(Reading time: 12 - 23 minutes)

"னக்கு வேண்டிய ஒரு நண்பரை வச்சு ராகேஷைப் பத்தி விசாரிச்சதுல ரிசல்ட் நெகட்டிவ்வா வந்திருச்சும்மா..''

"அப்பா "

"ஆமா.. எந்தவிதத்துலேயும் ஓகே சொல்ல முடியாத பையன். சொன்னா நம்ப.."

"வேணாம்பா.. உங்களுக்கு ஓகே இல்லைன்னா அப்புறம் கேள்வியே இல்லை. " -

கண்ணீரை அடக்கிக்கொண்டு மகள் மாடிக்கு போனது அப்பாவுக்கு மட்டுமல்ல சுஜாதாவிற்கும் வேதனையைப் பெருக்கியது.

ரவு சாப்பிடும்போது அம்மாவே தைர்யம் வரவழைத்து மெல்லக் கேட்டாள், "உன் செலக்ஷன்தான் சரியில்லேன்னு ஆயிடுச்சே... அப்பா ஃப்ரண்ட் குருமூர்த்தி சார் பையன் அமெரிக்கால இருக்கான்ல அந்த வரனைப் பார்க்க சொல்லட்டுமா? "

மித்ரா அப்பாவை கோபமாகப் பார்க்க அவரோ, ''அம்மா யோசனை எனக்கு ஓகேதான். சின்ன வயசுலேர்ந்தே நான் பார்க்க வளர்ந்தவன். நீங்களும் ஃப்ரண்ட்ஸ்தானே? இப்பவும் சாட்டிங்க்ல மீட் பண்றியாமே? "

மித்ரா பாய்ந்து இடைமறித்தாள்.

"சான்ஸே இல்லை. அவனை பிடிக்கலேன்னு சொல்ல எனக்கு ஒண்ணரைமாச ஆராய்ச்சில்லாம் வேண்டாம்.. ஒரு நிமிஷம் போதும். அவன், ஒரு வாக்கியம் முழுசா பேசறதுக்குள்ளே ஒன்பது 'ப்ளடி இண்டியா' போடுற பந்தா பேர்வழி. அவனை நீங்கதான் மெச்சிக்கணும்"

அப்புறம் சாப்பிட்டு முடியும்வரை கனத்த மவுனம்தான்.

டிஜிட்டல் விரதத்தை மறந்து அன்றிரவே லேப்டாப் திறந்து இ மெயிலில் அப்பாவின் முடிவை ராகேஷுக்குத் தெரிவித்துவிட்டாள். போன் செய்து கத்தப்போகிறான் என நடுங்கி இருக்கையில் எஸ்.எம்.எஸ் வந்தது 'நோ ப்ராப்ளம் இட் இஸ் ஓகே'. அதன்பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது.

றுநாள் மதிய இடைவேளையில் கல்லூரி கேன்டின் போகையில் செல்போன் சிணுங்கல்! ராகேஷின் போன்கால்!

"ஏய் மித்ரா.. என்னடி நினைச்சுகிட்டே? பீச் பார்க் சினிமான்னு என் கூட சுத்திகிட்டு இப்ப 'என்னை பிடிக்கலை'ன்னு அப்பாவும் பொண்ணுமா காதுல பூ சுத்துனா நான் சும்மா இருப்பேன்னு பார்த்தியா? போடி போ.. போய் ஃபேஸ் புக்கை பாரு. இனி  உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கறேன்.  ஏன்னா,  நீயும் நானும் எப்படி எப்படியோ திரிஞ்ச மாதிரி பிட்டு பிட்டா ஸ்டில்ஸ் அப்லோட் பண்ணி போட்டிருக்கேன்.  அதை பார்த்துட்டு நீயும் உன் அப்பனும் என் கால்ல விழுந்து கதறலேன்னா என் பேர் ராகேஷ் இல்லடி"

படிப்பு, பணம், அந்தஸ்து எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு தனது மனோதைர்யத்தை நம்பி மட்டுமே இவ்வளவு காலமும் தெனாவெட்டாக வாழ்ந்தவள் மித்ரா. 'மனசு சுத்தமாக இருக்கும் பட்சம் அடுத்தவர்களுக்கு தனது ஒழுக்கத்தையோ கற்பையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று வீம்புக்காகவே பனைமரத்தடியில் பால் குடிப்பதுபோலத்தான் இவ்வளவுநாளும் ராகேஷுடன் பழகினாள். நகரத்தின் அத்தனை பொழுதுபோக்கு மையங்களிலும் நூறுதடவைக்கும் மேலே சுற்றித்திரிந்திருக்கிறாள். ஆயிரம் தடவை 'ஐ லைக் யூ ' சொல்லி இருக்கிறாள். ஆனால் ஒருமுறை கூட 'ஐ லவ் யூ' சொன்னதும் இல்லை.. ராகேஷ் அவளைத் தப்பாகத் தொட அனுமதித்ததும் இல்லை. மித்ரா அத்தனை கவனமாக இருந்தும் கடைசியில்  தோற்றுத்தானே போய்விட்டாள். சர்வ அலட்சியமாக அவள் சுழற்றிய காதல் வாள் இப்போது அவளது பெண்மையையே பதம் பார்க்கிறதே! 

கேன்டினில் குழுமியிருந்த வகுப்புதோழிகள் லேப்டாப்பை பார்த்து வியர்க்கையில் அவர்களிடமிருந்து பிரிந்து தோழி ஜெனிலியா ஓடியே வந்தாள்.

"ஏய் மித்ரா உனக்கும் ராகேஷுக்கும் இடையிலே  என்னடி சண்டை? அசிங்கம் அசிங்கமா உன்னை போட்டோ பிடிச்சு நெட்டுல போட்டு இருக்கானே. ஒரு செகண்ட் பார்த்ததுக்கே உடம்பெல்லாம் கூசிப்போச்சு. நீ உடனே அவன் கையை காலை புடிச்சு எல்லாத்தையும் அழிக்க சொல்லு "

மித்ராவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ''நீங்க அதை நம்புறீங்களாடி? நான் எந்த சந்தர்ப்பத்திலேயும் அவன்கூட மோசமா பழகவும் இல்லை.. போஸ் குடுக்கவும் இல்லை''

"ஆனா பார்க்கிறவங்க எல்லோருமே காறி துப்புறமாதிரி உன்னை அசிங்கப்படுத்தி போட்டோ போட்டிருக்கானே.. நீயே வந்து பாரேன்.. "

ஜெனி காட்டிய திசை நோக்கி ஆவேசமாகப் போகையில் மீண்டும் சிணுங்கலோடு போன்கால். இப்போது போன் பண்ணியது கார்த்திகேயன்!

"ஹலோ..."

"ஹலோ"

"மித்ரா இப்பதான் ராகேஷோட எஸ்.எம்.எஸ் வந்து அந்த சைட்டை பார்த்தேன்.. என்ன கொடுமை.. நீ இன்னும் பார்க்கலைல்லே? "

"இல்லை "- கண்ணீர் வழியவே தொடங்கிற்று.

"மித்ரா.. ப்ளீஸ் பார்க்காதே.. பார்த்தா தாங்கமாட்டே. "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.