(Reading time: 18 - 35 minutes)

2017 போட்டி சிறுகதை 34 - என் காதல் தீ - அனிதா சங்கர்

This is entry #34 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - அனிதா சங்கர்

Hearts

ணமேடையிலே அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த் துளிகள்  எட்டிப் பார்த்தன.....இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்.....

நினைக்கும்போதே  சுளீர் என வலித்தது.....

வன் தலையெழுத்தும் தன்னால் கெடுகிறதே அந்த ஆதங்கம்தான் அவள் கண்களில் கண்ணீராய் எட்டிபார்கின்றன. அவனுக்கு,அவள் கொஞ்சமும் தகுதி அற்றவள்.

எத்தனை தடவை சொன்னாள் இந்த  பாலாவிடம் ஒரு முறையாவது கேட்டானா. எப்படி பட்டவன் அவன்.

இன்றைய யுவதிகளின் மனதில் நிலைக்கொண்டு, தனது குரலால் பலரை கவர்ந்தவன்.

இன்றைய இளைஞர்கள் பலரின் மொபைல்களில் இவன் குரலே இனிமையாய் ஒலிக்கிறது.

அவனை திருமணம் செய்துக்கொள்ள எத்தனையோ பெண்கள் இருந்தும் என்னை என் இவ்வளவு பிடிவாதம் பிடித்து….. அவனது வாழ்கையை ஒரு தகுதியில்லாதவளுடன் ஆரம்பிக்க இவ்வளவு துடிக்குறான் ...

ஒருவேளை அன்று சொன்னனே ஒரு நாளும் இந்த கணக்க தீர்க்கமா விடமாட்டேன் என்று சொன்னனே அதனால் கல்யாணம் பண்ணியிருப்பான இந்த எப்.எம், என்று அவள் ஒரு மனம் யோசிக்க,அந்த சப்ப காரணத்துக்காக

ஒருவன் அதுவும் இவனை போன்றவன், இருக்காது ...என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தபொழுதே இதோ அவன் தாலி கட்டபோகிறான்.

அவளது எண்ணங்களை பொய்யாக்கி

இதோ

உரிமைக்காக ஒத்த முடிச்சு

உறவுக்காக ரெண்டாம் முடிச்சு

ஊருக்காக மூன்றாம் முடிச்சு

மூன்று முடிச்சும் போட்டுவிட்டான். இதோ இவளை பார்க்கிறான். அதில் கொஞ்சம் கூட கவலை இல்லை.அவனது கண்களில் என்ன இருக்கிறது, அந்த கண்களை அவளால் அரை வினாடிகூட பார்க்கமுடியவில்லை. அவ்வளவு ஈர்ப்புக் கொண்டு இருக்கிறது.

அவனது கண்கள் மட்டுமா ,அவனது குரலும்தான். இன்று தமிழகத்தின் புகழ்பெற்ற பின்னணி பாடகர்களுள் இவனும் ஒருவன்.

இவனுடன் இவளது திருமணம் உறுதியான உடன் கண்டிப்பாக அனைவரும் கூறி இருப்பார்கள் இவனுக்கு இப்படி ஒரு பொண்ணு தேவையா என்று...

தன்னவளின் நினைவுகளை உணர்ந்தும் உணராதவனாய் பாலாவோ,இந்த உலகிலே தன்னை விட  சந்தோசமானவன்  இருக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டவனாக அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தான்.

அனைத்தும் முடிந்ததும்  சென்னை செல்ல தயாராகினர் தம்பதிகள் இருவரும்.

அவர்களது சொந்த ஊரில் திருமணம் நடந்தது,அவர்கள் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டிருந்தனர்.

அவளது தாய்-தந்தை,ராகவன்-மைதிலியும், அவனது தாய்-தந்தை லட்சுமி-ராமச்சந்திரனும் விடையனுப்ப தயாராக இருந்தனர்.

இதோ அவன் காரில் ஏறி அமர்ந்து விட்டான்.

“கவலைப்படாம போ மதும்மா.., அவனை முன்னபின்ன  தெரியாத மாதிரி முழிக்குற..,வா உட்கார்..”என்று முன் கதவை திறந்து விட்டான் பிரபா பாலாவின் தம்பி.

 வர்களது கார் புறப்பட்டு விட்டது, பெற்றோர்களை பிரிகிறோம் என்று அவளுக்கு கண்ணீர் வரவில்லை,அவர்களுக்காக முடிந்த வரை அழுது விட்டாளே. அதனால்,அவளுக்கு கண்ணீர் வரவில்லை.

அவன் கார் ஓட்டி வர அவன் அருகில் அமர்ந்திருந்தாள் மது. அவன் அவளையே பார்த்துக்கொண்டு வந்தான்.

தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்தவள் அவனை கவனிக்காதது போல்

காரின் வெளியே வேடிக்கை பார்த்தாள்.

அவளின் இந்த செய்கையை உணர்ந்தவன்,தனது மனமகிழ்ச்சியை வெளிபடுத்த விசில் அடிக்க தொடங்கினான். அதையும் அவள் கவனிக்காமல் இருக்கவே,வானொலியை உயிர்பித்தான்

நதியிருக்கு தலை குளிக்க

விதியிருக்கு மணம் முடிக்க

இணங்கிவிட்டால் சுகமிருக்கு

இதயத்திலே இடமிருக்கு

தொடர்கதை எழுதுவோம் விரைவிலே

தோட்டக்காரன் பூவைப் பாடினால்

பார்க்குமே கேட்குமே....என்று பாடல் ஒலிக்க அவன் அவளை பார்க்க அவனை முரைத்தாள் மது.

அவளது முரைப்பை காணாதவன் போல் அவன் வண்டி ஓட்ட அடுத்து வந்த வரிகள் இவனை பதம் பார்த்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.