(Reading time: 22 - 44 minutes)

ன் கணவன் வேற்றொரு பெண்ணை காதலித்திருப்பதை அறிந்த எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். சந்தேகம் என்ற விஷம் அவர்கள் வாழ்வையே சீரழித்துவிடும்.

ஆனால் நிர்மலாவோ யோசித்த விதமே வேறு. “என்னவன் ஒரு பெண்ணை இவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்றால் அவரால் நிச்சயம் நம்மை எப்போதும் வெறுக்கமுடியாது. வலியின் ஆழம் தெரிந்தவர்களுக்குத்தான் உறவின் முக்கியத்துவம் தெரியும்” என்பது அவளது நம்பிக்கை. இவ்வாறாக யோசித்தபடியே தன் கணவனை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். இனிதே முடிந்தது பார்ட்டி.

நிர்மலா ஆகாஷை தன் வாழ்வில் ஏற்கத்துவங்கினாள். மறுநாளிலிருந்து மனைவிக்கான கடமைகளை அவள் செய்யத் துவங்க, அவனுக்கு அது எரிச்சலைக் கிளப்பியது. அவள் தன்னிடம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வதாக அவன் நினைக்க அவளிடமிருந்து சற்றே விலகத்துவங்கினான். ஆனாலும் அவனுக்கு அவளைப் பிடிக்கவும் செய்தது. அதை அவன் மனம் ஏற்க மறுத்தது.

நிர்மலா யாரிடமோ ரகசியமாக தொலைபேசியில் உரையாடுவதை அவன் சில தினங்களாக கவனித்து வந்தான். ஆனால் அவளை சந்கேகிக்கவில்லை. ”அது அவளோட பர்சனல்..நாம் யார் அதில் தலையிட..?, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். மறுநாள் ஆகாஷின் பிறந்தநாள்.

எப்போதும் போல அலுவலகத்தில் அவனுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேக் கட் செய்த பின்னர் ஒவ்வொருவராக வந்து அவனை வாழ்த்திவிட்டு கிப்ட் கொடுத்தனர். அந்த நேரத்தில் நிர்மலாவும் அவனை வாழ்த்த அவன் அலுவலகத்திற்கு வந்திருப்பதைக் கண்டவனுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.

நிர்மலா அவன் கைகளைக் குலுக்கி, “விஷ் யு மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே..” என்று வாழ்த்திவிட்டு தான் அவனுக்காக கொண்டுவந்த கிப்டை அவனிடம் நீட்டினாள். அவனும் அதை வாங்கிக்கொண்டான். “ இது ரொம்ப ஸ்பெஷல் கிப்ட்... அனைவரும் பொதுவாகப் பிறந்தநாளன்று  கொடுக்கும் பரிசுப்பொருட்களை அவர்களது ஞாபகமாக நாமிருக்கும் அறையில் அதை பத்திரப்படுத்தி வைப்போம். ஆனால், நான் இன்று கொடுத்த பரிசை நீங்கள் பூஜை அறையில் வைத்தால் நான் மகிழ்வேன்..நீங்கள் தனித்திருக்கும் வேளையில் இதைப்பிரித்துப் பாருங்கள்..” என்று கூறி விடைபெற்றாள்.

அந்த கிப்ட்டை கேபினில் வைத்துவிட்டு ஆழ்ந்த யோசனையில் அமர்ந்தான் ஆகாஷ். அந்த பார்சலுக்குள் என்ன இருக்கும் என்றே அவன் சிந்தனை எல்லாம் இருந்தது. அதைப் பிரிக்க முனைந்த கைகளைத் தடுத்தது அவன் மனம். இரவு வேலை முடிந்து வீடு கிளம்பியவனின் கண்களில் பட்டது அந்த கிப்ட் பார்சல். அதையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் வருகைக்காக ஆவலுடன் நிர்மாலா வீட்டில்  காத்திருக்க, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் வந்தவனைக் கண்ட கண்கள் கலங்கியது. எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்தவன், “பெருசா என்னத்தக் கொடுத்திருக்கப்போறா அவ....? ஓபன் பண்ணித்தான் பார்த்திடலாமே...”, என்று நினைத்தபடியே கிப்ட்டைப் பிரித்தவனின் கண்களில் ஆச்சர்யம்..கூடவே கண்ணீரும்..

ஆம்.....உள்ளே இருந்தது தான் இத்தனை நாட்களாகத் தன் உயிரிலும் மேலாக நேசித்த நித்யாவின் ப்ரேம் செய்யப்பட்ட போட்டோ....கடந்த இரு தினங்களாக அவள் இந்த போட்டோவை ஏற்பாடு செய்வதற்காகத்தான் தொலைபேசியில் உரையாடினாள் என்பது அப்போது புரிந்தது அவனுக்கு.. ”என்னவள் என்னை எவ்வளவு நேசித்திருந்தால் என் முன்னாள் காதலை அவள் ஏற்றிருப்பாள்..?” என்று நினைத்தவனின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

தன்னையும் அறியாமல் ஹாலில் அமர்ந்திருந்த நிர்மலாவை ஓடிச்சென்று இழுத்து அணைத்தபடியே அவன் உதடுகள் “ஐ லவ் யு சோ மச்..” என்று அவள் காதில், அவன் காதலை உரைத்தது. இருவரும் தங்கள் திருமண வாழ்வை இனிதே துவங்கினர்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாதே..

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.....

திருமணம் என்பது மகிழ்வான வாழ்விற்குத் தடையல்ல, துவக்கம் என்பதற்கு இவர்களது வாழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 

This is entry #42 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - எஸ்.ஐஸ்வர்யா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.