(Reading time: 22 - 44 minutes)

2017 போட்டி சிறுகதை 35 - 60லும் காதல் வரும் - VJG

This is entry #35 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - VJG

Old couple

சிலஸில் அனௌன்ஸ்மென்ட் சிறு கதை போட்டி டைட்டிலை பார்த்தவுடன் சட்டென்று இந்த கதை மனதில் உருவானது. ஒவ்வொரு வயதானவர்கள் உள்ளத்திலும் தன் மனைவியின் மீது காதல் இருக்கும், காதல் என்றால் பலவகைப் பட்டது என்று எல்லோருக்கும் தெரியும், இளவயதில் வரும் காதல் வேறு, வயதானவர் ஒவ்வொரு ஆண் மகனுக்குள்ளும் ஒரு முதிர்ச்சி பெற்ற காதல், ஒவ்வொருவருக்கும் அதை வெளிபடுத்திக் கொள்ள தெரியாது, ஆனால் தன் மனைவியின் கையை பிடித்துக் கொண்டு செல்வார்கள், அவர்களுடைய ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும், அவர்கள் பிள்ளைகளிடம் கூட விட்டுத்தரமாட்டார்கள் , பிள்ளைகள் ஏதாவது அம்மாவையோ அப்பாவையோ கூறிவிட்டாள் அவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசுவார்கள், எவ்வளவு வயதானவர்கள், அவர்களுடைய துணையை இழந்து தவிக்கிறார்கள், தங்கள் மனதில் இருப்பவை எல்லாவற்றையும், தன் குழந்தைகளிடம் கூட பகிர்ந்துக்  கொள்ள முடியாது தவிப்பார்கள்.....

ஐம்பது வயதுக்கு மேலான அனைவருக்கும், என் அன்பிற்கும் பாசத்திற்கும், காதலுக்கும் உரிய என் கணவருக்கும் இந்த கதையை காணிக்கையாக்குகிறேன்

இந்த கதை என் கற்பனைக்கு கதையே,இதில் வரும் பெயர்களும் கற்பனை, இதனால் யார் மனதையும் புண் படுத்தும் எண்ணத்தோடு இதை எழுதவில்லை, அப்படி யார் மனதையும் வாட்டியிருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் ..

சிறு கதை போட்டியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும்  என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!!

ணமேடையில் அமர்ந்திருந்தவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன......

ராமன், அவருடைய மனைவி சகுந்தலா மனையில் உட்கார்ந்திருக்க அவர் எதிரே நின்று சகுந்தலாவின் கழுத்தில் தாலியை கட்டினார். இந்த அறுபதாம் கல்யாணம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டு...

தங்களுடைய அறுபதாம் கல்யாணத்தின் புகைப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த ராமன், தன் போக்கில் நினைத்துக் கொண்டிருந்தார், தன் மனைவி தன் மனைவியா? காதலியா?' என்று தனக்குள்ளேயே புன்னகைத்தாள் கொண்டார்

ஏன் தனக்கு இப்படி ஒரு கேள்வி, அவள் என் மனைவி, அவர்கள் கல்யாணம் பெரியவர்கள் ஏற்பாடு பண்ணிய கல்யாணம்தான்....

தன் மனைவி அழகு, குணவதி, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல்  என்று எல்லாவித நற்பண்புகளும் உடையவள், தன் தாய் தந்தையரை கண்ணில் வைத்து பார்த்துக் கொண்டவள், இதையெல்லாம் தங்களுடைய சின்ன வயதில் அவருக்கு தெரியவில்லை, தன் மனைவியை கவனித்துக் கொள்ளவில்லை, எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தார், தன் குழந்தைகளை கவனித்துக் கொண்ட அளவு கூட தன் மனைவியை கவனிக்கவில்லை, அவள் தேவையை, அவள் விருப்பத்தை அறிந்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்பொழுதோ......

அவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள், மூவரும் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். அவர்களின் வற்புறுத்தலினால் இருவரும் மாறி மாறி அமெரிக்காவும், இந்தியாவுமாய் போய் வந்துக் கொண்டிருந்தார்கள்

அவர்கள் மூத்த மகன் பூர்வன், அவன் மனைவி ஸ்ரீதேவி பிரசவத்திற்கு என்று ஆரம்பித்து, அவர்கள் மகள் சுப்ரஜாவின் பிரவத்திற்கு, கவுசல்யாவின் பிரசவம் என்று மாறி மாறி ஒவ்வொருவரும் அவர்கள் தேவைக்கேற்ப அழைப்பார்கள். அவர் மனைவியும், “நம்ம விட்டா நம்ம குழைந்தைகளுக்கு யார் இருக்கா, நாமதான் போய் செய்யணும்”

என்று  சொல்லி விடுவாள்

அப்போது சுப்ரஜாவின் பிரசவத்திற்கு போயிருக்கும் போது காலை எழுந்தது முதல் வேலை, “அம்மா, காபி போட்டுட்டியா?”

“இதோ ஆயின்டிருக்கும்மா”

“சீக்கிரம் மா, அப்பா கூடைல இருக்கற துணியெல்லாம் வாஷர்ல போடுப்பா”

“அவர ஏன் சொல்ற, அதான் நான் இருக்கேன்ல, நான் பார்த்துக்கறேன் எல்லா வேலையும்.”

“அது என்னம்மா, சுரேஷ் செய்யல, ஏன் அப்பா செய்ய கூடாது?”

“அதல்லாமில்லம்மா, அவருக்கு பழக்கமில்ல, அத நான் பணறேன்.”

அவள் தன் பிள்ளைகளிடம் கூட என்னை விட்டுக் கொடுக்க மாட்டாள் , நான் வேலை செய்தால் குறைந்து விடுவேனோ என்று எல்லா வேலையையும் தானே இழுத்து போட்டுக் கொள்வாள் என் அருமை மனைவி

“அம்மாமா….. எனக்கு காப்பில சுகர் வேண்டாம்னு எவ்வளவு தடவ சொல்லிருக்கேன்”

“மன்னிச்சுடும்மா, இனிமே கவனமா பண்றேன்”

குழந்தை பிறந்ததிலிருந்து, வீட்டிற்கு வருவோரும் போவோரும் ரொம்ப பிசி…..

பாவம் சகுந்தலாவின் வேலைக்கு குறைவே கிடையாது.

எப்பவும் சமயலறை, லாண்டரி, பாத்திரங்கள் அலம்பி  டிஷ் வாஷரில் போட்டு, அது முடிந்தவுடன் எடுத்து வைக்கும் வரை அத்தனை வேலையும் அவள் தான் செய்வாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.