(Reading time: 6 - 12 minutes)

2017 போட்டி சிறுகதை 32 - சண்டைகள் கூட சாரலடா நட்பில்..!! - டோனா

This is entry #32 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - டோனா

Friends

Friends Fight, Argue, Don’t Talk For A While...

But Real Friends Get Through It & Jump right back Like It Never Happened..

க்ஷத்.. தீப்தி.. 5 வருடக்கால நட்பு.. இப்போது இருவரும் B.E படித்துக்கொண்டிருக்கின்றனர்..

மாலை நான்கு மணி..

கேண்டீன்க்கு வெளியில் தன் தோழிகளுடன் வெளியில் வந்த தீப்தி அங்கு உள்ளே நுழைந்த ரக்ஷத்தைப் பார்த்து உற்சாகம் பொங்க கை அசைத்தாள்.. ஆனால் அடுத்த நிமிடம் அவளது உற்சாகம் வடிந்தது.. அவன் அருகில் நடந்து வந்த திவ்யாவைப் பார்த்ததும்..

இவளை கண்ட அவன் பார்த்தும் பார்க்காத வண்ணமாய் அவளைக் கண்டுக்கொள்ளாமல் கேண்டீனுள் நுழைந்தான்.. அதைப் பார்த்ததும் அவள் எரிமலைப் புகையாய் புஸ்புஸ் என மூச்சு விடத்துவங்க அவளின் தோழி அஞ்சனா 'விடு செல்லம்..கால் பண்ணி ஏன் இப்படி பண்ணுனனு அவன்ட்ட கேட்டுக்கலாம்.. ரீசன் இல்லாம கண்டுக்காம போய்ருக்க மாட்டான்.. வா' எனக் கூறி தீப்தியை இழுத்துக்கொண்டு ஹாஸ்டல் சென்றாள்..

அங்கு சென்று கட்டிலில் படுத்தபடி அஞ்சுவிடம் 'ஏன்டி அவன் இப்படி பண்றான்.. பாக்காத மாறி போறானே.. அவனோட ஒவ்வோரு action-க்கும் எனக்கு மீனிங் தெரியும்னு அவனுக்கே தெரியும்ல.. நானும் ஏன் இப்படி இருக்கேன்..?? அவட்ட பேசுறது பிடிக்காதத அவன்க்கு தெரியிற மாதிரி காட்டிக்கிட்டனால தானே இப்போ மறைக்கிறான்..கஷ்டமா இருக்குடி'னு அவள் புலம்பியதைக் காதில் வாங்கினாலும் எதும் பேசாமல் அமர்ந்திருந்தாள்..

அவளுக்குத் தெரியும்.. ஏன் தீப்திக்குமே தெரியும்.. காரணமில்லாமல் ரக்ஷத் கண்டும் காணாமல் போய் இருக்கமாட்டான் என்று.. இருந்தும் ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பியவளைக் கண்டு கட்டுப்படுத்த முடியாமல் உதடுகளின் ஓரத்தில் புன்னகைப் பூத்தது அஞ்சனாவிற்கு..

அவளது புன்னகையைக் கண்டுக்கொண்ட தீப்தி அவளை முறைத்தாள்..

'நா புலம்புறது உனக்கு சிரிப்பா வருதா.. வால அறுத்துறுவேன் பாத்துக்கோ..'

'ஹிஹி.. நா எப்போடீ சிரிச்சேன்.. உனக்கே தெரியுமே... கடவுள் என்ன மட்டும் அழகா ஸ்மைலிங் face உள்ள மாதிரி படைச்சிட்டார்.. கண்டுக்காத டா செல்லம்..'

'ஆரம்பிச்சிட்டியா டப்பா அடிக்கிற வேலைய....'எனக் கூறி தீப்தி அவளை மொத்த துவங்க 'ஒரு நிமிஷம்'என அலறினாள் அஞ்சனா...

' i am very very paavam... இனி நீ புலம்புறப்போ நா என்ன பண்ணனும்னு நீயே சொல்லிடேன்.. எதும் சொல்லாம இருந்தாலும் அடிக்கிற.. உன் மேல தப்புனு சொன்னாலும் அடிக்கிற.. அவன் மேல தப்புனு சொன்னாலும் அடிக்கிற...' 

'அவன் என்ன பண்ணுனான் அவன் மேல தப்புனு நீ சொல்றதுக்கு..??'

'அவன் மேல தப்புனு நா எப்போ சொன்னேன்... ஆள விடும்மா தாயே' என அஞ்சனா சொல்லிவிட்டு ரூம்குள்ள இருந்து வெளியில் ஓடவும் ரக்ஷத் தீப்தியை அழைக்கவும் சரியாக இருந்தது..

வெளியில் சென்ற அஞ்சனா மொபைலை நோண்டியவாறே தீப்தி-ரக்ஷ்த் நட்பை எண்ணி புன்னகைத்தாள்.. 

ஐந்து வருடக்கால நட்பு அது.. எப்படி பேசுகிறோம்,, என்ன பேசுகிறோம் என தெரியாமல் ஆரம்பித்து இன்று மிக அழகாக பூத்துக்குலுங்கும் உன்னத நட்பு அது.. இருவருக்கும் வரும் சண்டைகள் ஆயிரம்.. முடிவில் நிலைப்பது இன்னும் ஆழமாக்கப்பட்ட நட்பே.. அவள் தடுமாறுகையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாதுகாவலனாய் அவன்.. அவன் கலங்குகையில் உலகமே எதிர்த்தாலும் தயங்காமல் தோள் கொடுக்கும் தோழியாய் அவள்... 

ங்கு காரசாரமாய் அலைபேசியில் சண்டை..

'ஹலோ தீப்ஸ்..'

'ம்ம்ம்'

'என்ன பண்ற'

'தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போற'

'கோவமா எதாச்சும்'

'நா ஏன் உன் மேல கோவப்படனும்.. அப்படி கோவப்படறதுக்கு நான் யாரு..??'

'தீப்தி.. இன்னைக்கு பாத்தும் பாக்காத மாறி போனது கோவமா..'

'அப்போ வேணும்னு தானே கண்டுக்காம போன..இப்போ மட்டும் ஏன் பேசுற..??'

'அவ எதாவது சொல்லி நீ hurt ஆய்ட்டனா..?? அதான் அவ உன்ன பாக்கறதுக்கு முன்னாடி அவளையும் கூட்டிட்டு உள்ள போய்ட்டேன்..

'ஓ'

'நானா பேசல தீப்ஸ்.. எல்லார்க்கு முன்னாடியும் வந்து கூப்பிட்டா.. ஸோ அவாய்ட் பண்ண முடியாம போற மாதிரி ஆய்டுச்சு'

'நீ அவட்ட பேசாதனு நா சொன்னதே இல்ல.. அவள்காக என்ன கண்டுக்காம போறது தான் கஷ்டமா இருக்கு'

'ஸாரி'

'ப்ச்.. ஸாரி.. பேச தோணலை.. தோணறப்போ நானே பேசுறேன்.. பட் ஒன்னு.. பாத்துக்கோ நீ எவ்ளோ மாறிருக்கனு... ஆர் யூ தி சேம் ரக்ஷத்.??'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.