(Reading time: 16 - 32 minutes)

ன்னும் எவ்வளவு தான் மாசு படுத்தப்போகிறோம் இயற்கையை!!! பல உயரினங்கள் இன்று அழிந்து விட்டன நம் செயல்களால்!!! இயற்கை சீற்றங்களின் காரணி நம் சுயநலம். ஏன் மனிதன் உணர்வதில்லை. இயற்கையை அழித்துக் கொண்டிருப்பது என்பது நம் கல்லறையை நாமே தோண்டி கொள்வதாகும்”

“கிளைமடாலஜியில் எனது பத்து வருட அனுபவத்திலும் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இன்றைய நிலை தொடர்ந்தால் இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் உலகமே தன் முடிவை சந்திக்க நேரிடும்”

“அந்நிலை ஏற்படாமல் நம்மால் நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும். ஒரு புது ஜனனத்திற்கு வழி காண முடியும்”

“அதைப் பற்றியே இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன்”

“நன்றி டாக்டர் ப்ரகதி. இந்த சம்மிடில் இதற்கான நடவடிக்கைகள் விவாதிக்கப் பட்டனவா?”

“நான் எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் இது போல மீட், கான்பரன்ஸ் மட்டும் நடத்திக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு இருந்தால் எதையும் காப்பற்ற இயலாது. அடிப்படை விழிப்புணர்வு ஒவ்வொரு தேசத்திலும் மக்களிடமும் வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”

“உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகள் நடைமுறை சாத்தியமா”

“சாத்தியம் ஆக வேண்டும் இல்லையெனில் உலகம் முழுவதும் நிரந்தரமாய் சமாதியில் குடியிருக்க வேண்டியிருக்கும்”

“தங்கள் பேச்சில் ஆவேசம் இருக்கிறதே”

“இது ஆவேசம் இல்லை. ஆதங்கம். நம் அனைவருக்குமாக...நம் உலகத்திற்காக”

“நன்றி டாக்டர்... இயற்கையை காப்பற்ற உங்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்”

“நன்றி”

டிசம்பர் 31 ,2019 நேரம்: 09:30

ஹவாய் தீவுகள்

வசர அவசரமா இங்க ஏன் வந்திருகோம்” அந்த பீச் ரிசார்ட்டில் மூங்கிலால் ஆன ஊஞ்சலில் ஆடிக் கொண்டே கேட்டாள் ப்ரகதி.

“டு பை டைம் பேபி” ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தவன் ஒரு கணம் ஆட்டுவதை நிறுத்தி விட்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஹஹாஹா டைம் இஸ் அன் இல்லுஷன் (illusion )”  அவள் சொல்லவும்

“யெஸ் அத நான் உபயோகம் செய்துகிட்டேன்” என்றவன் திடீரென

“பேபி என்ன மன்னிப்பாயா” அவளது இரு கரங்களையும் தனது கைகளுக்குள் வைத்து அவள் முகம் பார்த்து சொன்னான்.

“ஹே என்னாச்சு...ஸ்வாமி என்னடா ஆச்சு” அவள் அவனை செல்லமாய் ஸ்வாமி என்று தான் அழைப்பாள்.

“முதல்ல மீட் எப்படி போச்சு அத சொல்லு” அவன் அவளை எழுப்பி விட்டு தான் அந்த ஊஞ்சலில் அமர்ந்து அவளை மடியில் இருத்திக் கொண்டான்.

தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்து அவன் மார்பில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.

“வி.எம் க்ரூப்ஸ் பத்தி தான் ஒரே பேச்சு. இதுல என் புக் பத்தியும் டிஸ்கஸ் செய்தாங்க”

“உன்னோட புது புக் “எ நியு பர்த் பார் பிளானெட் எர்த்” (A new birth for Planet Earth ) பத்தியா”

“ஹ்ம்ம் ஆமா. ஞாபகம் இருக்கா. மூணு வருஷம் முன்னாடி இதே நாள் நான் ஸ்பெயின் கான்பரன்ஸ்ல ப்ரேக் டவுன் ஆகி ஹெர்குலஸ் லைட் ஹவுஸ் முன்னாடி அழுதுட்டு இருந்தேனே..அன்னிக்கு தானே நாம் மீட் பண்ணினோம்”

டிசம்பர் 31 , 2016  நேரம்: 13:00  

கலிசியா, ஸ்பெயின்

லக நாடுகளின் காலநிலை நிலைப்பாடு பற்றிய கருத்தரங்கு.

“டாக்டர் ப்ரகதி. உங்க கருத்தை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் நீங்கள் அனாவசியமாக மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறீர்கள். 2020 யை உலகம் பார்க்க போவதில்லை என்று நீங்கள் சொல்வது சரியில்லை”

கருத்தரங்கில் கலந்து கொண்ட பல நாட்டு அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு சொல்ல ஆவேசம் கொண்டாள் ப்ரகதி.

“நான் 2013லேயே எச்சரித்தேன். கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உங்கள் முன்னால் இருக்கிறதே. பாருங்கள். போன மாதம் இந்தியாவில் தில்லியில் சுவாசிக்க கூட சுத்தமான காற்று இல்லாமல் எல்லோரும் தவித்தது உங்கள் யாருக்கும் மறந்திருக்காது. சுவாசிக்கும் காற்றுக்கே வழி இல்லையெனில் என் கூற்று எப்படி அர்த்தம் இல்லாதது ஆகும்”

“அது தற்காலிகமாக நடந்த ஒன்று”

“டிக்நிடரிஸ் டேக் மை வொர்ட். இந்த நிமிஷம் நாம் ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் யாராலும் நம்ம உலகத்தையே காப்பாற்ற முடியாது”

“உங்க புக்ல நீங்க குறிப்பிடிருப்பது நடைமுறை சாத்தியம் இல்லை”

“அப்போ இந்த அழிவை தடுப்பதும் சாத்தியம் இல்லை..ப்ளீஸ் பார்டன் மீ” என்றவள் விருட்டென எழுந்து ஹெர்குலஸ் லைட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.