மாரி அடுத்த நாள் தொடப்பக்கட்டையில ஒத கெடைச்சப்போ தன தெரிஞ்சிது எங்க பிளான் படு சொதப்பல்னு.

டியூசனுக்கு அடுத்த  நாள் போய் பாத்தா எழிலோட மூஞ்சி எல்லாம் வீங்கி அந்த நீள மூக்கு இன்னும் கொஞ்சம் நீண்டு கொடைமிளாய் சைஸுக்கு மாறி அதிலிருந்து தன்னிவேர ஒழிக்கிட்டு இருந்துச்சா அத பாரத்த உடனே... அதே அதே... மூதூரெழிலி எனக்கு மூக்கொழுகி ஆகிட்டா...

ழிலி வளர வளர அவளது எலி வாலும் அவளுடன் சேர்ந்து வளர்ந்து கொண்டே போனது. வழக்கம் போல அவ பண்ற அலும்புல எனக்கே தெரியாம என்னைய அவ மாட்டிவிட்ருவா. மாட்டிவிடறவ கூட ஏன் சுத்துனனு கேட்கறீங்கள்??? எல்லாம் விதி... அவ கூட சேர்ந்ததுக்கப்புரம் யாருங்க என் கூட பிரெண்ட்ஷிப் வெச்சுப்பா...???

நாங்க பத்தாவது தப்பி தப்பி படிச்சிட்டிருந்த காலம். அதாவது நயன்த் டூ டென்த் முழாண்டு விடுமுறை காலம். டென்த் அப்படிங்கரதால எல்லா ஸ்கூல் மாதிரி எங்க ஸ்கூலையும் ஸ்பெஷல் கிளாஸ் உண்டு.எழிலி கூட சேர்ந்து நானும் ஸ்பெஷல் கிளாஸ் பல சமயம் கட் அடிப்பதும் உண்டு.

முக்கியமா மேக்ஸ் கிளாஸ்  இருக்கும் போது, க்ளாஸ் கட்  அடிச்சிட்டு நாங்க போர இடம் எங்க ஸ்கூல்க்கு பின்னாடி இருக்கற தோப்பு.

அது ஒரு தெண்ணந்தூப்புங்க. யாரு பண்ண புண்ணியமோ ஒரே ஒரு புளியமரம் மட்டும் நட்டு வெச்சிருந்தாங்க. அந்த தோப்போட புளியங்கா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதுவும் அந்த புளியோட உப்பும் மிளகாய்ப்பொடியும்... ப்பா... செமையா இருக்கும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.