(Reading time: 13 - 25 minutes)

கெஞ்சலுடனும் கொஞ்சலுடனும் சில காலங்கள் கடந்தோடியது... செல்வியுடன் அந்த வீட்டு இளவரசியும் வளர ஆரம்பித்தாள்..

ஒரு புறம் செல்வி கொழுகொழு வென்று வளர்ந்தது என்றால் மறுபுறம் இளவரசி தத்தி தத்தி நடந்து கொண்டும்…, ஏன்..?? எதற்க்கு..?? என்று கேள்விகளை கேட்டு கொண்டும் வீட்டில் உள்ளோரை திணறடித்து கொண்டிருந்தாள்..

"பாட்டி... மாடு முட்ட போடுமா பாட்டி..??",என்று தன் முட்டை கண்களை உருட்டி உருட்டி தனத்திடம் கேட்டாள் இளவரசி.

"மாடு முட்ட எல்லாம் போட்டது பாப்பா... கன்னுகுட்டி தான் போடும்.."

"இல்ல பாட்டி நம்ம செல்வி முட்ட போடாத நா பாத்தேன் அதுவும் ரவுண்டு ரவுண்டா..."

"என்ன பாப்பா கேக்கறே... பாட்டிக்கு புரியல..??"

"அதில்ல பாட்டி... நா நேத்து நம்ம வீட்டு செவுத்துல முட்ட முட்டையா போட்டேனுல... அதே மாதிரி நம்ம செல்வியும் போட்டிருக்கா… "என்று தோட்டத்தில் உள்ள ஒரு குட்டிச்செவுரை சுட்டி காட்டியது அந்த வாலு...

அவள் கூற வருவது என்னவென்று புரிந்தும் தனம் அவளிடம்,"அதுக்கு என்ன பாப்பா பண்றது... அம்மா, செவுத்துல நீ முட்ட வரைஞ்சதுக்கு அடிச்ச மாதிரி அதையும் அடிக்கணுமா..??"

அதை கேட்டு துள்ளி குதித்த இளவரசி தனத்தை பார்த்து கண்களை சிமிட்டியது...

அதை ரசித்த தனம்,"அது முட்டையல்ல பாப்பா.. அது வறட்டி.."

"வறட்டியா..?? அப்படினா..???"

"அது மாட்டோட சாணம்... அது காஞ்ச உடனே தீயை அதில் பற்ற வைத்தோம்னா அது நல்லா பத்திக்கும்... நம்ம அடுப்பை பத்தவைக்க அத தான் பயன் படுத்துவோம்..", என்று அவளுக்கு புரியும் வகையில் விளக்கிய அவர்,"உன்ன அம்மா கூப்படறாங்க போ பப்பு..", என்று பேச்சை மாற்றி அவளை வைத்தார்..

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் வறட்டி காய வைப்பார்கள்...இதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்..ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது..

இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள்.. 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்.

சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என்ற குறிப்பு ஏடுகளில் இருப்பதாக சில சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்..

வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

சரி நாம் நம் கதைக்கு வருவோம்...

மேலும் சில மாதங்கள் கடந்து விட்டது...

ன்று காலை எழுந்தது முதலே ஏதோ ஒன்று தனத்திற்கு உருத்திக்கொண்டிருந்தது... தன் குடும்பத்தில் ஏதோ ஒரு துர்சம்பவம் நடப்பது போல்.. இதே நினைப்போடு மாட்டு கொட்டகைக்கு சென்ற தனத்திற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..

வாயில் நுரையுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது லட்சுமி அதன் அருகில் இருந்த செல்வி தன் தாயை நக்கிக்கொண்டும் அலறல் ஒளி எழுப்பிக்கொண்டும் இருந்தது..... அதனை கண்டு திகைத்த தனம் அலற ஆரம்பித்தார்...

இந்த செய்தியை கேட்டு அங்கு விரைந்த நாட்டு வைத்தியர் லட்சுமிக்கு சிறிது மூலிகை இலைகளை கொடுத்து பார்த்தனர்.. ஆனால் எந்த முன்னேற்றமும் அடையாமல் இவ்வுலகை விட்டு பிரிந்தது அந்த பசு...

லட்சுமி இறந்ததை கேள்வி பட்டு ஊரில் இருக்கும் பலரும் அதனை பற்றி விசாரிக்க வந்தனர்.. கிராமங்களில் ஒரு வீட்டில் கால்நடைகள் மரணமடைந்தால் அதனை பற்றி விசாரிக்க ஊர் மக்கள் வருவார்கள்.. இது கிராமங்களில் நடக்கும் ஒரு வழக்கமாகும்...

ட்சுமி இறந்ததற்கு பலரும் பல கரணம் கூறினர்.. நேரம் சரியில்லை, எதோ செய்வினை வைத்து விட்டார்கள், தெய்வ குற்றம் என பல பல...ஆனால் உண்மையோ வேறு... தடுப்பூசி... ஆம்... நோய் வராமல் இருக்க என பசுவிற்கு அவர்கள் இட்ட ஊசி அதன் உயிரை காவுவாங்கி விட்டது...

தடுப்பூசிகள் பலதும் நம் நாட்டு மாட்டுக்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை..அதற்கு காரணம் அந்த தடுப்பூசிகள் ஜெர்ஸி மாடுகளுக்காக உருவாக்க பட்டது.. இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் மாடுகள் இறக்கின்றன. அந்த லிஸ்டில் இப்பொழுது நம் லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.