(Reading time: 35 - 69 minutes)

பாரதி அவள் அம்மாவை வாசலோடு இறக்கிவிட்டு, "டைம் ஆயிடுத்தும்மா, நான் இப்படியே கிளம்பறேன், மிச்சத சாயங்காலம் பேசலாம் "

"சரி பார்த்து ஓட்டிண்டு போம்மா "

"சரிம்மா பை"

ந்த வாரக் கடைசியிலேயே வீட்டுக்கு குடியேறிவிட்டார்கள் பாரதியும் அவள் அம்மாவும், வேந்தனுக்கு ரொம்பவும் சந்தோசம், அவனுக்கு மேல் அவன் பிள்ளைகளுக்கு ஏக சந்தோஷம் பாட்டி, ஆன்டி என்று மாடிக்கு கீழுக்கும் அலைந்துக் கொண்டிருந்தார்கள்

பாரதியின் அம்மாக்கும் குழந்தைகளால் பொழுது நன்றாக போயிற்று, சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது... வித விதமாக திண்பண்டங்கள் செய்துக்கொடுத்தார்

"ஆர்த்தி, அர்விந்த் பாட்டிய ரொம்ப தொந்தரவு பண்ண கூடாது, வயசானவங்க இல்ல?"

"இல்லப்பா நாங்க தொந்தரவு பண்ணல, அவங்க தான் ஆசையா எல்லாம் செய்ஞ்சு தறாங்கப்பா"

"தெரியும்டா, இருந்தாலும்...."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி  ...."

"வாங்கம்மா, நீங்க போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே?"

"இல்ல குழந்தைங்க இன்னும் வரலே என்ன ஆச்சுன்னு பார்க்க வந்தேன், மன்னிச்சுங்கோங்க தம்பி நீங்க பேசறதை கேக்க வேண்டியதா போச்சு"

"இல்லம்மா பரவாயில்ல, உங்களுக்கு எதுக்கும்மா தொந்தரவு, பசங்க ரொம்ப படுத்த போறாங்க"

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, ரொம்ப சமத்து பசங்க, எனக்கு இவங்களால நல்லா பொழுது போறது, இவங்க எப்போ ஸ்கூல்லேர்ந்து வருவாங்கன்னு காத்துட்டிருப்பேன்"

"தாங்க்ஸ்மா"

"என்னப்பா இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்லிண்டு, பார்க்க போனா நான்தான் தாங்க்ஸ் சொல்லணும், இவங்களால நான் நல்ல எனர்ஜடிகா  இருக்கேன் இல்லேன்னா பொழுது போகாம இருப்பேன்"

"சரிம்மா"

"அவங்கள நான் கூட்டிட்டு போறேன், நீங்க வந்துட்டீங்கன்னு தெரியாது, டிபன் கொடுத்தனுப்பறேன்"

"ஐயோ அதெல்லாம் வேண்டாம்மா, எனக்கு வழக்கமில்லை"

"வழக்கமில்லன்னா என்னப்பா,இன்னிக்கு சாப்பிட்டு போயேன்"

அவன் வாயை திறக்குமுன், குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் விட்டார் பாரதியின் அம்மா

சிறிது நேரத்தில் பாரதி இறங்கி வந்தாள், கையில் தட்டு, அதை மூடி கொண்டு வந்தாள்

"என்ன சார் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல இருக்கு?"

"ஹ்ம்ம் ஆமாம், பசங்க ஞாபகம், அவங்களோட இருக்கணும் போல இருந்தது அதான் வந்துட்டேன்"

'இப்பல்லாம் உங்க பசங்க, பாட்டி பின்னாடியே இருக்காங்க, பாட்டியும் பேர பசங்களோடவே சரியா இருக்கு போல இருக்கு"

"ஹ்ம்ம் பாட்டிக்கும் பொழுது  போகணும் இல்லியா?பாவம்... "

"சரி உங்க ஒயிப்ப கூட்டிட்டு வரவேண்டியதுதான?" என்று அவனுக்கு டேபிளில் தண்ணி எடுத்து வைத்துக் கொண்டே கூறினாள்

"ஒயிபா?" அவள் என்ன சொல்கிறாள் என்று அவளை திரும்பி பார்த்தான்

அவனை திரும்பிப் பார்க்காமலே "ஆமாம், உங்க ஒயிப்ப தான் சொல்றேன், எவ்வளவு நாளைக்குத்தான் அவங்க ஊர்ல இருப்பாங்க, குழந்தைங்க ஏங்கிப் போயிட மாட்டாங்களா?"

"இல்ல ஏங்க மாட்டாங்க, எதுக்காக ஏங்கனும் நான்தான் இருக்கனே, அம்மாவா, அப்பாவா எல்லாமுமா நான்தான் இருக்கேனே என் பசங்களுக்கு"

"சரி நீங்க என்ன செய்ஞ்சாலும், அம்மாவை மாதிரி வருமா?"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் ஒருத்தன் போறும்"

"ஏன் சண்டை போட்டா, நீங்கதான் விட்டுகொடுக்கக் கூடாதா வேந்தன்"

இந்த ஒரு ஆறு மாதத்தில் அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகி இருந்தனர்... பசங்களும் வெகுவாக அவளிடம் ஒட்டிக் கொண்டனர்"

ஒருநாள் ஆர்த்தி அவளிடம், "ஆன்டி ஒங்கள நான் அம்மான்னு கூப்பிடவா?"

"ஏண்டா கண்ணம்மா? அம்மா வருவாங்க இல்ல அப்ப அம்மாவை கூப்பிடு. ஆமாம், அம்மா எப்போ வருவாங்க, ஊருக்கு போயிருக்காங்களா?"

'தெரியாது ஆன்டி, எப்பவும் அப்பாதான் எங்களை பார்த்துப்பார், வெளிய கூட்டிண்டு போவார்"

"அப்படியா? அம்மா எப்போ போனாங்க"

"அம்மாவை நாங்க பார்த்ததேயில்லை ஆன்டி "

"என்ன சொல்ற?"

'ஆமாம் ஆன்டி அம்மாவை நாங்க பார்த்ததே இல்ல, நாங்க குழந்தைலேர்ந்து அப்பாகிட்டத்தான் இருக்கோம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.