(Reading time: 9 - 17 minutes)

2017 போட்டி சிறுகதை 47 - பெண் என்ற பூகம்பம் - அனிதா சங்கர்

This is entry #47 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - அனிதா சங்கர்

Woman

றிக்கெட்டு  ஓடிகொண்டிருந்தது  அந்த கார். அதை ஒட்டிகொண்டிருந்தவன் நிலையோ அதற்கு மேல் இருந்தது. அவனது ஒரே தங்கை இன்று மருத்துவமனையில் இருக்கிறாள் என்றாள், அவனது நிலை சொல்லவா வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக  அவனுக்கு எல்லாமாக இருந்தவள் அவள்தான். ஆம் வருணின் தாய்,தந்தை இறந்தபின் அவனுக்கு அவள் தான் உலகம். ஆனால், இன்று அவளோ ஒரு கருகிய மலராய் மருத்துவமனையில் இருக்கிறாளாம்.

அவனுக்கு வேதனை தாங்க முடியவில்லை. அவனது தங்கை அஷிதா, எவ்வளவு அழகு,எவ்வளவு துருதுருவென இருப்பாள்.

அவனது தந்தை-தாய் இருவரும் நல்ல பணியில் இருக்க எந்த விதமான கஷ்டத்தையும் அனுபவிக்காமல் வளர்ந்த வருணும்,அஷிதாவும் அவளது 17வது வயதில்  அனைத்து துன்பமும் அவர்களை தேடிவந்தது.

அப்பொழுது அஷிதா வகுப்பு பப்ளிக் எக்ஸாம் முடிந்திருக்க,வருணும் பொறியியல் படிப்பு முடித்து ஓரு நல்ல கம்பெனியில் செலெக்ட் ஆகி இருந்தான்

அந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்காகவும்,கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்கும் கொடைக்கானல் சென்றிருந்தனர்.

அப்பொழுது எதிர் பாராமல் நடந்த கார்விபத்தில் தங்கள் கண் முன்னே தாய்,தந்தையை இழந்தனர்.

அதன் பின் அவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு மற்றொருவர் உலகமாயினர். ஆனால்,அவர்களால் அந்த இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  வருண் வேலையில் கவனம் செலுத்தி அதை மறக்க நினைக்க,அஷிதாவின் ரிசல்ட்ம் நன்கு வர அவளை அவன் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அவளை சேர்த்துவிட்டான்.

அவர்கள் இருவரது உலகமும் அவர்களுக்குள் சுருங்கிவிட்டது.

அஷிதாவிற்கு அவளது அண்ணன்தான்  எல்லாம்,அவனுக்காக எதையும் செய்வாள்.அவள் தன் அண்ணன் உருவில் தனது தாயையும்,தந்தையும் கண்டாள்.

அவனுக்கோ அவள்தான் அவனது குழந்தை. அவளது தேவைகளை அவள் சொல்லாமலே பூர்த்தி செய்திடுவான்.

 இப்படி தனது கண்களுக்குள் பொத்தி வைத்து பார்த்துக் கொண்டிருந்த தங்கை இன்று மருத்துவமனையில்...

இன்று காலையில் அலுவகத்தில் இருந்தவனுக்கு அஷிதாவின் தோழி வீணா தொலைபேசி வழியே கூறிய செய்தி அவனது தலையில் ஒரு இடியை இறக்கியது.

அஷிதாவை ஒருவன் ஒரு தலையாய் காதலித்து வந்ததாகவும், ஒரு வாரம் முன் அஷிதாவிடம்  தனது காதலை கூறியதாகவும், அதற்கு அவள் மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் கோபம் அடைந்த அவன் இன்று அவள் முகத்தில் ஆசிட் வீசிவிட்டான்.

இந்த செய்தியை அவள் கூறக்கேட்ட வருணுக்கு இந்த உலகமே இருண்டு போய்விட்டது போல் ஒரு உணர்வு.

இதோ அவனது கார் அந்த மருத்துவமனையை அடைந்திருந்தது.அது அவள் படிக்கும் கல்லூரியின் கீழ் இயங்கும் மருத்துவமனை ஆகும்.

அவன் சென்று இறங்கியதும் அவளது தோழி வீணா அவனை அவள் இருந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றாள்.

அதன் கண்ணாடிவழியே பார்த்தவன் அப்படியே ஒரு பெருங்குரலெடுத்து தரையில் அப்படியே சாய்ந்து விட்டான்.

அவனது அருமை தங்கை, அவளது முகத்தைப் பார்த்தாலே இவ்வுலகம்  மறந்து போகும் அளவுக்கு குழந்தை முகம் உடையவள்,ஆனால் இன்றோ  அவளது முகம் கருகிய ரோஜாவை போல் பார்கவே கொடுரமாக....

இந்த நிலைக்கு தன் தங்கையை  ஆளாக்கியவனை சும்மா விடக்கூடாது, என்று  அவன்  யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே அஷிதா உடன் படிக்கும் மாணவர்கள் ஒருவனை அடித்து இழுத்து வந்தனர்,அவனை பார்த்தவுடனே வருணுக்கு புரிந்து விட்டது அவன்தான் தங்கையின் நிலைக்கு காரணம் என்று, அடுத்த நிமிடம் அவன் மீது சீறிப் பாய்ந்திருந்தான் வருண்.

“டேய்..நாயே,எ... எப்படிடா அவள இப்படி கருக அடிக்க முடிஞ்சது..” என்றுக் கூறி கொண்டே அவனுக்கு அடிமேல் அடிக்கொடுத்துக் கொண்டிருந்தான் .

“டேய்.. அவ என்னோட கொழந்தடா..,அவள போய்...,இந்த உலகத்திலே  எனக்குனு இருக்குற ஒரே ஒரு சொந்தம் அவதான்டா...,அவள  போய்..., அவள எப்படி பொத்தி பொத்தி வளர்த்தேன்...,அவள போய்...”என்று அவனை மூர்க்கமாக அடித்து கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு மெல்லிய கரம் அவனது வலிய கரத்தை பிடித்தது. அந்த கரத்திற்கு உரியவரின் முகம் பார்த்தவன், அடுத்த நொடி அந்த கரத்திற்கு உரியவர் அவனது அணைப்பில் இருந்தார்(ள்).

“குட்டிம்மா...” என்று அழைத்தவன் அவளின் உடல் முழுவதையும் ஆராய்ந்தான்.

“குட்டிம்மா..,உனக்கு ஒன்னும் ஆகலையே..” என்று அவளது முகத்தையே ஆராய்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.